Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Mesha Rasi Palan October 2022 In Tamil : செவ்வாய் வக்கிரம் கொள்வது மேஷக்கு என்ன பலன்..?

Manoj Krishnamoorthi September 22, 2022 & 17:45 [IST]
Mesha Rasi Palan October 2022 In Tamil : செவ்வாய் வக்கிரம் கொள்வது மேஷக்கு என்ன பலன்..?Representative Image.

சகஜமாக பழகி புதிய மனிதர்களிடம்  நட்பை பெறும் மேஷ ராசிக்காரரே அக்டோபரில் ராசியின் அதிபதி செவ்வாய் ரிஷபத்தில் இருந்து  மிதுனத்திற்கு மாறி பின்னர் வக்கிரம் கொள்கிறார். மேலும் 12 இல் இருக்கும் குரு இதனால் அக்டோபர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும்? புதிய முயற்சிகள் எடுக்கலாமா... ! போன்ற கேள்விக்கு பதிலாக இந்த பதிவு இருக்கும்.

அக்டோபர் மாத ராசிபலன் 2022- மேஷம் (Mesha Rasi Palan October 2022 In Tamil)

பொது பலன்: 

மேஷ ராசிக்காரரே இந்த அக்டோபர் மாதம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களுக்கு 6 இல் சூரியன், புதன் சுக்கிரன் சேர்க்கை, 7 இல் கேது, ஜென்மத்தில் இராகு இருப்பது தொழிலில் இருக்கும் நிலையில் அப்படியே பயணிப்பது நல்லதாகும். பணம் கையில் நிற்காது. 

குடும்ப  வாழ்க்கை:

தாய் வழியில் சிறிய சந்தோஷம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை ஓரளவு நன்றாக இருக்கும், திருமண வாழ்க்கை சில மன வருத்தங்களுடன் செல்லும். வாழ்க்கை துணையின் மூலம் மருத்துவ செலவு ஏற்படும். குடும்ப வாழ்வில் அதிகம் உணர்ச்சிவசப்படும் தருணம் வரும்.  திருமணமாகாதவர்களுக்கு வரன் அமைவதில் தாமதம் ஏற்படும்.  காதல் வாழ்க்கை அமைதியாக நகரும், பிரச்சனை இருக்காது. 

தொழில்: 

தொழில் ஸ்தானத்தில் சனியின் பார்வை பெரியளவு பாதிப்பு அளிக்காது.  ஆனால் புதிய முயற்சிகள் எடுப்பதை குறைத்து கொள்வது பெரிய நஷ்டம் அளிக்காது. கல்வியில் தேவைக்காக அதிகம் விடாமுயற்சி தேவைப்படும். இருப்பினும் புதன் குரு பார்வையில் இருப்பதால் கல்வி ஸ்தானத்தில் பின்னடைவு இருக்காது. மாதத்தின் தொடக்கத்தில் 6 இல் இருக்கும் சுக்கிரன் 7 இல் நகர்வது விரைய செலவை அளிக்கும், சேமிக்க முடியாது. 

உடல்நலம்: 

ஆறாம் வீட்டில் சூரியன் மற்றும் புதன் இருப்பது  உங்களுக்கு நரம்பு சார்ந்த தொல்லைகள் அளிக்கும். உடல் சார்ந்த வேலைகளில் ஈடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். 

சந்திராஷ்டமம்:

அக்டோபர் 1, 26, 27, 28

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்