Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இனிமையான நாளாக இருந்தும் இந்த ராசிக்காரரால் அனுபவிக்க முடியாது... 9.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 08, 2022 & 14:30 [IST]
Nalaya Rasi Palan :  இனிமையான  நாளாக இருந்தும் இந்த ராசிக்காரரால் அனுபவிக்க முடியாது... 9.11.2022 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 23 ஆம் நாள் புதன்கிழமை (9.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

துலாம்-  முயற்சி

விருச்சிகம்- தெளிவு

தனுசு- முயற்சி

மகரம்- பக்தி

கும்பம்- உழைப்பு

மீனம்- தாமதம்

நல்ல நேரம்

காலை: 9:15- 10:45 வரை

மாலை: 4:45- 5:45 வரை

Part 1 : மேஷம்- கன்னி ராசிபலன் (1.11.2022, செவ்வாய்)

Nalaya Rasi Palan :  இனிமையான  நாளாக இருந்தும் இந்த ராசிக்காரரால் அனுபவிக்க முடியாது... 9.11.2022 ராசிபலன்! Representative Image

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்று மனது அமைதியாக வைக முயலவும், சில குழப்பங்கள் மனதிற்குள் சுழலும். பணியில் கவனம் குறையும். வியாபாரத்தில் நம்பகத்தன்மை குறையும். பண வரவு எதிர்பார்த்த அளவு இருக்காது. ஆனால் செலவு மட்டும் அதிகமாக இருக்கும். 

குடும்ப வாழ்வில் சந்தோஷம் இருப்பீர், பொறுமையாக இருந்தால் பாதிப்பு இல்லை. காதல் வாழ்வில் லேசாக எடுத்து கொண்டால் உறவில் பாதிப்பு உண்டாகாது.  ஆரோக்கியத்தில் பெரிய தொல்லை இருக்காது. முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை  

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan :  இனிமையான  நாளாக இருந்தும் இந்த ராசிக்காரரால் அனுபவிக்க முடியாது... 9.11.2022 ராசிபலன்! Representative Image

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

உங்களின் தெளிவான மனநிலை இன்று பல சாதனைகள் புரியும். அலுவலகத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். திறமை வெளிப்படும். மாணவர்களுக்கு நண்பர்கள் மூலம் பாராட்டு கிடைக்கும். நிதி நிலை நன்றாக உள்ளது.

குடும்பத்தினரின் ஆதரவு இன்பத்தில் தள்ளும். காதல் வாழ்வில் நல்ல புரிதல் உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. தெளிவு!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்  

அதிர்ஷ்ட எண்: 8

Nalaya Rasi Palan :  இனிமையான  நாளாக இருந்தும் இந்த ராசிக்காரரால் அனுபவிக்க முடியாது... 9.11.2022 ராசிபலன்! Representative Image

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று புதுமையான நாளாக இருக்கும், தொழிலில் ஏற்படும் வளர்ச்சி வேறு மாதிரியான வாழ்வை அளிக்கும். அலுவலகத்தில் சகஜமான சூழல் உண்டாகும். பண வரவு தேவைப்படும். 

குடும்ப வாழ்வில் ஆனந்தம் கூடும். உங்களின் நேர்மையான அணுகுமுறை மற்றவர்களால் பாராட்டப்படும். காதல் வாழ்வில் நல்ல நட்பு இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, நலமாக இருப்பீர். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

Nalaya Rasi Palan :  இனிமையான  நாளாக இருந்தும் இந்த ராசிக்காரரால் அனுபவிக்க முடியாது... 9.11.2022 ராசிபலன்! Representative Image

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று அமைதியான நாளாக இருக்கும். பணியிடத்தில் நல்ல நட்பு இருக்கும். குறித்த வேலையை குழுவாக முடிக்க முயற்சி செய்வீர். செல்வ நிலையில் செலவு அதிகமாகும், ஆனால் செலவை சமாளிக்கும் பணம் கொஞ்சம் இருக்கும். 

குடும்ப வாழ்வில் சில கருத்து வேறுபாடு உருவாகும்.  வெளிப்படையான உரையாடல் நல்ல தீர்வு காணும். உடலில் கழுத்து அல்லது பின்னந்தலை  சார்ந்த பிரச்சனை வரும். பக்தி!

அதிர்ஷ்ட நிறம்:  ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்:  3

Nalaya Rasi Palan :  இனிமையான  நாளாக இருந்தும் இந்த ராசிக்காரரால் அனுபவிக்க முடியாது... 9.11.2022 ராசிபலன்! Representative Image

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

உங்கள் மனதிற்கு விருப்பமான மனிதரின் சந்திப்பு கிடைக்கும். தொழிலில் நல்ல புரிதல் இருக்கும், துணிச்சலாக சில முடிகள் எடுப்பீர். பண வரவு பெரியதாக இருக்காது, ஆனால் அதிகமாக இருக்கும். 

குடும்ப வாழ்வில் சந்தோஷம் அதிகரிக்கும். காதல் வாழ்வில் எந்த முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம், பொறுமையாக இருப்பது நல்லது.  குடும்பத்தினரின் உடல்நலத்தில் கவனம் தேவை. உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்:  கருப்பு 

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan :  இனிமையான  நாளாக இருந்தும் இந்த ராசிக்காரரால் அனுபவிக்க முடியாது... 9.11.2022 ராசிபலன்! Representative Image

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உருவாகும் மன அழுத்தம் , வழக்கமான வேலையிலும் நல்ல ரிசல்ட் அளிக்காது. செய்த பணியை மீண்டும் செய்யும் நிலை ஏற்படும். பணம் அதிகமாக செலவாகும், மன வருத்தம் உண்டாகும். 

குடும்ப வாழ்வில் சந்தோஷம் குறையும், தனிமையில் பொழுதை செலவிடுவீர். மற்ரவர்கள் மீது கோபம் உண்டாகும்.  மாலை பொழுதில் குடும்பத்துடன் இயல்பாக நடப்பீர். உடல்நலத்தில் பிரச்சனை இருக்காது. தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்:  சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்