Mon ,Apr 22, 2024

சென்செக்ஸ் 73,648.62
560.29sensex(0.77%)
நிஃப்டி22,336.40
189.40sensex(0.86%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த ராசியினர் தொடங்கும் எந்த காரியமும் வெற்றியில் முடியும்... 08.09.2022 ராசிபலன்!

Nandhinipriya Ganeshan September 07, 2022 & 16:20 [IST]
Nalaya Rasi Palan: இந்த ராசியினர் தொடங்கும் எந்த காரியமும் வெற்றியில் முடியும்... 08.09.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி மாதம் 23 ஆம் நாள் வியாழக்கிழமை (08.09.2022), கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன்கள் பற்றி அறிய வேண்டுமா….? இந்த பதிவில் மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிக்கு உண்டான பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன. 

நல்ல நேரம்

காலை: 10:45 - 11.45  வரை

மாலை: இல்லை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்று முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு சிறந்த நாள். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். உங்க திறமையை நிரூபிக்க சாதகமான நாள். கணவன்-மனைவி இடையே மகிழ்ச்சி பொங்கும். வாழ்க்கையில் வெற்றி பெற சின்ன சின்ன மாற்றங்கள் தேவை, அதை இன்றிலிருந்தே ஆரம்பியுங்கள்.

வரவு அதிகரித்து காணப்படும். அதனால் சேமிப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  தொடங்கும் எந்த காரியமும் வெற்றியில் முடியும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் ஏற்படும். ஆகமொத்தம் அதிர்ஷ்டமான நாள். அதிர்ஷ்டம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 2

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

கடின உழைப்பிற்கு ஏற்ற பலனை அடைவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். இன்றைய நாள் யாரிடம் பேசும்போதும் வார்த்தையில் அதிகம் கவனம் தேவை. இல்லையெனில் சிக்கல் உங்களுக்கே. இல்லற வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்க நீங்க சமநிலையோடு நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

நிதி நிலைமை சுமாராக தான் இருக்கும். வீண் செலவுகள் அதிகரித்து காணப்படும். எனவே, சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நிதானம்!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 1

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்று வழக்கத்தை விடவும் சுறுசுறுப்பாகவும் விவேகத்துடனும் காணப்படுவீர்கள். எந்த வேலையையும் விரைவில் செய்து முடிப்பீர்கள். மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் எந்த சவால்களையும் வென்றுவிடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரித்து காணப்படும். 

குடும்ப பொறுப்புகள் காரணமாக செலவுகள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை காணப்படும். எனவே, வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. சளி, இருமல் ஏற்பட வாய்ப்புள்ளதால் குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்கவும்.  விவேகம்!

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

குடும்பப் பிரச்சனைகளை மனைவியுடன் பகிர்ந்துக் கொள்வதன் மூலம் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். தைரியம், நம்பிக்கை மூலம் உயர்வான வெற்றியை அடைவீர்கள். எதிலும் அவசரம் காட்டாமல் பொறுமையாக திட்டமிட்டு சில செயல்களை செய்வதன் மூலம் சாதகமான பலன்களை பெறலாம். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.

இன்று பணவரவு அற்புதமாக இருக்கிறது. சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும் நாள். செலவு குறைந்து காணப்படுவதால் பணத்தை சேமிக்க வாய்ப்புள்ளது.  தேவையற்ற பேச்சை தவிர்ப்பது நல்லது. வரவு! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்றைய நாள் உங்களுடைய மனம் முழுவதும் எதிர்காலத்தை பற்றிய சிந்தனையால் நிறைந்திருக்கும். புது முயற்சிகளில் இறங்குவீர்கள். உணர்ச்சிவசப்படாமல், நிதானத்தோடு செயல்படுவதன் மூலம் பாதகமான விளைவுகளை தவிர்க்கலாம். வேலைபழு அதிகரித்து காணப்படும்.  பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள்.

வரவோடு செலவும் அதிகரித்து காணப்படும். இயந்திரம் சார்ந்த பணிகளில் லாபகரமான சூழல் அமையும். வாய்ப்புகள் தேடி வரும். ஒருசிலருக்கு வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். சிந்தனை! 

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சாம்பல்

அதிர்ஷ்ட எண்: 5

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல நாள். வர்த்தகம் தொடர்பான் பணிகளில் லாபம் மேம்படும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள் அல்ல. உங்களுக்கு பிடித்த சில விஷயங்களை விட்டுக்கொடுக்க நேரலாம். வராத கடன் வந்து சேரும்.

வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். துணையுடன் மெத்தமான பேச்சை குறைத்துக் கொள்வது, குடும்பத்தில் மகிழ்ச்சியை கொண்டு வரும். மருத்துவமணை செலவு அதிகரித்து காணப்படும். செலவு! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

துலாம் - மீனம் ராசிபலன் (08.09.2022, வியாழக்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்… 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்