Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

பிறரை நம்பி கடன் கொடுத்தால், இந்த பிரச்சனைகளைச் சந்திப்பீங்க.. | Meenam Sani Vakra Peyarchi Palan 2023 in Tamil

Gowthami Subramani Updated:
பிறரை நம்பி கடன் கொடுத்தால், இந்த பிரச்சனைகளைச் சந்திப்பீங்க.. | Meenam Sani Vakra Peyarchi Palan 2023 in TamilRepresentative Image.

ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும். அதேபோல், சில கிரகம் உதயமாகும், அஸ்தமனமாகும் மற்றும் பின்நோக்கி நகரும். அதன்படி, ஒன்பது கிரகங்களில் மிகவும் ஆபத்தான கிரகமாக கருதப்படும் சனி கிரகம் அனைத்து கிரகங்களை காட்டிலும் மெதுவாக நகரக்கூடியது. சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளுவார்.

அந்தவகையில், சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் ஜனவரி 17 ஆம் தேதி அவிட்டம் 3 ஆம் பாதத்தில் மாலை 06.30 மணிக்கு இடப்பெயர்ச்சி ஆனார். அதன்பிறகு, மார்ச் 14 ஆம் தேதி சதய நட்சத்திற்கு மாறினார். இந்த நிலையில், வருகின்ற ஜூன் 17 ஆம் தேதி கும்ப ராசியில் பின்நோக்கி நகரப் போகிறார். இதை தான் 'சனி வக்ரம்' என்று சொல்வார்கள். பொதுவாக, சனி 133 நாட்களுக்கு வக்ர நிலையில் நகரும். அதன்படி, ஜூன் 17 தேதியில் இருந்து வரும் நவம்பர் 4 ஆம் தேதி வரை வக்ர நிலையிலேயே இருப்பார். இந்த காலக்கட்டத்தில் மீனம் ராசியினர் எம்மாதிரியான பலன்களை பெறப்போகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

பிறரை நம்பி கடன் கொடுத்தால், இந்த பிரச்சனைகளைச் சந்திப்பீங்க.. | Meenam Sani Vakra Peyarchi Palan 2023 in TamilRepresentative Image

சனி வக்ர பெயர்ச்சி 2023 மீனம்:

மீன ராசி மற்றும் மீன லக்னம் சார்ந்த நபர்கள், ஏழரை சனியின் ஆரம்ப கால கட்டத்தில் இருப்பர். இது விரயஸ்தானத்தில் இருப்பதைக் குறிக்கிறது. இந்த நேரத்தில், சனி வக்ர பெயர்ச்சி மீன ராசிக்கு நன்மை தருபவையாக உள்ளன. பொருளாதாரச் செலவு அதிகமாக இருந்திருக்கும். விரயச் செலவாக இருந்தாலும், சுபச் செலவாக இருந்தாலும் அதிகம் இருந்திருக்கும். ஆனால், இந்த சனி வக்ர பெயர்ச்சியினால், விரயச் செலவைக் குறைந்து விடும். பொருளாதார மந்தத்தன்மை குறைந்து, வரவு அதிகரிக்கும்.

மருத்துவச் செலவு, குடும்பச் செலவு உள்ளிட்டவை முடிந்து பொருளாதாரத்தில் சேமிப்பு தொடங்கும் நாள்களாக அமைகிறது. வீடு கட்டத் தொடங்குதல், புதிய நிலம் வாங்குதல், வீடு வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு சுபச்செலவு செய்வீர். மேலும், பிள்ளைகளின் வழி சுபச்செலவு உண்டாகலாம். பிள்ளைகளின் கல்வி சார்ந்த விஷயம், அவர்களுக்குச் செலவு செய்ய வேண்டிய காலமாக அமைகிறது.

இந்த நேரத்தில் ராகுவால், சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால், பெரிய அளவில் இருக்காது. இதனால் நன்மை, தீமை என இரண்டும் வர வாய்ப்புண்டு. பொருளாதாரத்தைப் பொறுத்த வரை, நீங்கள் பெறும் வருமானத்தை விட இரட்டிப்பு வருமாத்தைப் பெறுவீர்கள். குடும்ப முன்னேற்றத்திற்காக செயல்படுவீர்கள். செய்யும் விஷயத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் குறைந்து விடும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் விலகி விடும். நீங்கள் சொல்லக்கூடிய அனைத்தும் நடப்பவையாக அமைகிறது. இந்த நேரத்தில் கொடுத்த வாக்குகளைக் காப்பாற்றுவீர்கள்.

மாணவ மாணவிகளைப் பொறுத்த வரை, இதுவரை இருந்த மந்தத்தன்மை விலகி நன்மை உண்டாகும். கடன் தொல்லைகள் விலகி விடும். சனி வக்ரம் அடையும் போது, குரு பகவான் உங்களுக்குப் பாதுகாப்பானாக செயல்படுவார். கொடுத்த கடன்களைத் திரும்பப் பெறுவீர்கள். நீண்ட நாளாகக் கட்ட முடியாத கடனிலிருந்தும் விடுபடுவீர்கள். இந்த நேரத்தில் கடனுதவி தருவதைத் தவிர்க்க வேண்டும். இது உங்களுக்கு பெரும் நஷ்டத்தையும், குடும்பத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அமையும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

நீண்ட நாள்களாக இருந்த பிரச்சனைக்கு முடிவு கிடைக்கப் போகிறது. தந்தையாரின் உடல் சார்ந்த பிரச்சனைகள் உங்களைப் பாதித்திருக்கலாம். ஆனால், சனி வக்ர பெயர்ச்சியால் தந்தையால் உங்களுக்கு நன்மை உண்டாகும். பெற்றோரிடம் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி ஒற்றுமை உண்டாகும். திடீர் அதிர்ஷ்டங்கள், திடீர் ஆதாயங்கள், திடீர் பணவரவு உள்ளிட்டவற்றைப் பெறும் காலமாக அமைகிறது. மனதளவு வலிமை உண்டாகும். இந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், உங்களின் வாழ்க்கை மேலோங்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்