Fri ,Oct 25, 2024

சென்செக்ஸ் 80,065.16
-16.82sensex(-0.02%)
நிஃப்டி24,399.40
-36.10sensex(-0.15%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இவ்வளவு நாளா எதுக்கு வெயிட் பண்ணிட்டு இருந்திங்களோ, அது நடக்கப்போகுது… இந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தான்.. ஜூன் 08, 2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan June 07, 2022 & 15:40 [IST]
Nalaya Rasi Palan: இவ்வளவு நாளா எதுக்கு வெயிட் பண்ணிட்டு இருந்திங்களோ, அது நடக்கப்போகுது… இந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தான்.. ஜூன் 08, 2022 ராசிபலன்!Representative Image.

Nalaiya Rasi Palan | Today Rasi Palan in Tamil | Tomorrow Rasi Palan | Inraiya Raasi Palan

நல்ல நேரம்:

காலை: 09.30 - 10.30 வரை

மாலை: 04.30 - 05.30 வரை

மேஷம் | Aries 2022 Horoscope

நிதானமாக இருக்க வேண்டிய நாள். பிரியமானவர்களுடன் பேசும் போது கவனமாக பேசவும். ஏதாவது முக்கிய முடிவுகள் எடுக்க விரும்பினால், இன்று சரியான நாள் கிடையாது. முதலீடுகளை செய்வதற்கு முன்பு ஒரு தடவைக்கு நாலு தடவை நன்றாக யோசித்து, ஆலோசித்து போடலாம். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை இருக்கும். டென்ஷன் அடைய வேண்டாம். நீண்டநாட்களாக இழுத்தடித்த ஒரு பெரிய விஷயத்தை செய்து முடிப்பீர்கள். எதிர்பாரா செலவுகள் வரும். ஆரோக்கியம் சுமாராக இருக்கிறது. குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது. இன்று உங்கள் துணை உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தில் உதவி புரிவார். நிதானம்!

ரிஷபம் | Taurus 2022 Horoscope

இன்று நீங்க வாயை திறந்தாலே வாக்குவாதம் தான் என்பது போல இருக்கும். எனவே, எதையும் பேச தொடங்குவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேச வேண்டும். சிறிய விஷயங்களை பெரியதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சில விஷயங்களில் குடும்பத்திடம் விட்டுக்கொடுத்து போவது நல்லது. வேலை செய்யும் இடத்தில் சாமார்த்தியமாக செய்ய வேண்டாம். இல்லையென்றால், வேலை காலி. வியாபாரத்தில் பார்ட்னர் ஆதரவாகவும், உதவிகரமாகவும் இருப்பார். கணவருடன் வெளியில் செல்லும்போது ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். இன்று உங்களுக்கு மிகவும் பிடித்த நபரின் வருகை இருக்கும். எதிர்பாராமல் வந்து உங்களுக்கு சப்ரைஸ் கொடுப்பார். இது கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கவனம்!

மிதுனம் | Gemini 2022 Horoscope

உங்களுடைய பணிவான நடத்தையை அனைவரும் வியந்து பாராட்டுவார்கள். இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். நண்பர்களிடமிருந்து ஆதரவு தேடி வரும். அதனால், நன்கு பயன்படுத்துக் கொள்வது புத்திசாலித்தனம். பணி புரியும் இடத்தில் உங்களுடைய திறமையை பாராட்டுவார்கள்.  அதிக பணவரவு உண்டு. பணத்தை சேமிக்கும் வாய்ப்பு கிட்டும். அன்புக்குரியவர்கள் கூட இல்லாததால் ஒரு மாதிரி தனிமையை உணருவீர்கள். இன்று உங்களுக்கு நிறைய நேரம் இருக்கும் ஆனால் உங்களுக்கு திருப்தி தரும் எதையும் நீங்க செய்ய முடியாது. ஆரோக்கியத்தை பொறுத்த வரையில் சிறப்பாகவே இருக்கிறது. பக்கத்து வீட்டார் சொல்வதை கேட்டு உங்கள் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். பாராட்டு!

