Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இன்றைய தினம் இந்த 2 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்.. 19.09.22 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi September 18, 2022 & 12:00 [IST]
Nalaya Rasi Palan : இன்றைய தினம் இந்த 2 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்.. 19.09.22  ராசிபலன்..! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி 2 ஆம் நாள் திங்கட்கிழமை (19.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 09:15- 10:15 வரை

மாலை: 7:30- 8:30  வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (19.09.2022, திங்கட்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்கள் தொழிலில் இருந்த சிரமத்தை சரி செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஒரு அனுபவம் வாய்ந்த நபரின் ஆலோசனை கிடைக்கும். தொழில் ஸ்தானம் உயரும். கையில் பணப்புழக்கம் இருக்கும், செலவை சமாளிக்க முடியும்.

காதல் விவகாரம் சிறப்பாக உள்ளது. இன்று உங்கள் திருமண வாழ்வில் சிறப்பான நாளாகும், கணவன் மனைவிக்குள் ஓற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது.  நலம்! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு  

அதிர்ஷ்ட எண்: 3

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மனதில் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டு இருக்கும். அலுவலகத்தில் சிறிய அசௌகரியம் ஏற்படும்.  மாணவர்கள் கல்வியில் கவனம் குறையும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும், ஆனால் பெரிய முதலீட்டில் செலவு செய்ய வேண்டாம். 

குடும்ப வாழ்க்கையில் சிறிய பிரச்சனையை உருவாக்கிவிடுவீர். இல்லற வாழ்வில் அமைதியாக இருப்பதால் பெரிய பிரச்சனை இல்லை. நண்பர்கள் மூலம் நிம்மதி கிடைக்கும். உடல்நலத்தில் அக்கறை வேண்டும். அலைச்சல்! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்  

அதிர்ஷ்ட எண்: 3

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று அலுவலகத்தில் இருக்கும் வேலைகள் உங்கள் திறமையை வெளிப்படுத்தும். மேலதிகாரியிடம் பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் நீங்கள் செய்யும் புதிய முயற்சிக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். சுபகாரியம் சம்பந்தமான இடத்தில் உங்கள் முக்கியத்துவம் அதிகமாக இருக்கும். செல்வ நிலை நன்றாக இருக்கும். 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், குடும்பத்தினருடன் சந்தோஷமாகப் பொழுதை கழிப்பீர். நண்பர்களுடன் நேரம் ஒதுக்க முடியும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, உணவு பழக்கத்தில் மட்டும் கவனம் வேண்டும். முயற்சி! 

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 2

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உங்கள் தொழிலில் இன்று போட்டிகள் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு இன்று தங்கள் பொருளைக் கைமாற்ற சற்று சிரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் கால தாமதம் ஏற்படும். செல்வ நிலையில் எதிர்பார்த்த வரவு இருக்காது.  

வீட்டில் சிறிய அமைதியற்ற சூழல் இருக்கும், கணவன் மனைவி உறவில் மனம் திறந்து பேச வேண்டியது அவசியமாகும். குடும்பம் சார்ந்த செலவுகள் மனதில் குழப்பத்தை விதைக்கும்.  ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும். எதிர்ப்பு! 

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்:  9

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு மனதிற்கு நிறைவான நாளாக இருக்கும், சந்தோஷத்தின் உச்சத்தில் இருப்பீர். இவ்வளவு நாட்களாக இருந்த தடைகள் படிப்படியாகக் குறையும். உங்களின் புத்திசாலித்தனமான நடவடிக்கை தொழிலில் நல்ல லாபம் அளிக்கும். போதுமான அளவு பணம் கையில் இருக்கும், ஆனால் செலவு அதிகமாக இருக்கும்.

குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர். காதல் வாழ்வில் வெளிப்படையான பேச்சு நல்ல புரிதலை அளிக்கும். உடல்நலத்தில் கால் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும். நிறைவு! 

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்று உங்களின் வேலைகள் சுமுகமாக நடக்கும், நிதி சார்ந்த பிரச்சனை இல்லாமல் வியாபாரம் வளர்ச்சி கொள்ளும். உத்தியோகத்தில் பொறுமையாக இருப்பதால் எந்த இடையூறு இல்லாமல் முழுமூச்சாக பணியாற்ற முடியும். கணமான பண வரவு உண்டு.

வீட்டில் அன்பு அதிகரிக்கும், திருமண வாழ்க்கை அமைதியாக நகரும்.  தந்தை வழி உறவால் ஆதாயம் உண்டு. கல்வி ஸ்தானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.  ஆரோக்கியத்தில் அடி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை வரக்கூடும். நன்மை! 

அதிர்ஷ்ட நிறம்:  அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்