Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இன்று அமைதியான வாழ்க்கை வாழும் அதிர்ஷ்டக்காரர்கள்… இவர்கள் தான்! 15.08.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 14, 2022 & 12:30 [IST]
Nalaya Rasi Palan : இன்று அமைதியான வாழ்க்கை வாழும் அதிர்ஷ்டக்காரர்கள்… இவர்கள் தான்! 15.08.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 30 ஆம் நாள் திங்கட்கிழமை (15.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 06:15- 07:15 வரை

மாலை: 04:45- 05:45  வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (15.08.2022, திங்கட்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்களின் திறமையான அணுகுமுறை தொழிலில் பல புதிய வாய்ப்புகளை உருவாக்கக் கூடும், தொழில் ரீதியாக இன்று பயணம் செய்ய வேண்டியதாக இருக்கும். வியாபாரத்தை வளர்ச்சி செய்ய இன்றைய தினம் பல வழிகள் பிறக்கும்.  கையில் தேவையான அளவு பணம் நிற்கும்.  தேவையற்ற செலவுகள் இருக்காது.

குடும்ப வாழ்க்கை இன்பமாக இருக்கும். உங்களின் அன்பான பேச்சு வார்த்தை நல்ல புரிதலை அளிக்கும். காதல் வாழ்க்கை இன்பமாக இருக்கும். ஆன்மீக ஸ்தலத்திற்கு செல்ல மனம் நினைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும், வயிறு சம்பந்தப்பட்ட தொல்லைகள் வரும். பயணம்!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

பல நாட்களாக முயற்சி செய்தும் வெற்றி காண முடியாத காரியத்தை மீண்டும் முயற்சி செய்யலாம் என்ற எண்ணம் தோன்றும், இன்று பிடிவாத குணம் அதிகமாக இருக்கும். பணியில் ஒவ்வொரு செயலையும் நிதானமாக செய்வீர்கள், துல்லியமான அசையும் கவனிக்கும் வண்ணம் உங்கள் கவன ம் இருக்கும். நிதி நிலையில் பெரிய பிரச்சனை இல்லை, குடும்ப செலவுகள் இருக்கும்.

வீட்டில் அதிக நேரம் செலுத்த முடியாது, இன்று பொறுமையாக இருந்து வீட்டில் காரியத்தை சாதித்து கொள்வீர்கள். கணவன் மனைவி உறவி நிம்மதி உருவாகும். மனதிற்கு நெருக்கமானவரின் ஆசை நிறைவேற்றுவீர்கள். ஆரோக்கியத்தில் பிரச்சனை வராது. விவேகம் !

அதிர்ஷ்ட நிறம்:  நீலம்

அதிர்ஷ்ட எண்: 9

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

பயணம் செய்ய ஆர்வ்ம் கொண்ட உங்களுக்கு இன்று சிறிய பயணமும் சந்தோஷமாக்கும், வெளியிடத்தில் சில அனுபவங்களை கற்று கொள்ளுவீர்கள். வியாபாரத்தில் இன்று நல்ல அனுபவம் கிடைக்கும். கையில் ஓரளவு பணம் நிற்கும்.  திறமையாக பணியாற்றி நல்ல மதிப்பை பெற்று கொள்வீர்கள். 

குடும்ப வாழ்க்கை மீது கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும், குடும்பஸ்தர்களுக்கு பிள்ளைகளின் தேவையை பூர்த்தி  செய்ய சற்று சிரமாக இருக்கும். காதல் வாழ்வில் வெளியே செல்லும் வாய்ப்பு உள்ளது.  நண்பர்களின் மூலம் மகிழ்ச்சி பிறக்கும். ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டும். களிப்பு!  

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உங்களின் அயராது உழைக்கும் குணம் இன்று சிறிய ஏமாற்றத்தைக் காணும் , பணியிடத்தில் உங்கள் வேலைக்கான அங்கீகாரம் கிடைக்காது. தொழிலில் ஒரு சலிப்பு ஏற்படும். பணத்தை சேமிக்க முயலவும் , தேவையற்ற செலவுகள் வரும். 

குடும்பத்தினருடன் அன்பாக நடந்து கொள்ளுவீர்கள், வீட்டில் பெரியவர்களுக்கு சில உதவிகள் செய்ய வேண்டியதாக இருக்கும். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்காது. ஆரோக்கியத்தில் சிறிய கவனம் வேண்டும், வயிற்று வலி போன்ற பிரச்சனை தொல்லையாக மாறும். ஏமாற்றம்! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 7 

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களின் கடுமையான உழைப்பு நம்பமுடியாத சாதனைகளைப் புரியும், பணியிடத்தில் உங்கள் மீது நம்பிக்கை பிறக்கும். வியாபாரம் செய்யும் கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சிறப்பாக அமையும், எதிர்பார்ப்பதை விட அதிக லாபம் கிடைக்கும். பல நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்ளுவீர்கள்.

குடும்ப வாழ்க்கையில் கவனம் கொள்ள வேண்டும், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பிரச்சனை வரும். கணவன் மனைவி உறவு அன்பாக இருக்கும். காதல் வாழ்க்கை திருமண பந்தமாக மாறும் வாய்ப்புள்ளது. உங்கள் ஆரோக்கியம் நன்றாக உள்ளது. சாதனை! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 5 

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்களின் ராசிக்கு இன்றைய தினம் இன்பமாக அமையும், மேலும் உங்கள் சாதுரியமாக உழைக்கும் குணத்தை அனைவரும் மதிப்பர். உங்களின் திறமையை வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பம் அமையும். பண விசயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும், கடன் கொடுக்க வேண்டாம்.

குடும்பத்துடன் வெளியே பொழுதுபோக்கு தளத்தில் நேரத்தை செலவிட விரும்புவீர்கள், உங்கள் தன்மையான பேச்சு சுற்றத்தாரை அன்பாக வைத்து கொள்ளும். உணவு பழக்கத்தால் ஆரோக்கியத்தில் குறைபாடுகள் ஏற்படும். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்: நீலம் 

அதிர்ஷ்ட எண்: 6

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்