Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : திடீரென வரும் பணம் இவருக்கு வேறலெவல் லைவ் தான்.... 23.09.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi September 22, 2022 & 14:30 [IST]
Nalaya Rasi Palan :  திடீரென வரும் பணம் இவருக்கு வேறலெவல் லைவ் தான்.... 23.09.2022 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் புரட்டாசி 6 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (23.09.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 12:15- 01:15 வரை

மாலை: 06:30- 7:30 வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (23.09.2022, வெள்ளிக்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் வழக்கத்தைவிட மிகவும் சந்தோஷமாக இருக்கும். மனதில் நம்பிக்கை இரட்டிப்பாகும். தொழில் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் முக்கியத்துவம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள் கிடைக்கும், சிறப்பான பண வரவு உண்டு.

குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி உறவில் அன்பு அதிகரிக்கும். வீட்டில் பெரியோரின் மனதை ஆனந்தமாக்குவீர். காதல் வாழ்வில் புரிதல் அதிகமாகும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. மகிழ்ச்சி! 

அதிர்ஷ்ட நிறம்:  காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

உங்கள் கடினமான உழைப்பு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் மீது மதிப்பு அதிகமாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. நிதி நிலையில் நல்ல வளர்ச்சி உண்டு. 

காதல் வாழ்வில் உல்லாசம் இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும், வருங்காலம் சார்ந்த முதலீடுகள் செய்ய வீட்டில் ஆலோசிப்பீர். உடல்நலம் நன்றாக உள்ளது. உழைப்பு! 

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு  

அதிர்ஷ்ட எண்: 9

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று உங்களுக்கு அறியாமல் சில எதிரிகளை உருவாகிவிடுவீர். அலுவலகத்தில் நிதானமாக இருக்க வேண்டும்.  வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்காது. மாணவர்களுக்கு பல குழப்பங்கள் மனதில் சுழலும். பணப்பரிமாற்றத்தில் கவனம் வேண்டும். 

குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் எட்டி பார்க்கும். கணவன் மனைவி உறவில் சந்தோஷம் குறையும். நண்பர்களுடன் வெளியே செல்ல திட்டமிடுவீர். உணவு பழக்கத்தில் கவனம் வேண்டும். எதிர்ப்பு! 

அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 8

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு மனதில் பலவிதமான எண்ணங்கள் ஓடும், நிதானமாக இருக்க முடியாது. சிலருக்கு பயணத்தின் மூலம் அலைச்சல் இருக்கும். வேலை அழுத்தம் இருக்கும், ஆனால் வேலையை முடித்து பாராட்டு பெறுவீர். செல்வத்தை கவனமாக செலவு செய்யவும், அவசர செலவு ஏற்படலாம். 

இல்லற வாழ்வில் மனஸ்தாபம் வந்து புரிதலை அளிக்கும். வீட்டில் பெரியவரின் அறிவுரை மனதிற்கு ஆறுதலாக  இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. பாராட்டு! 

அதிர்ஷ்ட நிறம்:  நீலம்

அதிர்ஷ்ட எண்:  3

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

உங்கள் மனம் நினைத்த இலக்கை அடைய கடுமையாக போராடுவீர், பல நபரின் ஆலோசனை கிடைக்கும்.  அலுவலகத்தில் குறித்த வேலையை சகபணியாளர் உதவியுடன் வெற்றிகரமாக முடிப்பீர். கையில் போதுமான அளவு பணம் இருக்கும்.

வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக பொழுது செல்லும். காதல் வாழ்வில் நட்பான அணுகுமுறை ஒற்றுமை அளிக்கும். கல்வியில் நல்ல வளர்ச்சி இருக்கும். உடல்நலம் நன்றாக உள்ளது. வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் 

அதிர்ஷ்ட எண்: 1 

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்கள் மனம் புத்துணர்ச்சியாக இருக்கும், வழக்கமான வேலைகள் விரைவாக முடியும். பணியிடத்தில் உங்கள் செயல்பாடு சிறப்பாக இருக்கும், பாராட்டு கிடைக்கும். சுய தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டு. உயர்கல்விக்காக மாணவர்களுக்கு உதவி கிடைக்கும். உங்களுக்கு திடீரென பணப்புழக்கம் அதிகமாகும்.

திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். வீட்டில் இருக்கும் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். நண்பர்களுடன் சுறுசுறுப்பாக இலட்சியத்தை அடைய போராடுவீர். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வரவு! 

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்