கடகம் | Cancer 2022 Horoscope

பதட்டமாகவே இருப்பீர்கள். கூட வேலை செய்பவர்கள் உங்களுக்கு இன்று உதவி செய்ய மாட்டார்கள். எனவே, எந்த வேலையாக இருந்தாலும் நீங்களே செய்து கொள்ளும் அளவிற்கு பார்த்துக் கொள்ளுங்கள். பணவரவு சுமாராக தான் இருக்கும். உங்கள் மனதில் எதையோ பரிகொடுத்த மாதிரியே உணர்வீர்கள். தேவையற்ற செலவுகள் வரும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் வேண்டும். கணவன்-மனைவி இடையே காதல், பாசம் அதிகரிக்கும். பதட்டம்!

சிம்மம் | Leo 2022 Horoscope

தேவையற்ற வாக்குவாதங்கள் வரலாம். அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் பொறுமையாக இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் சின்னதாக சலசலப்பு இருக்கும். உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு எதிராக நடந்துக்கொள்வார்கள். இது உங்களுக்கு கவலையை உண்டாக்கும். குடும்பத்தினரிடம் இருந்து ஒரு ரகசியமான நற்செய்தி வெளியில் வரும். குடும்பம் சம்பந்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். இன்று கணவன்-மனைவி இடையே காதல் தீ பற்றி எரியும். வியாபாரம் மந்தமாக தான் இருக்கும். எனவே, கையில் இருக்கும் பணத்தை செலவு செய்யாமல் சேமிக்க வேண்டும். பொறுமை!

கன்னி | Virgo 2022 Horoscope

இன்றைய நாளை பொறுத்த வரையில் கொஞ்சம் சுமாராக தான் இருக்கும். ஆரோக்கியத்தி அதிக கவனம் தேவை. புகைப்பழக்கத்தை விட்டொழியுங்கள். உங்களால் முடியும் என்றால் மட்டுமே வாக்குறுதி கொடுங்கள். ஆர்வக்கோளாரில் எதையும் யோசிக்காமல் வாக்கு கொடுத்துவிட்டு பின்னர் அசிங்கப்பட வேண்டாம். இன்னைக்கு நீங்க உங்க விருப்பத்திற்கு ஏற்றவாறு இருப்பீர்கள், அதாவது யார் என்ன நினைத்தால் எனக்கென்ன, நாம் இப்படி தான் இருப்பேன் என்பது போன்று. தனிமையை தேடுவீர்கள். பணவரவு குறைந்து காணப்படுவதால், செலவுகளை சமாளிப்பது சிரமத்தை உண்டாக்கும். வேலை செய்யும் இடத்தில் சில தடைகளை எதிர் கொள்வீர்கள். தடை!

துலாம் | Libra 2022 Horoscope

குடும்பத்துடன் ஜாலியாக நேரத்தை செலவிடுவீர்கள். சொந்த முயற்சி மூலம் சாதித்து காட்டுவீர்கள். மற்றவர்களிடமும் நன்முறையில் நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். முகத்தில் புன்னகை தாண்டவமாடும். சேமிப்பை தொடங்குவீர்கள். இன்று உங்கள் துணையுடன் உண்மையாகவும், அன்பாகவும் நடந்து கொள்வீர்கள். இதனால், உங்கள் மீதான அவருடைய அன்பு, பாசம் பல மடங்கு அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. எந்த பிரச்சனையும் இல்லை. தூரத்து சொந்தக்காரர்களிடம் இருந்து எதிர்பாராத தகவல்கள் ஒட்டுமொத்த குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். மகிழ்ச்சி!

