Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீங்கள் எது செய்தாலும் அது உங்களுக்கு சாதகமாக இருக்கும் | May Month Rasi Palan 2023 Kanni in Tamil

Priyanka Hochumin Updated:
நீங்கள் எது செய்தாலும் அது உங்களுக்கு சாதகமாக இருக்கும் | May Month Rasi Palan 2023 Kanni in TamilRepresentative Image.

மே மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மே மாதத்தில் கன்னி ராசியில் சூரியன், குரு, ராகு மற்றும் புதன், மிதுனத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், மே மாதம் 03 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியும், மே 11 ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சியும், மே 16 ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியும், மீண்டும் மே 31 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியும் நிகழவிருக்கிறது. இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுவதால் மே மாதத்தில் கன்னி ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

நீங்கள் எது செய்தாலும் அது உங்களுக்கு சாதகமாக இருக்கும் | May Month Rasi Palan 2023 Kanni in TamilRepresentative Image

மே மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு தொட்டது தொழங்கக்கூடிய காலமாக அமையும். குரு மற்றும் ராகுவின் சேர்க்கையால் உங்களுக்கு எல்லாம் நல்லதே நடக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வீடு, மனை, சொத்து வாங்கும் அமைப்பு உள்ளது. சுப நிகழ்ச்சிகளால் குடும்பத்தில் சந்தோசம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்க்காத அதிர்ஷ்டம் வந்து சேரும். பல நாட்களாக வந்து சேராத பணவரவு உங்களை வந்து சேரும். சனி பகவான் 6 ஆம் இடத்தில் இருப்பதால் சொந்த தொழில் செய்வதற்கு அருமையான நேரம் இது.

எந்த போட்டியாக இருந்தாலும் அதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாத நபர்களுக்கு திருமணம் யோகம் கை கூடி வரும். குழந்தை பாக்கியம் வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு கூடிய விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருக்கும். ஆகையால் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து போனால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வார்த்தைகள் உபயோகிப்பதில் கவனம் வேண்டும். எதிரிகள் உங்களை விட்டு விலகுச் செல்வார்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்