Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Meenam Sani Peyarchi 2022: சனி பெயர்ச்சியால் ராஜ யோகம் அடைந்த மீன ராசி!

Manoj Krishnamoorthi May 05, 2022 & 13:15 [IST]
Meenam Sani Peyarchi 2022: சனி பெயர்ச்சியால் ராஜ யோகம் அடைந்த மீன ராசி!Representative Image.

ஒன்பது நவகிரகத்தில் மனிதனின் வாழ்வியலில் அவன் செய்யும் செயலின் பலனை அவன் கர்ம வினைக்கு ஏற்றவாறு பலன் அளிக்கும் முக்கியமான கிரக சனி ஆகும், இவ்வாசகத்தில்  மீன ராசிக்கு 2022 சனி பெயர்ச்சியால் உருவாகும் பலன் பற்றி காண்போம்.

இதையும் படிக்க: கோடீஸ்வர யோகம் கொள்ளும் மேஷ ராசி!

மீன ராசி சனி பெயர்ச்சி பலன் 2022 (Meenam Sani Peyarchi 2022)

பொது பலன்

உங்கள் ராசியில் இதுவரை 11 வீட்டில் நிலை கொண்ட சனி பகவான் 29.04.2022 முதல் 12.07.2022 வரி 12ஆம் வீட்டில் சஞ்சாரம் கொள்வது, விரைவான வளர்ச்சி அளிக்கும்.  இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு ஒரு ராஜ யோகமாகும். செல்வ நிலை பொருத்தவரை பெரிய செலவுகள் இருக்கும். தொழில் மீது அதிக கவனம் கொள்வது இருக்கும் நிலையிலிருந்து உங்களைக் கீழே இழுக்காது. 12.07.2022 பிறகு உங்கள் வாழ்வு மேலும் செழிப்பாக மாறும்.  

குடும்ப வாழ்க்கை

குடும்பத்தில் ஆனந்தம் அதிகமாக இந்த சனி பெயர்ச்சி வழி செய்யும், உடன்பிறப்பு மூலம் பல ஆதாயம் கிடைக்கும். உறவினர் மத்தில் சுமூகமான உறவு உருவாகும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் பெரியதாக இருக்காது. திருமண வாழ்க்கையில் அன்பும் அக்கறையும் அதிகரிக்கும். காதல் செய்யும் மீன ராசிக்காரருக்கு காதல் திருமண உறவில் முடியும்  தருணம் உருவாகும்.   

தொழில்

மீன ராசிக்காரரின் உத்தியோக ஸ்தானம் கவனம் கொள்ள வேண்டிய தருணமாகும், வேலைச் சுமை அதிகமாகும். அதிகமான உழைப்பு தர வேண்டிய தருணமாகும். 12வது வீட்டில் சனி இருப்பது உங்களுக்கு பணி உயர்வு அல்லது நிர்வாகத் துறையில் வேலை செய்யும் வாய்ப்பைத் தரும். வேலைத் தேடிக் கொண்டு இருந்த மீன ராசியினருக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அரசியல் மற்றும் பொழுதுபோக்கு சம்பந்தபடட வேலையில் இருப்பவருக்கு புகழ் அதிகமாகும்.

கல்வி

மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக உள்ளது, போட்டி தேர்வு கொள்ளும் மாணவர்களுக்கு தேர்ச்சி சிறப்பாக இருக்கும். உயர்கல்வி கொள்ள நினைக்கும் உங்களுக்கு இந்த வருடம் சனி பெயர்ச்சி அதற்கான சூழலை உருவாக்கித் தரும். புதியதாகக் கல்லூரி செல்லும் மீன ராசிக்காரருக்கு பெரிய பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கும்.

செல்வ நிலை

தொழிலில் ஏற்படும் முன்னேற்றம் உங்களின் வருமானத்தை அதிகப்படுத்தும்,  எதிர்பாராத இடத்திலிருந்து செல்வ வரவு இருக்கும். தங்கம் போன்ற ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். செல்வ நிலை நன்றாக இருந்தாலும் சேமிப்பு இருக்காது. 

ஆரோக்கியம்

ஆரோக்கியத்தில் எந்தக் குறையுமில்லை, உடல் நல்ல சுறுசுறுப்புடன் இருக்கும். உணவு பழக்கத்தில் கவனம் கொள்வது உங்களின் ஆரோக்கியத்தில் சிக்கலை உருவாக்காது. உடற்பயிற்சி அல்லது தியானம் போன்றவையின் மீது ஆர்வம் தோன்றும்.

பரிகாரம்

  • வாரந்தோறும் சனிக்கிழமை அன்று பருப்பு வகைகளை தானம் செய்ய வேண்டும். 
  • சனிக்கிழமை அன்று எள்ளு கலந்த உணவை காகத்துக்கு வைக்க வேண்டும்.  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்