Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

தேவையில்லாத செலவுகளை குறைக்கலைனா பெருசா அடி வாங்கப்போறீங்க | May Month Rasi Palan 2023 Kumbam in Tamil

Priyanka Hochumin Updated:
தேவையில்லாத செலவுகளை குறைக்கலைனா பெருசா அடி வாங்கப்போறீங்க | May Month Rasi Palan 2023 Kumbam in TamilRepresentative Image.

மே மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மே மாதத்தில் கும்பம் ராசியில் சூரியன், குரு, ராகு மற்றும் புதன், மிதுனத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், மே மாதம் 03 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியும், மே 11 ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சியும், மே 16 ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியும், மீண்டும் மே 31 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியும் நிகழவிருக்கிறது. இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுவதால் மே மாதத்தில் கும்ப ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

தேவையில்லாத செலவுகளை குறைக்கலைனா பெருசா அடி வாங்கப்போறீங்க | May Month Rasi Palan 2023 Kumbam in TamilRepresentative Image

கும்ப ராசிக்காரர்களுக்கு, உங்க ராசிநாதரின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் உங்களுக்கு இந்த மாதம் சற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதே போல சனி மற்றும் ராகுவின் பார்வை படுவதால் வண்டி வாகனத்தில் செல்லும் போது அதிக கவனம் வேண்டும். உங்களின் சகோதரரையும் வாகனத்தில் செல்லும் போது கவனமாக செல்ல அறிவுறுத்துங்கள். நீங்கள் செய்து முடிக்க நினைக்கும் விஷயங்கள் சற்று காலதாமதமாக முடியும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு திருமணம் கை கூடி வரும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

உங்கள் மீது சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தந்தை வழியில் இருந்து வர வேண்டிய சொத்து உங்களுக்கு சாதகமாக அமையும். இதுவரை இல்லாத அளவிற்கு லாபம் நன்றாக இருக்கும். ஆனால் அதற்கு மீறிய செலவு உங்களுக்கு ஏற்படும். எனவே, தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பது உத்தமம். குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது. மேலும் மே மாதத்தில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் கேட்டது நீங்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்