Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நண்பர்களுடன் கூட்டுத்தொழில் செய்பவரா நீங்க? அப்ப கண்டிப்பாக இத பண்ணியே ஆகணும்.. | May Month Rasi Palan 2023 Kadagam in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
நண்பர்களுடன் கூட்டுத்தொழில் செய்பவரா நீங்க? அப்ப கண்டிப்பாக இத பண்ணியே ஆகணும்.. | May Month Rasi Palan 2023 Kadagam in TamilRepresentative Image.

மே மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மே மாதத்தில் மேஷம் ராசியில் சூரியன், குரு, ராகு மற்றும் புதன், மிதுனத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், மே மாதம் 03 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியும், மே 11 ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சியும், மே 16 ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியும், மீண்டும் மே 31 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியும் நிகழவிருக்கிறது. இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுவதால் மே மாதத்தில் கடக ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

நண்பர்களுடன் கூட்டுத்தொழில் செய்பவரா நீங்க? அப்ப கண்டிப்பாக இத பண்ணியே ஆகணும்.. | May Month Rasi Palan 2023 Kadagam in TamilRepresentative Image

சனி பகவான் ராசிக்கு 2ஆம் இடத்தை பார்ப்பதால், குடும்பத்தில் கவனமாக இருக்க வேண்டும். கடன் கொடுப்பதையும், கடன் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். யாரிடம் பேசும்போதும் பேச்சில் பொறுமையும், கவனமும் தேவை. கணவன் - மனைவி இடையே புதிய பிரச்சனை தலைத்தூக்கும். எனவே, விட்டுக்கொடுத்து போவது சிறந்தது. வருமானம் வந்தாலும் செலவும் கூடவே இருக்கும். தொழில், வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். புதிய நபர்களால் நண்பர்களுடன் பிரச்சனை வரலாம். மேலும், நண்பர்களுடன் கூட்டுத்தொழில் செய்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மே 11 ஆம் தேதிக்கு பிறகு முன்கோபத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவரசமாக முடிவை எடுப்பது செய்யவே கூடாது. 

இருப்பினும், 10ம் இடத்தில் இருக்கும் சூரியன் பகவான் சில நன்மைகளை கொடுக்கப்போகிறார். புதிய தொழில் தொடங்குவோரிக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எதிர்பாரா பணவரவுக்கு வாய்ப்பு இருக்கிறது. திருமண முயற்சிகளில் ஈடுபவர்களுக்கு அனுகூலம் கிட்டும். ஒரு சிலருக்கு தடைபட்ட திருமணம் மீண்டும் நல்ல முறையில் நடந்து முடியும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். கடன் தொல்லை குறையும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக அமையும். குடும்பத்தில் உங்க பேச்சிக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். ஒருசிலக்கு வேலை இடமாற்றம் உண்டாகும். தாய்வழி பந்தங்களுடன் இருந்த கருத்துவேறுபாடு விலகும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்