Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நிறைய மாற்றங்களை சந்திக்க ரெடியா இருந்துக்கோங்க.. | May Month Rasi Palan 2023 Midhunam in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
நிறைய மாற்றங்களை சந்திக்க ரெடியா இருந்துக்கோங்க.. | May Month Rasi Palan 2023 Midhunam in TamilRepresentative Image.

மே மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மே மாதத்தில் மேஷம் ராசியில் சூரியன், குரு, ராகு மற்றும் புதன், மிதுனத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், மே மாதம் 03 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியும், மே 11 ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சியும், மே 16 ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியும், மீண்டும் மே 31 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியும் நிகழவிருக்கிறது. இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுவதால் மே மாதத்தில் மிதுன ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

நிறைய மாற்றங்களை சந்திக்க ரெடியா இருந்துக்கோங்க.. | May Month Rasi Palan 2023 Midhunam in TamilRepresentative Image

கடந்த இரண்டு வருடங்களாகவே சனிபகவானால் படாதுபாடுபட்ட மிதுன ராசியினருக்கு இனி விடிவுகாலம் என்றே சொல்லலாம். நிறைய மாற்றங்கள் நிகழப்போகிறது. குறிப்பாக பணம் சம்பந்தமான பிரச்சனைகள் முற்றிலும் விலகும். வியாபாரத்தில் இருந்த மந்தத்தன்மை நீங்கி, திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். சேமித்து வைக்கும் அளவிற்கு பணவரவு உண்டு. ஆசைகள் நிறைவேறும். முடிந்த வரை தைரியத்தோடு போராட முயற்சி செய்யுங்கள். நல்ல பலன் காத்திருக்கிறது. புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட குலதெய்வ அனுகிரகம் கிடைக்கும். பிரிந்த காதலர்கள் ஒன்று சேர்வார்கள். காதல் திருமணம் வெற்றி. 

சகோதர, சகோதரிகளின் ஆதரவு பெருகும். எதிரியாக இருந்த சொந்தபந்தங்கள் பகையை மறந்து மீண்டும் ஒன்று சேர்வார்கள். கூட்டுத்தொழில் செய்ய விரும்புவோர் இந்த காலக்கட்டத்தில் தாராளமாக ஆரம்பிக்கலாம். விரையங்களே இருக்காது. சிலருக்கு வண்டி, வீடு வாங்க யோகம் உண்டு. தாய்வழி பூர்வீக சொத்து கைக்கு வரும். எதிர்கள் விலகுவார்கள். மாணவர்களுக்கு சிறப்பான காலக்கட்டம். நண்பர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். இருப்பினும், மே மாதம் 11 ஆம் தேதிக்கு பிறகு பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்