Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : மீன ராசியில் நிலையால் மற்ற ராசிக்கும் இப்படியொரு பலனா...? ஆகஸ்ட் 14 ராசிபலன் 2022!

Manoj Krishnamoorthi August 13, 2022 & 12:30 [IST]
Nalaya Rasi Palan : மீன ராசியில் நிலையால் மற்ற ராசிக்கும் இப்படியொரு பலனா...? ஆகஸ்ட் 14 ராசிபலன் 2022!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 29 ஆம் நாள் சனிக்கிழமை (14.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 03:15- 04:15 வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (14.08.2022, ஞாயிற்றுக்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்களின் சாதுரியமான நடவடிக்கை இன்றைய தினம் நன்மை அளிக்கும், இன்று வேலைகள் அதிகமாக இருக்காது. வியாபாரம் இயல்பு நிலையில் இருக்கும். மானவர்கள் கல்வி ஆர்வமாக செயல்படுவர்.  சுப செலவுகள் அதிகமாக இருக்கும். 

குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும், பொழுது போக்கு அம்சங்களில் நேரம் செலுத்த முடியும். காதல் வாழ்வில் நட்பான அணுகுமுறை உருவாகும். ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்:  கருப்பு

அதிர்ஷ்ட எண்: 5

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் தொழில் கவலைகள் இல்லாமல் சற்று ஓய்வு கிடைக்கும் நாளாக அமையும், பயணம் செய்ய மனம் விரும்பும். வியாபாரத்தில் புதிய முயற்சி எடுப்பீர்கள், அது நல்ல பலனளிக்கும். போதுமான பணம் கையில் இருக்கும்.

குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள், உங்களின் பேச்சு சிறிய ஊடலை உருவாக்கினாலும் பெரியதாக பாதிக்காது. காதல் வாழக்கையில் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். அறிமுகமில்லாத மனிதர் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் காட்ட வேண்டும். யோகம்!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்றைய தினம் கிடைக்கும் எதிர்பாராத வெற்றி மிகவும் ஆனந்தமாக்கும், தொழிலில் சக பணியாளரின் ஒத்துழைப்பு சிறப்பாக பணியாற்ற தூண்டும். பணப் பரிவர்த்தனையில் கவனத்துடன் செயல்பட வேண்டும், தேவையற்ற செலவுகள் வரும். 

குடும்ப வாழ்வில் நிம்மதி இருக்கும், கணவன் மனைவி உறவில் செலவு பற்றிய உரையாடல் இருக்கும். காதல் வாழ்வு சரியான முடிவு பெறும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உங்களின் கலகலப்பான குணத்தால் தொழிலில் நட்பான சூழலை உருவாக்கிவிடுவீர், பணியிடத்தில் வேலைகள் மும்முரமாக நடைபெறும். வியாபாரத்தில் சிறப்பான பலன் கிடைக்கும். பண வரவு உண்டு, செலவு குறைக்க முயற்சிகள் எடுக்கப்படும்.

குடும்ப வாழ்க்கையில் பொறுமை காப்பது, இன்று பிரச்சனை இல்லாமல் வாழ வழி வகுக்கும். கணவன் மனைவி உறவில் வாக்குவாதம் சண்டையாக மாறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.  உடல்நலத்தில் பெரிய பிரச்சனை இல்லை. தியானம், உடற்பயிற்சி மீது ஆர்வம் தோன்றும். சாந்தம்!

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்:  2

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்கள் கையில் இருக்கும் பணப்புழக்கம் தேவைகளைப் பூர்த்தி செய்ய தூண்டும். தொழிலில் வேலைகள் பெரியதாக இருக்காது. வியாபாரத்தில் தடைகள் இல்லாமல் சுமுகமாக தொழில் நடக்கும். நல்ல பண வரவு உண்டு. 

வீட்டில் அனைவருடனும் சந்தோஷமாக பழகுவீர்கள், குடும்பத்தில் நிம்மதி அதிகமாகும். கணவன் மனைவி இனிமையாக இருக்கும். காதல் வாழ்வில் அன்பான வார்த்தைகள் புரிதலை உருவாக்கும். உடல்நலம் நன்றாக உள்ளது. வரவு! 

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 7

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் நீங்கள் புதியதாக எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பது நன்மை அளிக்கும், தொழிலில் தாமதம் ஏற்படும். வேலைகள் நிலுவையாகும். அதிக பணிகள் தொழிலில் சலிப்பை அளிக்கும். வருமானத்தில் பிரச்சனை இல்லை, ஆனால் விரைய செலவுகள் அதிகமாகும். 

குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறிய வாக்குவாதம் உதிக்கும், கணவன் மனைவி உறவில் கருத்து பரிமாறல் குறையும். காதலர்களுள் சண்டைகள் வரும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் வேண்டும், முக்கியமாக உணவு பழக்கத்தில் கவனம் வேண்டும். எதிர்ப்பு! 

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்