Tue ,May 28, 2024

சென்செக்ஸ் 75,170.45
-220.05sensex(-0.29%)
நிஃப்டி22,888.15
-44.30sensex(-0.19%)
USD
81.57
Exclusive

தொழிலில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்..! வேலை மாற்றத்தால் இது உங்களுக்கு நடந்தே தீரும்.. | Magaram Rahu Ketu Peyarchi Palan 2023 in Tamil

Gowthami Subramani Updated:
தொழிலில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்..! வேலை மாற்றத்தால் இது உங்களுக்கு நடந்தே தீரும்.. | Magaram Rahu Ketu Peyarchi Palan 2023 in TamilRepresentative Image.

நவக்கிரகங்களில் நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் சொல்லப்படும். ராகு - கேதுவுக்கு என்று தனி வீடுகள் இல்லை. இந்த கிரகங்கள் எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டின் அதிபதியாக கருதப்படுவர். 'கரும்பாம்பு' எனும் 'ராகு' போக காரகன் ஆவார். 'செம்பாம்பு' எனும் 'கேது' மோட்ச காரகன் ஆவார். இந்த இரண்டு கிரகங்களும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்து சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பார்கள். அந்தவகையில், 2023 - 2025 க்கான ராகு-கேது பெயர்ச்சி வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள் என்பதால் இந்த ராகு-கேது பெயர்ச்சி மகர ராசியினருக்கு எந்தமாதிரியான பலன்களை கொடுக்கப்போகின்றது என்பதை பார்க்கலாம்.

தொழிலில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்..! வேலை மாற்றத்தால் இது உங்களுக்கு நடந்தே தீரும்.. | Magaram Rahu Ketu Peyarchi Palan 2023 in TamilRepresentative Image

மகரம் ராகு - கேது பெயர்ச்சி பலன் 2023-2025:

மகர ராசி நேயர்களே உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது சிறு பிரச்சனை என்றாலும் உடனே மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள மருத்துவ காப்பீடுகள் எடுப்பது உத்தமம். பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது. அதிக முதலீடு கொண்ட செயல்களை தற்போதைய காலத்தில் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு செயலிலும் கையிருப்பைக் கொண்டு செலவு செய்வதும், கடன் வாங்குவதை முடிந்தவரை தவிர்ப்பதும் நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அழகிய குழந்தையை பெறும் வாய்ப்பு உண்டாகும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே நீங்கள் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில் பிரச்சனைகள் இருக்கும். வேலையாட்கள் சரியாக ஒத்துழைக்க மாட்டார்கள் என்பதால் நீங்கள் எதிலும் முன் நின்று செயல்பட்டால் மட்டுமே தொழிலில் அன்றாட செயல்களை சிறப்பாக செய்ய முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால், அவர்களை சார்ந்து செயல்பட்டால் அனுகூலங்களை அடைய முடியும். அதிக முதலீடு கொண்ட செயல்களை தள்ளி வைப்பது நல்லது. அப்படி செய்ய வேண்டும் என்றால், அதனை உங்கள் பெயரில் செய்யாமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது. தற்போது இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி, தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சரியாக பயன்படுத்தினால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, வேலை பளு காரணமாக உடல் அசதி ஏற்படும். நீங்கள் எடுக்கும் பணிகளை சற்று தாமதமாக செய்து முடித்தாலும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் உழைப்பிற்கான போதியம் தற்போது கிடைக்காவிட்டாலும், பணியில் மதிப்பும் மரியாதையும் இருக்கும். சக ஊழியர்களை சற்று அனுசரித்துச் சென்றால் பணியில் நிம்மதியுடன் இருக்க முடியும். முடிந்தவரை கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் எந்த பணியிலும் முனைப்புடன் செயல்பட்டால் நல்ல வளர்ச்சியை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் மன நிம்மதி குறையும். தேவையற்ற அலைச்சல் மன அழுத்தங்கள் இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாக கூடிய காலம் என்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. தூர பயணங்களை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கடினமாக உழைத்தால் தான் நற்பலனை அடைய முடியும். பணவரவுகள் சற்று சாதகமாக இருக்கும் என்றாலும், எதிர்பாராத பீன் செலவுகள் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுபவப் பலன் உண்டாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும் .நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களை பெற்றார் உறவினர்கள் தவறாக எடுத்துக் கொள்வார்கள். எடுக்கும் முயற்சிகளில் தலைகளுக்கு பின்பு வெற்றி பெற முடியும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு சுப செலவுகளை சந்திப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் வேலைப்பளு அதிகமாக இருக்கும் என்பதால் மன நிம்மதியற்ற நிலை ஏற்படும். உடல்நிலை காரணமாக எதிலும் திறம்பட செயல்பட முடியாத நிலை ஏற்படும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பதும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடம் மாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வரவேண்டிய வாய்ப்புகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் மேன்மைகள் அடைவீர்கள் என்றாலும், அதிக அலைச்சல் இருக்கும். தொழில் சிறப்பாக இருந்தாலும் மறைமுக பிரச்சனைகளால் அனைத்து விஷயத்திலும் அதிக அக்கறை எடுக்க வேண்டி இருக்கும். உடன் இருப்பவர்கள் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பையும் பெற முடியாமல் போகும். தூர பயணங்களை தவிர்க்கவும்.

அரசியல்வாதிகளுக்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதால் உங்கள் பதவிக்கு பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வாக்குறுதிகள் கொடுக்கும்போது சிந்தித்து செயல்படவும். பத்திரிக்கை நண்பர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது உத்தமம்.

விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். நவீன முறைகளை கையாண்டு விளைச்சலை பெருக்க முடியும். இருந்தாலும் வேலைக்கு தக்க சமயத்திற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால் செய்யும் பணியில் சுமை ஏற்படும். எதிலும் நீங்களே முன் நின்று செயல்பட வேண்டிய நிலைக்கு இருப்பதால் ஓய்வு இல்லாமல் உழைக்க வேண்டியிருக்கும். பங்காளிகளை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது தேவையற்ற பிரச்சனைகளில் தலைகீழாமல் இருப்பது நல்லது. பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். குடும்ப பிரச்சினைகளை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ளாத இருக்கவும். மன வயதை அடைந்தவர்களுக்கு நல்ல பலன் அமைந்து முயற்சி ஏற்படும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றவாறு இருக்கும். மாணவ மாணவிகளுக்கு மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை கொண்ட காலம் இது. எனவே முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. கல்வி ரீதியாக மேற்கொள்ளும் எந்த ஒரு காரியத்திலும் தடைகளுக்குப் பின் அனுகூலம் ஏற்படும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். திறனை வெளிப்படுத்தும் போட்டிகளின் போது சற்று கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண்: 5, 6, 8

அதிர்ஷ்ட நிறம்: நீளம் பச்சை

அதிர்ஷ்ட கிழமை: சனி புதன்

அதிர்ஷ்ட கல்: நீலக்கல் 

பரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது அம்மனுக்கு குங்குமபிஷேகம் செய்வது கருப்பு ஆடைகள் கைக்குட்டை போன்றவற்றை பயன்படுத்துவது விநாயகரை வழிபடுவது செவ்வரளி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, கருப்பு எள் வண்ணமயமான போர்வை போன்றவற்றை தானம் தருவது மிகவும் நல்லது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்