Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உறுதி.. | May Month Rasi Palan 2023 Mesham in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உறுதி.. | May Month Rasi Palan 2023 Mesham in TamilRepresentative Image.

மே மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மே மாதத்தில் மேஷம் ராசியில் சூரியன், குரு, ராகு மற்றும் புதன், மிதுனத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், மே மாதம் 03 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியும், மே 11 ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சியும், மே 16 ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியும், மீண்டும் மே 31 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியும் நிகழவிருக்கிறது. இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுவதால் மே மாதத்தில் மேஷ ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உறுதி.. | May Month Rasi Palan 2023 Mesham in TamilRepresentative Image

ராசியிலேயே நான்கு கிரகங்களின் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியத்தில் இருந்த வந்த பிரச்சனைகள் நீங்கும். பொருளாதாரத்தில் இருந்த நெருக்கடிகள், இழுபறிகள் விலகி வளர்ச்சி ஏற்படும். கடன் தொல்லையில் இருந்து விடுதலை உண்டு. மனதில் ஏற்பட்ட வீண் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். புதிய நபர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இதனால் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சிலருக்கு வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். புதிய தொழில் தொடங்க நல்ல மாதம்.

கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட திடீர் பிரச்சனைகள் நீங்கி, மேன்மை உண்டாகும். குடும்ப பிரச்சனையால் பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேர்வார்கள். நெருங்கிய நண்பர்களே துரோகம் செய்திருப்பார்கள். ஆனால், இந்த மாதத்தில் நல்ல புரிதல் ஏற்பட்டு மீண்டும் உங்களை தேடி வருவார்கள். காதல் திருமணம் கைகூடி வரும். குலதெய்வ அனுகிரகம் கிடைக்கும். மாணவர்களுக்கு சிறப்பான மாதம். தாய்வழி பந்தங்களால் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆசைகள் நிறைவேறும். ஒருசிலருக்கு இம்மாதத்தின் நடுப்பகுதிக்கு பிறகு அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை மாற்றம் செய்ய விரும்புவோர் தாராளமாக செய்யலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்