Mon ,Apr 22, 2024

சென்செக்ஸ் 73,456.90
368.57sensex(0.50%)
நிஃப்டி22,282.80
135.80sensex(0.61%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த ராசியினர் பண விஷயத்தில் கவனத்தோடு இருப்பது நல்லது... 08.09.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan September 07, 2022 & 16:30 [IST]
Nalaya Rasi Palan: இந்த ராசியினர் பண விஷயத்தில் கவனத்தோடு இருப்பது நல்லது... 08.09.2022  ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி மாதம் 23 ஆம் நாள் வியாழக்கிழமை (08.09.2022), கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன்கள் பற்றி அறிய வேண்டுமா….? இந்த பதிவில் துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிக்கு உண்டான பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன. 

நல்ல நேரம்

காலை: 10:45 - 11.45  வரை

மாலை: இல்லை

மேஷம் - கன்னி ராசிபலன் (08.09.2022, வியாழக்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இதுவரை இருந்துவந்த மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அனுபவமுள்ள நபரின் ஆலோசனையில்லாமல் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். இன்று வேலை செய்யும் இடத்தில் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். 

நெருக்கமானவர்கள் மூலம் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.  துணையுடன் அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் சிலருக்கு பொறுப்பும், அதிகாரமும் மேம்படும். கீர்த்தி! 

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 4

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

எந்த செயல்களையும் எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் மேற்கொள்வீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும்.  இன்று மிகவும் வெற்றிகரமான நாள். நேர்மறை எண்ணங்களா இலக்குகளை எளிதாக அடைவீர்கள். பணியிடத்தில் திறமையாக செயல்பட்டு பாராட்டையும், பரிசையும் பெறுவீர்கள். 

சிலருக்கு தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். காதல் வாழ்க்கையில் அன்பும், பாசமும், அக்கறையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரித்து காணப்படும். அனுகூலம்! 

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 1

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். எந்த காரியத்திலும் அவசரம் காட்டாமல், புத்திசாலித்தனத்தை பயன்படுத்துவதன் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். இழுபறியாக இருந்துவந்த பணவரவு கிடைக்கும். துணையுடன் வீண் பேச்சை குறைத்துக் கொள்வது உத்தமம். இல்லையெனில், தேவையில்லாத சங்கடங்கள் உருவாகும்.

பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது, பண விஷயத்தில் கவனத்தோடு இருப்பது நல்லது. மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மறைமுக எதிர்களை அறிந்துக் கொள்வீர்கள்.  பொறுமை! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

கூட்டு வியாபாரத்தில் லாபம் இரட்டிபாகும். ஒரு சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உருவாகும். அனைத்து செயல்களிலும் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை. பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். நண்பர்களின் சந்திப்பு மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

துணையுடன் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தூரத்து சொந்தக்காரர்களிடமிருந்து சுபச்செய்திகள் வந்து சேரும். குடும்ப நலனுக்காக தேவையற்ற செலவுகளை செய்யலாம். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. ஜாக்கிரதை! 

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்களை சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போவது நல்லது. உங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தேடி வரும், பயன்படுத்துக் கொள்ளுங்கள். கனவு நிறைவேறும் நாள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். 

எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வது நல்லது. வீண் கோபத்தை தவிர்க்கவும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நிதிநிலைமை மந்தமாக இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. நன்மை! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

தன வரவு மூலம் சேமிப்பு அதிகரிக்கும்.  கடின உழைப்பிற்கு ஏற்ற பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி, ஆனந்தம் தாண்டவம் ஆடும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமாக சூழல் அமையும்.

சிலருக்கு பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டு. தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தை பொறுத்த வரை எந்த பிரச்சனையும் இல்லை. மகிழ்ச்சி! 

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம் 

அதிர்ஷ்ட எண்: 5

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்