Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விபரீத ராஜயோகம் தான்.. இருந்தாலும் புதிய நபரால் பிரச்சனை வரும்.. | May Month Rasi Palan 2023 Rishabam in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
விபரீத ராஜயோகம் தான்.. இருந்தாலும் புதிய நபரால் பிரச்சனை வரும்.. | May Month Rasi Palan 2023 Rishabam in TamilRepresentative Image.

மே மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மே மாதத்தில் மேஷம் ராசியில் சூரியன், குரு, ராகு மற்றும் புதன், மிதுனத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், மே மாதம் 03 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியும், மே 11 ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சியும், மே 16 ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியும், மீண்டும் மே 31 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியும் நிகழவிருக்கிறது. இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுவதால் மே மாதத்தில் ரிஷப ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

விபரீத ராஜயோகம் தான்.. இருந்தாலும் புதிய நபரால் பிரச்சனை வரும்.. | May Month Rasi Palan 2023 Rishabam in TamilRepresentative Image

இந்த மாதத்தில் கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி கொடுக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த இழுபறிகள் நீங்கும். புதிய வாடக்கையாளர்கள் தருவார்கள். இதனால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடிக்கொண்டிருக்கும் ரிஷப ராசியினருக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். திருமண முயற்சிகள் கைக்கூடி வரும். பூர்வீக சொத்துக்கள் உங்களை தேடி வரும். தம்பதிகளுக்குள் இருந்த மனக்கசப்பு விலகும்.

திடீர் பணவரவுக்கு அதிகளவு வாய்ப்புள்ளது. ஒரு சிலர் கட்டின வீட்டை விலைக்கு வாங்குவீர்கள். மருத்துவ செலவுகள் நீங்கும். குடும்பத்தில் இருந்த பொருளாதார பிரச்சனைகள் விலகி, சேமிப்பு மிகும். இருப்பினும், உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். வண்டி, வாகனத்தில் செல்லும் போது பொறுமை ரொம்ப முக்கியம். தொழிலில் பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும், கடன் வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது. புதிய நபர்களால் நட்பு வட்டாரத்தில் பிரச்சனை தலைதூக்கும் உஷார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்