Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

எது செஞ்சாலும் யாரிடமும் சொல்லாதீங்க அதுவே உங்களுக்கு ஆபத்தாகலாம் | Chithirai Month Rasi Palan 2023 Meenam in Tamil

Priyanka Hochumin Updated:
எது செஞ்சாலும் யாரிடமும் சொல்லாதீங்க அதுவே உங்களுக்கு ஆபத்தாகலாம் | Chithirai Month Rasi Palan 2023 Meenam in TamilRepresentative Image.

சித்திரை மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: சித்திரை மாதத்தில் மீனம் ராசியில் ராகு, சூரியன் மற்றும் புதன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், குரு பகவான் சித்திரை மாதம் 08 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும், சித்திரை 19 ஆம் தேதி சுக்கிர பகவான் ரிஷபத்திலிருந்து மிதுனத்திற்கும், சித்திரை 27 ஆம் தேதி செவ்வாய் பகவான் மிதுனத்திலிருந்து கடகத்திற்கும் பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் சித்திரை மாதத்தில் மீனம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

எது செஞ்சாலும் யாரிடமும் சொல்லாதீங்க அதுவே உங்களுக்கு ஆபத்தாகலாம் | Chithirai Month Rasi Palan 2023 Meenam in TamilRepresentative Image

சித்திரை மாத ராசிபலன் 2023 மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு மூக்கு, தொண்டை, இடது காது சார்ந்த இடங்களில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் முக்கியமாக குடும்பத்தில் மிக முக்கியமான நபர் உங்களை விட்டு பிரியக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதாவது வேலை அல்லது மற்ற காரணங்களுக்காக வெளியே செல்லும் அமைப்பு உள்ளது. சித்திரை மாதத்தில் அனாவசிய செலவுகள் ஏற்படலாம்.

சொந்தக்காரர்கள் அடிக்கடி வந்து செல்வது அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்காக என்று செலவுகள் செய்யும் நிலைமை ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுள் யாரேனும் ஒருவருக்கு உடல் நிலையில் தொந்தரவு ஏற்படலாம். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை மற்றவர்களிடம் சொல்லாமல் இருந்தால் எல்லாமே வெற்றிகரமாக அமையும். முதலீடு செய்பவராக இருந்தால் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

வழிபாடு - மீனாட்சி அம்மனை வழிபடுவதால் வரும் துன்பங்கள் விலகி சந்தோசமாக இருப்பீர்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்