Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Kumbam Sani Peyarchi 2023 : கும்ப ராசிக்கு ஜென்ம சனி என்ன செய்யும்..?

Manoj Krishnamoorthi September 19, 2022 & 10:20 [IST]
Kumbam Sani Peyarchi 2023 : கும்ப ராசிக்கு ஜென்ம சனி என்ன செய்யும்..?Representative Image.

சாமர்த்திய குணம் நிறைந்த கும்ப ராசிக்கு 17.01.2023 முதல் ஏப்ரல் மாதம் 2025 வரை கும்பத்தில் இருக்கும் சனி பெயர்ச்சி  என்ன மாதிரியான பலன் அளிக்கும்..? நன்மை அளிக்குமா..! இல்லை ஏதேனும் ஆபத்து நிகழுமா..! என்பதைப் பற்றி அறிய எங்கள் பதிவு உதவியாக அமையும். 

சனி பெயர்ச்சி 2023- கும்பம் (Sani Peyarchi Kumbam 2023 To 2025)

)

பொது பலன்: 

கும்ப ராசிக்காரரே 17.01.23 அன்று கும்பத்தில் சனி இடம் பெயர்ச்சியாவது உங்களுக்கு சவாலான தருணமாகும்.  எதிர்பார்த்த உதவி இருக்காது. பணப்பரிவர்த்தனையில் நிதானமாக இருக்க வேண்டும். பயணத்தில் கவனம் வேண்டும். 

குடும்ப  வாழ்க்கை:

திருமணத் தடை ஏற்படும். புதிய வண்டி வாகனங்கள் குடும்ப உறுப்பினர் பெயரில் வாங்குவது நன்மை ஆகும். வீட்டில் நடக்கும் செயல்கள் உணர்ச்சிவசப்படுவதும் பொறுமையாக இருக்க வேண்டும். இந்த சனி பெயர்ச்சி வீட்டில் சில மன வருத்தம் அளிக்கும், எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது நன்மை அளிக்கும்.  

தொழில்: 

தொழில் ஸ்தானத்தில் திருப்தி இருக்காது, பொறுமையாக இருக்க வேண்டும்.  கல்வியில் சிதறல் ஏற்படும், விடாமுயற்சி தேவைப்படும். பெரிய முதலீடு வேண்டாம், பண விஷயத்தில் கவனம் தேவை. 

உடல்நலம்: 

சனியின் 3 மற்றும் 7 இல் இருப்பதால் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சரியான தூக்கம் இருக்காது. வயதான கும்ப ராசிக்காரர்களுக்கு ஆரோக்கிய பிரச்சனை ஏற்படும். 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்