Tue ,Mar 05, 2024

சென்செக்ஸ் 73,677.13
-195.16sensex(-0.26%)
நிஃப்டி22,356.30
-49.30sensex(-0.22%)
USD
81.57
Exclusive

Nalaiya Rasi Palan: இந்த ராசியினருக்கு இன்று எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.. ஜூன் 23, 2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan June 22, 2022 & 14:00 [IST]
Nalaiya Rasi Palan: இந்த ராசியினருக்கு இன்று எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.. ஜூன் 23, 2022 ராசிபலன்!Representative Image.

Nalaiya Rasi Palan | Today Rasi Palan in Tamil | Tomorrow Rasi Palan in Tamil | Inraiya Raasi Palan

நல்ல நேரம்:

காலை: 10.30 - 11.30 வரை

மாலை: இல்லை

Tomorrow Horoscope in Tamil: மங்களகரமான சுபகிருது வருடம் ஆனி மாதம் 9 ஆம் நாள் வியாழக்கிழமை (2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி) நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.  


மேஷம் முதல் கன்னி வரை உள்ள முதல் 6 ராசியின் தினசரி பலன் பற்றி அறிய இங்கே க்ளிக் செய்யவும்..


துலாம் | Libra 2022 Horoscope 

உங்களுடைய அனுசரனையான அணுகுமுறை உங்களுக்கு வெற்றியை தேடி தரும். வீட்டில் ரொம்ப நாட்களாக நின்று போயிருந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். இதனால் மனதில் ஒரு நிம்மதி உண்டாகும். உறவினர், நண்பர்களுடன் சந்தோசமான தருணத்தை அனுபவிப்பீர்கள். பல வாய்ப்புகள் தேடி வரும். சின்ன வாய்ப்பாக இருந்தாலும் புத்திசாலி தனமாக சிந்தித்து அவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள முயற்சிப் பண்ணுங்க. எதையும் தவறவிட்டுவிடாதீர்கள். வியாபாரத்தில், தொழிலில் அதிக லாபம் ஈட்டும் நாள். தனலட்சுமி உங்களை தேடி வருகிறாள். லாபம்!

விருச்சிகம் | Scorpio 2022 Horoscope

குடும்ப வளர்ச்சிக்கான செயல்களை ஆரம்பிக்க சிறந்த நாள். உங்களுடைய திறமையை பயன்படுத்தி பணியில் வெற்றி பெறுவீர்கள். உடன் பணிபுரிவர்கள் உங்களுடைய திறமையை பார்த்து வியந்து பாராட்டுவார்கள். முன்னோர்கள் சொத்து கிடைப்பது பற்றிய செய்தி வந்து சேரும். உங்களுடைய துணை உங்களின் மீது அன்பையும் பாசத்தையும் பொழிந்து தள்ளுவார். இன்னைக்கு ஒரு அழகான சர்ப்ரைசும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் முதலில் சில தடைகள் வந்தாலும் பின்னர் முன்னேற்றம் காணப்படும். பாராட்டு!

தனுசு | Sagittarius 2022 Horoscope

தன்னம்பிக்கையை அதிகம் வளர்த்துக் கொள்ள வேண்டிய நாள். உங்களுடைய இலக்கை அடைய  கொஞ்சம் கடினமாக உழைக்க நேரிடும். கொடுத்த வேலையை கொடுத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் தேவையில்லாத வாக்குவாதங்கள் வரலாம். சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. பூர்வீகச் சொத்து மூலம் இன்று பண வரவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உழைப்பு!

மகரம் | Capricorn 2022 Horoscope

புதிய தொழிலில் முதலீடு செய்ய உகந்த நாள். உங்களுடைய புத்திசாலி தனத்தை நன்றாக பயனபடுத்திக் கொண்டால் நிறைய சாதிக்கலாம். முடிந்த வரை சுய முன்னேற்றத்திற்கான முயற்சி மேற்கொள்ளுங்கள். பணிபுரியும் இடத்தில் எல்லாரும் உங்களை பாராட்டுவார்கள். வியாபாரத்தில் லாபம் இருக்கும். குடும்பத்தில் ஆனந்தம் விளையாடும். நீங்களும் சந்தோசமாக இருப்பீர்கள், மற்றவர்களையும் சந்தோசப்படுத்துவீர்கள். தேவையற்ற கவலைகளில் இருந்து விலகி வாழ்க்கையை நடத்த முயற்சியுங்கள். ஆனந்தம்!

கும்பம் | Aquarius 2022 Horoscope

குடும்பத்தினரின் நலன் குறித்த எண்ணங்கள் மனதில் அவ்வப்போது வந்துபோகும். எதிர்காலத்தை பற்றிய சிந்தனையால் பணியில் தீவிரமாக இறங்குவீர்கள். நீதிமன்றத்தில் பணம் சம்பந்தமான ஏதேனும் விஷயம் இருந்தால், அதில் வெற்றி காண்பீர்கள். நம்பிக்கையோடு முயற்சித்தால் எதிலும் வெற்றி அடைவீர்கள். உறவினர்கள் எதிர்பாராத பரிசுகள் கொண்டு வருவார்கள். ஆனால், உங்களிடம் ஏதாவது உதவியை எதிர்பார்ப்பார்கள். உங்கள் துணையுடன் ரொமான்ஸ் செய்ய இன்று இனிமையான நாள். சிந்தனை!

மீனம் | Pisces 2022 Horoscope

ரொம்ப சிந்திப்பதை தவிர்ப்பது நல்லது. பணியில் பதட்டம் காணப்படும். நிதானத்தோடு செயல்பட வேண்டும். குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்கள் காணப்படும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எதிர்பாரா செலவுகள் வரும், பார்த்து பக்குவமாக செலவு செய்யுங்கள். ஆரோக்கியம் சுமாராக இருக்கும். எனவே, உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதால் பெரிய செலவுகளை தவிர்க்க முடியும். மேலும், உங்களுடைய கண்களை பரிசோதித்துக் கொள்வது நல்லது. தொழில் மந்தமாக தான் இருக்கும். செலவு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்