Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும் | May Month Rasi Palan 2023 Meenam in Tamil

Priyanka Hochumin Updated:
உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும் | May Month Rasi Palan 2023 Meenam in TamilRepresentative Image.

மே மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மே மாதத்தில் மீனம் ராசியில் சூரியன், குரு, ராகு மற்றும் புதன், மிதுனத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், மே மாதம் 03 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியும், மே 11 ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சியும், மே 16 ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியும், மீண்டும் மே 31 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியும் நிகழவிருக்கிறது. இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுவதால் மே மாதத்தில் மீன ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும் | May Month Rasi Palan 2023 Meenam in TamilRepresentative Image

மீன ராசியினருக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களின் ராசிநாதர் தன ஸ்தானத்தில் இருப்பதால் தனவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் தடை பட்டுக்கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வீடு, மனை வாங்கும் அமைப்பு அமோகமாக உள்ளது. குழந்தை பாக்கிய நீண்ட நாட்களாக இல்லாமல் காத்திருப்பவர்களுக்கு கூடிய விரைவில் குழந்தை பிறகும் அம்சம் உள்ளது. பல நாட்களாக வந்து சேராத பணம் கூட உங்களை வந்து சேரும்.

கணவன் மனைவி இடையே பல நாட்களாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வேலை தேடுபவராக இருந்தால் இந்த மே மாதத்தில் முயற்சிக்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும். வழக்கு ஏதேனும் நீண்ட நாட்களாக முடியாமல் இருந்தால் உங்களுக்கு சாதகமாக அமையும். கடன் சுமைகள் குறையும். உடல் ரீதியான தொந்தரவு இருந்திருந்தால் அதில் இருந்து மீண்டு வருவீர்கள். இந்த மாதத்தில் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் வந்து சேரும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்