Sun ,May 26, 2024

சென்செக்ஸ் 75,410.39
-7.65sensex(-0.01%)
நிஃப்டி22,957.10
-10.55sensex(-0.05%)
USD
81.57
Exclusive

Tomorrow Rasi Palan in Tamil: வாய தொறந்தாலே பிரச்சன தான்.. ரொம்ப கவனமாக இருக்க வேண்டிய ராசியினர்.. ஜூன் 23,2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan June 22, 2022 & 13:00 [IST]
Tomorrow Rasi Palan in Tamil: வாய தொறந்தாலே பிரச்சன தான்.. ரொம்ப கவனமாக இருக்க வேண்டிய ராசியினர்.. ஜூன் 23,2022 ராசிபலன்!Representative Image.

Nalaiya Rasi Palan | Today Rasi Palan in Tamil | Inraiya Raasi Palan | Tomorrow Rasi Palan in Tamil 

நல்ல நேரம்:

காலை: 10.30 - 11.30 வரை

மாலை: இல்லை

Today Horoscope: மங்களகரமான சுபகிருது வருடம் ஆனி மாதம் 9 ஆம் நாள் வியாழக்கிழமை (2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி) நாளுக்கான மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம். 

மேஷம் | Aries 2022 Horoscope

ரொம்பநாளா அவதிப்பட்டு கொண்டிருந்து நோயில் இருந்து விடுபடுவீர்கள். மனதில் இருக்கும் எதிர்மறையான எண்ணங்களை நீக்குவது பலன் அளிக்கும். நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருந்தால் சாதகமான விளைவுகளைக் காணமுடியும். தாய்வழி மாமா அல்லது தாய்வழி தாத்தா மூலம் பணஉதவி கிடைக்க வாய்ப்புண்டு. பணிச்சுமை அதிகம் இருக்கும் பிளான் பண்ணி வேலையை செய்யலாம். அமைதி!

ரிஷபம் | Taurus 2022 Horoscope

உங்கள் விருப்பங்கள் எந்த தடையும் இன்றி நிறைவேறும் நாள். தொலைத்துரத்தில் இருந்து நல்ல செய்தி உங்களை தேடி வரும். இதனால் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. பணி சம்பந்தமான பயணம் மேற்கொள்வீர்கள். பணப்புழக்கம் சீராக இருக்கும். இருந்தாலும் செலவு செய்யும் போது கவனத்தோடு இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உங்கள் துணையின் சிறப்பு கவனத்தை பெறுவீர்கள். நற்செய்தி!

மிதுனம் | Gemini 2022 Horoscope

வேலை செய்யும் இடத்தில் நல்லபேர் கிடைக்கும். வீட்டில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். எதிர்பாரா செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். எதையும் நம்பிக்கையோடு செய்தால் வெற்றி உங்கள் கையில். எந்த நிலையிலும் பொறுமையை மட்டும் இழந்துவிட கூடாது. இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பணவரவு உண்டு. சேமித்து வைக்க முயற்சி செய்யுங்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத லாபங்கள் உங்கள் மனதை குளிர்விக்கலாம். மகிழ்ச்சி!

கடகம் | Cancer 2022 Horoscope

எதை செய்தாலும் கவனத்தோடு செய்ய வேண்டும். யார்கிட்ட பேசினாலும் வார்த்தையில் பொறுமையும் கவனமும் அதிகம் இருக்க வேண்டும். நீங்கபாட்டுக்கு ஏனோதானோ என்று பேசிவிட்டு பின்னாடி வருத்தப்பட வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக காணப்படும். டென்ஷன் ஆகாமல் பிளான் பண்ணி அதற்கேற்றவாறு வேலையை முடிக்க பாருங்கள். பெற்றோர்களிடத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனம்!

சிம்மம் | Leo 2022 Horoscope

முக்கியமான முடிவுகளை எடுப்பதாக இருந்தால் இன்று வேண்டாம். ஏனென்றால் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. பொறுப்புகள் அதிகமாக காணப்படும். கவனக்குறைவால் வேலை செய்யும் இடத்தில் சின்ன சலசலப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன்-மனைவி இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் ஏற்படும். நீங்க அட்ஜஸ் செய்து கொள்வது உங்களுக்கு நல்லது. வியாபாரம் சுமாராக இருக்கும். தாயின் உடல்நிலையில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. கவலை!

கன்னி | Virgo 2022 Horoscope

எதையும் சரியாக திட்டமிட்டு, நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பெற்றோரிடத்திலும், துணையுடனும் சில விஷயங்களில் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.  வியாபாரத்தில் நீங்கள் எதிர்ப்பார்த்த லாபம் இருக்கும். இது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும். யாருக்காவும் உங்களுடைய முயற்சியை விட்டுக்கொடுக்காதீர்கள். முயற்சி!


துலாம் முதல் மீனம் வரை உள்ள அடுத்த 6 ராசியின் தினசரி பலன் பற்றி அறிய இங்கே க்ளிக் செய்யவும்..


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்