Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : நட்பாக பழகுவதில் இந்த 3 ராசிக்காரருக்கு நிகர் யாருமில்லை.... ஆகஸ்ட் 14 ராசிபலன் !

Manoj Krishnamoorthi August 13, 2022 & 12:15 [IST]
Nalaya Rasi Palan : நட்பாக பழகுவதில் இந்த 3 ராசிக்காரருக்கு நிகர் யாருமில்லை.... ஆகஸ்ட் 14 ராசிபலன் !Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 29 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (14.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 03:15- 04:15 வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் தொழிலில் இருக்கும் நட்பான அணுகுமுறை பல புதிய கருத்துகளை அளிக்கும், மேலும் சக பணியாளரிடம் அன்பாக நடந்து கொள்ளுவீர்கள், உங்களின் துணிச்சலான பேச்சு இன்று வியாபாரத்தில் நன்மை அளிக்கும், நிதி நிலையில் பிரச்சனை இல்லை, சுமுகமாக இருக்கும்.  

குடும்ப வாழ்க்கை இன்று அமைதியாக நகரும், கணவன் மனைவி உறவு அன்பாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை. நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

உங்களின் மனதில் இருக்கும் அச்சம், தொழிலில் கடுமையாக உழைக்கத் தூண்டும். பணியிடத்தில் இன்று சிறப்பாக வேலை நடக்கும். புதிய மனிதர்களின் புதிய வாய்ப்பு கிடைக்கும் யோகம் உள்ளது. பண வரவு இருக்கும் ஆனால் செலவு அந்த அளவுக்கு வந்துவிடும். 

குடும்ப வாழ்க்கை ஓரளவு நன்றாக உள்ளது, கணவன் மனைவி உறவில் சிறிய வாக்குவாதம் வரும். நண்பர்களின் சிறிய மன வருத்தம் ஏற்படும். ஆரோக்கியத்தில் சிறிய பிரச்சனை உருவாகும், மருத்துவ செலவு செய்ய வேண்டியதாக இருக்கும். பயம்!   

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் சில சம்பவங்கள் நடந்தேறும் குறிப்பாக பணி நிமித்தமாக சிலம் வாக்குவாதம் உருவாகும். புதிய பணிகள் எதுவும் இன்று தொடங்க வேண்டும். நிதி நிலையில் பிரச்சனை இல்லை, சீரான பண வரவு உண்டு. 

குடும்ப வாழ்க்கையில் இன்றைய தினம் நன்றாக உள்ளது, கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து செல்லுவீர்கள். காதல் வாழ்வில் பொறுமை காப்பது, புதிய பிரச்சனையை உருவாக்காது. கல்வி ஸ்தானத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். உடல்நலம் நன்றாக உள்ளது. பொறுமை! 

அதிர்ஷ்ட நிறம்: இளமஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

உங்களுக்கு நடக்கும் சாதகமான மாற்றம் வருமானத்தை உயர்த்தும், குறிப்பாக சுய தொழில் புரியும் கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சிறப்பான நாளாக அமையும்.  உங்களின் செல்வ நிலையில் கணிசமான வரவு இருக்கும், வருங்கால தேவைக்காக சேமிப்பதற்கு இதுவே சரியான தருணமாக அமையும். 

வீட்டில் ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழ்வீர், இன்றைய தினம் உங்கள் காதல் வாழ்வில் அமைதி இருக்க வேண்டும். நண்பர்களின் மூலம் ஆதாயம் உண்டு. உடல்நலத்தில் கால் சம்பந்தப்பட்ட தொல்லைகள் பிறக்கும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 3

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று உங்களுக்கு பல நாட்களாக முயற்சி செய்தும் தோல்வி அடைந்த காரியம் வெற்றியாக மாறும், பணியிடத்தில் உங்களுக்கு நல்ல அங்கிகாரம் கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக அமையும், செலவைக் குறைத்து கொள்வது நன்மை அளிக்கும். 

குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும், ஒற்றுமை அதிகமாகும். நண்பர்களுடன் சந்தோஷமாக உரையாடுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 4

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்களின் ராசிக்கு இன்றைய நாள் நலமான நாளாக இருக்கும், உங்களின் தனித்திறமையால் இன்றைய தினம் அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கும், சிலருக்கு முக்கிய பதவி கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. தைரியமான நடவடிக்கை உங்களை வியாபாரத்தில் அடையாளம் காட்டும். நிதி நிலையில் நல்ல பணப்புழக்கம் இருக்கும். 

குடும்ப வாழ்க்கையில் அன்பு அதிகமாகும், குடும்பத்தினரின் நலத்தில் அதிக அக்கறை எடுப்பீர்கள். நண்பர்களின் உதவி காதல் வாழ்வில் நன்மை அளிக்கும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. நலம்!  

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (14.08.2022, ஞாயிற்றுக்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்