Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Sirappu  Rasipalan: பேச்சால் பிர்ச்சனை உருவாக்கி தவிக்க போகும் ராசிக்காரர் இவர் தானா…. ஆகஸ்ட் 3, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 02, 2022 & 13:15 [IST]
Nalaya Sirappu  Rasipalan: பேச்சால் பிர்ச்சனை உருவாக்கி தவிக்க போகும் ராசிக்காரர் இவர் தானா…. ஆகஸ்ட் 3, 2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Sirappu  Rasipalan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 18 ஆம் நாள் புதன்கிழமை (03.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பல பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம் - மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது.

நாளைய ராசிபலன் (ஆகஸ்ட் 04.2022, வியாழக்கிழமை)

 நல்ல நேரம்

காலை: 9:15- 10:15 வரை

மாலை: 4:45- 5:45  வரை

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (3:08:2022, புதன்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

நேர்மையான நடத்தையால் சுற்றத்தாரின் மதிப்பை எளிதில் பெறும் உங்களுக்கு இன்றைய தினம் தொழிலில் சிறிய சலிப்பு உருவாகும். அதிகமான வேலைச்சுமை சோர்வை அளிக்கும். பிறரின் உதவி தேவைப்படும். மன உறுதியாக இருக்கும். பணப்புழக்கம் அதிகமாக இருக்காது. 

குடும்ப வாழ்க்கை இன்று நல்லிணக்கமாக அமையும், கணவன் மனைவி உறவு இன்பமாக இருக்கும். காதல் வாழ்க்கையில் உணர்ச்சிவசம் ஆகாமல் இருப்பது உறவை நீட்டிக்கும். உடல்நலத்தில் சிறிய கவனம் வேண்டும். பாராட்டு! 

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

உங்களின் தெளிவான மனதில் இன்று தேவையில்லாத சிந்தனைகள் குழப்பத்தை விதைக்கும் தொழிலில் முக்கியமான வேலைகளைக் கவனமாகக் கையாள வேண்டும். முக்கிய முடிவுகளைக் கலந்துரையாடி எடுக்க வேண்டும். நிதி நிலையில் அதிர்ஷ்டமான நாள், எதிர்பார்க்காத பண வரவு உண்டு.

குடும்ப வாழ்க்கை இன்பமாக இருக்கும், வெளிப்படையான பேச்சு குடும்பத்தில் அன்பை அதிகரிக்கும். நண்பர்களின் கருத்து தேவைப்படும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. குழப்பம்! 

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

பொறுமையாகக் காரியத்தைச் சாதிக்கும் உங்களுக்கு இன்று கற்பனைத் திறன் அதிகமாக உருவாகும், தொழில் ஸ்தானம் இயல்பாக இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி காண முடியும். போதிய பணம் கையில் இருக்கும். 

குடும்ப வாழ்க்கையில் அன்யோன்யம் அதிகமாகும், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலுத்த முடியும். வீட்டில் நிம்மதி இருக்கும். புத்துணர்ச்சியான மனநிலை சிறப்பான ஆரோக்கியத்தை அளிக்கும். கற்பனை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 5

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

அயராது முயற்சி செய்யும் தன்னம்பிக்கை நிறைந்த உங்களின் இன்றைய தினம் அமைதியாக நகரும், தொழிலில் வேலைகள் திருப்திகரமாக அமையும். உங்கள் வியாபாரம் சிறப்பாக நடக்கும். கணமான பண வரவு உண்டு.

இதுவரை வீட்டில் நிலவிய குழப்பத்தைத் தீர்க்கும் வழியை அறிவீர்கள், கணவன் மனைவி உறவில் இன்று குடும்ப தேவைகள் பற்றி ஆலோசனை அதிகமாக இருக்கும். குடும்பத்தினர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

பேச்சு சாதுரியத்தால் அனைவரையும் ஈர்க்கும் நீங்கள் பேச்சால் இன்று சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும், அலுவலகத்தில் சுமுகமான நிலை காணப்படாது. உங்கள் செயல் சிறிய குழப்பத்தை விளைவிக்கும். பணப்புழக்கம் குறைவாக இருக்கும்.

வீட்டில் இன்று நீங்கள் பொறுமை காக்க வேண்டும், உங்களால் குடும்பத்தில் வாக்குவாதம் உருவாகக் கூடும். நண்பர்களிடம் ஆதாயம் எதிர்பார்ப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விவேகம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்கள் இனிமையான பேச்சுக்கு இன்று நல்ல வரவேற்பு உண்டு, தொழிலில் வெற்றி பெறுவதற்கான வழி பிறக்கும். சுய தொழிலில்  செய்பவர்கள் இன்றைய தினம் சாதகமான நாளாகும், புதிய வாடிக்கையாளர் கிடைப்பர். நிதிநிலையில் அதிர்ஷ்டமான நாளாகும்.

குடும்ப வாழ்க்கையில் இன்று சுப நிகழ்ச்சி நடை பெற அதிக வாய்ப்புள்ளது. காதலர்களுள் அன்பு அதிகரிக்கும். விருந்தினர் வருகை உண்டு. சிறப்பான ஆரோக்கியம் உண்டு. அன்பு! 

அதிர்ஷ்ட நிறம்: சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்