Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இன்னைக்கு இவங்களுக்கு தான் செம்ம லாபம்...அதுவும் இந்த விஷயத்துல தான் கிடைக்கும்!

Priyanka Hochumin November 15, 2022 & 18:00 [IST]
இன்னைக்கு இவங்களுக்கு தான் செம்ம லாபம்...அதுவும் இந்த விஷயத்துல தான் கிடைக்கும்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 30 ஆம் நாள் புதன்கிழமை (16.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி தெரிந்துகொள்வோம். இந்தப் பதிவில், மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன்

மேஷம்- சினம்

ரிஷபம்- நட்பு

மிதுனம்- சிரமம்

கடகம்-  ஏமாற்றம்

சிம்மம்- ஓய்வு

கன்னி- மறதி

நல்ல நேரம்

காலை: 9:15 – 10:15 வரை

மாலை: 4:45 – 5:45 வரை

இன்னைக்கு இவங்களுக்கு தான் செம்ம லாபம்...அதுவும் இந்த விஷயத்துல தான் கிடைக்கும்!Representative Image

மேஷம் (Aries 2022 Horoscope)

இந்நாள் நீங்கள் தன்னம்பிக்கையுடன் ஆரம்பிப்பீர்கள். பணியில் இத்தனை நாளாக கிடைக்காத அங்கீகாரம் உங்களின் விடா முயற்சியால் கிடைக்கும். தீராத பிரச்சனைகளுக்கு புதுமையான கோணத்தில் யோசித்து தீர்வு காண்வீர்கள். அதிக மனக்கவலையால் சோர்ந்து இருந்த காலங்கள் நீங்க பயணம் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

இன்னைக்கு இவங்களுக்கு தான் செம்ம லாபம்...அதுவும் இந்த விஷயத்துல தான் கிடைக்கும்!Representative Image

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

குடும்பத்தில் இருப்பவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படும். வீட்டில் சுபகாரியம் கைக்கூடும். கலை சார்ந்த பணியில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்து, தங்களின் திறமைகளை நிரூபிக்க சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

இன்னைக்கு இவங்களுக்கு தான் செம்ம லாபம்...அதுவும் இந்த விஷயத்துல தான் கிடைக்கும்!Representative Image

மிதுனம் (Gemini 2022 Horoscope)

இன்று உங்கள் குடும்பத்துடன் சந்தோசமாக நாளைக் களிப்பீர்கள். மாணவர்களுக்கு மறதி பிரச்சனை நீங்கும். மனை வாங்கி பிரச்சனையில் இருப்பவர்களுக்கு சரியான நேரத்தில் உதவிவி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் உறவு வலுவடையும்.

அதிர்ஷ்ட நிறம்: சந்தன வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

இன்னைக்கு இவங்களுக்கு தான் செம்ம லாபம்...அதுவும் இந்த விஷயத்துல தான் கிடைக்கும்!Representative Image

கடகம் (Cancer 2022 Horoscope)

பணியில் உடன் வேலை செய்பவர்களுடன் அனுசரித்து நடக்கவும். பிறரின் உதவியுடன் கடினமான வேலையும் எளிதில் முடியும். சற்றே எதிர்பாராதபயணம் செல்லும் வாய்ப்புகள் கைகூடி வரும், அதனால் புது விதமான அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். புது டெக்னாலஜி மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இன்னைக்கு இவங்களுக்கு தான் செம்ம லாபம்...அதுவும் இந்த விஷயத்துல தான் கிடைக்கும்!Representative Image

சிம்மம் (Leo 2022 Horoscope)

உங்களின் லாபம் அதிகரிக்கும் நாளாக இன்று அமையும். கடுப்பான வேலையை மிகவும் சாமர்த்தியமாக கையாளுவீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். இதுவே எதிர்காலத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்களின் தனிப்பட்ட வரவில் சேமிப்பு அதிகரிக்கும். தினசரி செயல்பாடுகளில் அலுப்பு ஏற்பட்டு சோர்வான உணர்வு ஏற்படும். 

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

இன்னைக்கு இவங்களுக்கு தான் செம்ம லாபம்...அதுவும் இந்த விஷயத்துல தான் கிடைக்கும்!Representative Image

கன்னி (Virgo 2022 Horoscope)

சமூக பணியில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அரசு சார்பில் உதவிகள் கிடைத்து மேம்படுவீர்கள். தொழில் வளர்ச்சிக்கான யோசனையால் வளர்ச்சி அதிகரிக்கும். தந்தை வழி உறவினர்கள் வழியே ஆதரவு கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியம் சரி நேரத்தில் நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்