Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: சந்தோஷமாக பொழுதைக் கழிக்க போகும் அதிர்ஷ்டசாலி இவரா….. ஆகஸ்ட் 1, 2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi July 31, 2022 & 12:50 [IST]
Nalaya Rasi Palan: சந்தோஷமாக பொழுதைக் கழிக்க போகும் அதிர்ஷ்டசாலி இவரா….. ஆகஸ்ட் 1, 2022 ராசிபலன்..!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 16 ஆம் நாள் திங்கட்கிழமை (1.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பல பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 6:15- 7:15 வரை

மாலை: 4:45- 5:45  வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

சுகவாசிகளாக வாழ நினைக்கும் உங்களுக்கு இன்றைய தினம் சுகமான நாளாக அமையும், செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்த உங்களுக்கு இன்று தொழில் ஸ்தானத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் பெரியளவு நஷ்டம் இருக்காது. நிதி நிலை மிதமான பண வரவு இருக்கும்.

 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், கணவன் மனைவி உறவில் புரிதல் அதிகமாகும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கல்வி நிலையில் சிறிய கவன சிதறல் ஏற்படும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உங்களுக்கு தொழிலில் சக பணியாளரின் உதவி மிகவும் ஆறுதலாக அமையும். புதிய திட்டங்களை தொழிலில் ஏற்படுத்தி தொழிலை முன்னேற்றமடைய செய்வீர்கள். சுய தொழில் செய்பவர்களுக்கு இன்று தொழில் வளர்ச்சி பெறும் வாய்ப்பு கிடைக்கும். செல்வ நிலையில் செலவு தான் ஓங்கி இருக்கும்.

குடும்ப வாழ்க்கையில் சிறிய விரிசல் உருவாகும், கணவன் மனைவி உறவில் பொறுமையாக இருப்பது நல்லது. காதல் வாழ்க்கையில் நட்பான அணுகுமுறை நல்ல நெருக்கத்தை அளிக்கும். ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சனை இல்லை. நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 6

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

நம்பிக்கை தன்மையின் முழு உருவமான உங்களுக்கு இன்று நிம்மதியான நாளாகும், எதிர்பார்த்த உதவி தக்க நேரத்தில் கிடைக்கும். தொழில் ஸ்தானம் சிறப்பாக உள்ளது. வியாபாரத்தில் வழக்கமான நிலை தான் நிலவும். பண வரவு உண்டு.

குடும்ப வாழ்க்கையில் அமைதியான நிலை இருக்கும், கணவன் மனைவி உறவில் நகைச்சுவையான பேச்சு மகிழ்ச்சியை அதிகமாக்கும். நண்பர்களின் மூலம் கிடைக்கும் உதவி மிகப்பெரிய உதவியாக இருக்கும்.  உடல்நலத்தில் கவனம் வேண்டும், கால் சம்பந்தப்பட்ட பிரச்சனை அதிகமாக இருக்கும். சுபம்!   

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை   

அதிர்ஷ்ட எண்: 2

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

பணிவான குணத்தால் அனைவரையும் ஈர்க்கும் குணம் கொண்ட உங்களுக்கு இன்று மிகப்பெரிய உதவி கிடைக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி காண முடியும். அறிமுகமில்லாத மனிதரின் அறிவுரை தொழிலில் நல்ல பலன் அளிக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு இன்று தொழில் ஒரு நிலையை அடையும். நிதி நிலை செலவு அதிகமாகும்.

குடும்ப வாழ்க்கையில் எதிர்காலம் பற்றிய சிந்தனை தோன்றும், கணவன் மனைவி உறவில் ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். காதல் வாழ்க்கை திருமண பந்தமாக மாற்றும் முயற்சி இன்று எடுக்கலாம். கல்வி ஸ்தானம் ஓரளவு நன்றாக உள்ளது, புதிய கலைகள் கற்க இன்று எடுக்கும் முயற்சிக்கு உதவி கிடைக்கும். உடல்நலத்தில்  தூக்கமின்மை பிரச்சனையால் ஆரோக்கியம் குன்றும் வாய்ப்புள்ளது. ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்  

அதிர்ஷ்ட எண்: 9

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

வெளிப்படையான பேச்சுக்கும் நேர்மையான நடத்தைக்கும் சொந்தக்காரரான உங்களுக்கு இன்று செய்யும் காரியம் சாதகமாக அமையாது. திட்டமிட்ட வேலையை செய்ய சற்று கால தாமதம் ஆகும். வியாபாரத்தில் வாடிக்கையாளரின் தேவை அறிந்து கொள்ளுவீர்கள். செல்வ நிலையில் பாதிப்பு இல்லை, நிலையான வருமானம் இருக்கும்.

கணவன் மனைவி உறவு சந்தோஷமாக நகரும். பெற்றோரின் மூலம் ஆதாயம் பிறக்கும். தந்தை வழி சொந்தத்தின் மூலம் கிடைக்கும் உதவி வியாபாரத்தை விரிவுபடுத்த உதவும். ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டும். தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 1

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

தன்மையான பேச்சால் புதிய மனிதரைக் கூட நண்பர்களாக மாற்றக்கூடிய உங்களுக்கு இன்று தொழிலில் எதிர்பார்த்த மாற்றம் நிறைவேறும். அலுவலகத்தில் சாதகமான சூழல் நிலவும். நிதி நிலையில் திருப்திகரமான பணப்புழக்கம் கையில் இருக்கும்.

 

வீட்டில் சில மாற்றங்கள் நிகழும், பெற்றோரின் செயல் பல நாள் ஆசை நிறைவேற்றும். மாணவர்களின் கல்வி நிலை ஓரளவு நன்றாக உள்ளது.  ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. விருப்பம்! 

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 1

Part 2: துலாம்- மீனம் ராசிபலன் (01.08.2022, திங்கள்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்