விருச்சிகம் | Scorpio 2022 Horoscope

நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து ஆதரவு தேடிவரும். இன்று ஒரு பெரிய தொகையை பேங்கில் போடுவீர்கள். இதைக் கண்டு நீங்களே ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்வீர்கள். அதுமட்டுமல்லாமல், குடும்ப கடன்கள் அனைத்தையும் அடைத்து, பெற்றோரிடம் நல்ல பதிப்பை பெறுவீர்கள். உங்களுடைய அன்பானவர்களின் சூழ்நிலை புரிந்துக் கொண்டு, அவரிடம் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள். ரொம்ப நாளாக காத்திருந்த சில விஷயங்கள் இன்று உங்களை நிறைவேறி மகிழ்ச்சியை கொடுக்கும். உங்களை சந்தோசமாக வைத்துக் கொள்ள உங்கள் துணை முயற்சி எடுப்பார். உங்கள் நேர்மை மேலதிகாரிகளால் பாராட்டப்படும். உங்க வேலையை சொன்ன நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய முழு திறமையை எல்லாரும் பார்த்து வியப்பார்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனந்தம்!

தனுசு | Sagittarius 2022 Horoscope

எதை பேசும்போதும் கவனமாக பேச வேண்டும். இன்று நண்பர்களுடனான சந்திப்பை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் வேலைகள் அடுக்கிக் கொண்டே போகும், இதனால் இன்னைக்கு செய்ய வேண்டிய பணிகள் தள்ளிப் போகும். உங்களை சந்தோசமாக வைத்துக் கொள்ள உங்களுடைய குடும்பத்தினர் போராடுவார்கள். புதிய வியாபாரம் தொடங்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். இன்று உங்கள் துணை உங்களை கடுப்பாக்குவார். டென்ஷன் ஆக வேண்டாம். பயணத்தின் போது பணத்தை தொலைக்க வாய்ப்புள்ளது பார்த்து ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். தொண்டை சம்பந்தமான பிரச்சனை வரலாம். எனவே, குளிர்ப்பானங்களை தவிர்த்துவிடுங்கள். கோபம்!

மகரம் | Capricorn 2022 Horoscope

ஆரோக்கியம் நன்றாக இல்லை. சின்ன வேலையை செய்வதற்கு கூட சலுப்புப்படுவீர்கள். மிகவும் சோர்ந்து காணப்படுவீர்கள். எனவே, ஓய்வு எடுப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன விவாதங்கள் வரலாம். கவனமாக இருங்கள். உங்கள் துணையுடன் பேசும் போது கவனமாக இருங்கள், விளையாட்டாக பேசுகிறோம் என்று எதையும் கண்ணாப்பின்னான்னு பேசவேண்டாம். கவனக்குறைவால் பணத்தை இழக்க நேரலாம். இன்று நீங்க ஆசைப்பட்டதை செய்ய நேரம் இருக்கும். அக்கறை!

கும்பம் | Aquarius 2022 Horoscope

இன்று அனுகூலமான நாளாக இருக்கும். இன்று புதிய தொடர்புகள் மற்றும் நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பிறருடன் கலந்து பேசி மகிழ்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் சகபணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். வருமானம் நல்ல முறையில் இருக்கும். உங்கள் துணையுடன் நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் உங்களுடைய பார்ட்னர் உதவிகரமாக இருப்பார். அனுகூலம்!

மீனம் | Pisces 2022 Horoscope

மற்றவர்களுடைய விஷயங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். வாய்ப்புகள் தேடி வரும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தினர் இன்று உங்களுடன் பல சிக்கல்களைப் பகிர்ந்துகொள்வார்கள். கணவன்-மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், புதிய தொழிலில் முதலீடு செய்யலாம். இன்று அதிர்ஷ்டமான நாள். எதிலும் வெற்றி, சொந்த முயற்சியில் திறமையாக செயல்பட்டு முடியாத காரியத்தை முடித்துக் காட்டுவீர்கள். அதிர்ஷ்டம்!

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்