Mon ,Apr 22, 2024

சென்செக்ஸ் 73,456.90
368.57sensex(0.50%)
நிஃப்டி22,282.80
135.80sensex(0.61%)
USD
81.57
Exclusive

Nalaya Sirappu Rasipalan: பிரச்சனையால் நிலை தடுமாறும் ராசிக்காரர்….இவர்தானா..? ஆகஸ்ட் 1, 2022 ராசிபலன்.!

Manoj Krishnamoorthi July 31, 2022 & 13:00 [IST]
Nalaya Sirappu  Rasipalan: பிரச்சனையால் நிலை தடுமாறும் ராசிக்காரர்….இவர்தானா..? ஆகஸ்ட் 1, 2022 ராசிபலன்.!Representative Image.

Nalaya Sirappu  Rasipalan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 16 ஆம் நாள் திங்கட்கிழமை (01.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பல பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம் - மீனம் வரை 6 ராசியின் பலன் கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 6:15- 7:15 வரை

மாலை: 4:45- 5:45  வரை

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (25.07.2022, திங்கள்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

நிதானமாக நடந்து இக்கட்டான சூழலிலும் வெற்றி காணும் உங்களுக்கு இன்று வெற்றி அடைய பல தடைகளைக் கடக்க வேண்டியதாக இருக்கும். வியாபாரத்தில் இன்று போட்டிகள் அதிகமாக இருக்கும். தொழிலில் உருவாகும் பிரச்சனையைச் சமாளிப்பதில் உங்கள் நேரம் ஓடிவிடும். நிதி நிலையில் செலவு தான் ஓங்கி இருக்கும், தேவையற்ற செலவைக் குறைக்க முயலுவீர்கள்.

வீட்டில் உங்கள் பேச்சால் சில மாற்றங்கள் நிகழும், பெற்றோரின் அறிவுரையால் மனக் குழப்பம் நீங்கும். காதல் வாழ்க்கை இன்பமாக நகரும். உடல்நலத்தில் கவனம் காட்ட வேண்டும், மருத்துவ செலவு அதிகமாகும். தடை!

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் 

அதிர்ஷ்ட எண்: 2

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

தெளிவான மனநிலைக்கு சொந்தக்காரரான உங்களுக்கு இன்று புதிய முயற்சிகளால் சிறிய குழப்பம் உருவாகும். அலுவலகத்தில் சக பணியாளர்களிடம் மோதல் ஏற்படும். நிதி நிலையில் பாதிப்பு இல்லை.

குடும்ப வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் புரிதல் அதிகமாகும்.  காதல் வாழ்க்கை நட்பான அணுகுமுறை அதிகமாகும். ஆரோக்கியத்தில்  சிறிய பிரச்சனை இல்லை. தேர்ச்சி!  

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

தெளிவான நடத்தையால் பிறரைக் கவரும் உங்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டிய நாளாகும். மேலும் தொழில் சார்ந்த பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சிக்காக அதிகம் உழைக்கும் நிலை உருவாகும். நிதி நிலையில் செலவு அதிகமாகும்.

குடும்ப வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து போக வேண்டும். கணவன் மனைவிக்கு இடையில் சில வாக்குவாதம் உருவாகும். காதல் வாழ்க்கையில் பயணம் மேற்கொள்ளும் நிலை உருவாகும். ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட  பிரச்சனை உருவாகும். அலைச்சல்!

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

அமைதியான குணமும் கலகலப்பான  மனதும் கொண்ட மகர ராசிக்காரரே உங்களுக்கு இன்றைய நாள் வெற்றிகரமான நாளாகும். அலுவலகத்தில் வழக்கமான வேலையை உங்கள் திறமையால் விரைவாக முடித்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. கணமான பண வரவு உண்டு. 

குடும்ப வாழ்க்கை இன்பமாக இருக்கும், கணவன் மனைவி உறவில் அன்பு அதிகமாக இருக்கும். காதல் வாழ்வில் நல்லிணக்கமாக நட்பு இருக்கும். நண்பர்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும், நண்பர்களுடன் ஆனந்தமாகப் பொழுதைக் கழிப்பீர். உடல்நலத்தில்  சிறிய கவனம் வேண்டும். வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

சாதுரியமான குணத்துக்கு சொந்தக்காரரான உங்களின் நடவடிக்கை மற்றவரைக் குழப்பமடையச் செய்யும்,  எதிர்காலத்திற்கான திட்டங்களைத் தயார் செய்ய இன்று சரியான நாளாகும். நிலுவையில் உள்ள பணப் பிரச்சனையைத் தீர்க்க புத்துணர்ச்சியுடன் உழைப்பீர்கள்.  வியாபாரம் சிறப்பாக நடக்கும்.

இல்லற வாழ்க்கை இன்பமாக நகரும். காதல் வாழ்வில் வெளிப்படையான பேச்சு நல்ல புரிதலை உருவாக்கும். மாணவர்கள் நேரத்தை வீணாக்காமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நன்மை!   

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம் 

அதிர்ஷ்ட எண்: 3

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

முகத்தில் புன்னகையுடன் எப்போதும் இருக்கும் உங்களுக்கு இன்றைய தினம் ஆன்மீக எண்ணம் அதிகமாக இருக்கும், இறைப்பணியில் அதிக நேரம் செலுத்துவீர்கள். அலுவலகத்தில் சக பணியாளருடன் நல்ல உறவு இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

காதல் வாழ்வில் பொறுமையாக இருப்பது பிரச்சனை அளிக்காது. கணவன் மனைவி உறவு அமைதியாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 6

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்