Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரர் மட்டும் உஷாரா இல்லை என்றால் மொத்தமும் போயிரும்… ஆகஸ்ட் 15, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 14, 2022 & 12:00 [IST]
Nalaya Rasi Palan: இந்த ராசிக்காரர் மட்டும் உஷாரா இல்லை என்றால் மொத்தமும் போயிரும்… ஆகஸ்ட் 15, 2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 30 ஆம் நாள் திங்கட்கிழமை (15.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 06:15- 07:15 வரை

மாலை: 04:45- 05:45  வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்கள் சுறுசுறுப்பான சுபாவத்தால் அனைத்து வேலையும் விரைவாக முடிக்கும் மேஷ ராசிக்காரரே இன்றைய தினம் வழக்கமான வேலை கூட கால தாமதமாகும். தொழிலில் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக வியாபாரத்தில் கவனக்குறைவால் சில வாய்ப்புகளைத் தவறவிடுவீர்கள். பண வரவு இருந்தாலும் கையில் இருக்கும் செல்வம் நிற்காது.

குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும், கணவன் மனைவி உறவில் முக்கியமான உரையாடல் இருக்கும். காதல் வாழ்க்கையில் வெளிப்படையான பேச்சு  சிறிய பிரச்சனை அளிக்கும்.  தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் தொழிலில் கிடைக்கும் வாய்ப்பு மிகவும் உதவிக்கரமாக இருக்கும், மேலும்  சுய தொழில் செய்பவர்களுக்கு கிடைக்கும் உதவி மறக்க முடியாததாக இருக்கும். இன்றைய தினம் தொழில் ஸ்தானத்தில் முக்கியமான நாளாகும். பண பரிவர்த்தனை சிறப்பாக இருக்கும். 

குடும்ப வாழ்க்கையில் சிறிய பொறுமை தேவை, கணவன் மனைவி உறவில் வருங்காலம் பற்றிய உரையாடல் அதிகமாக இருக்கும். நண்பர்களிடமிருந்து உதவி கிடைக்கும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் வேண்டும். கல்வி ஸ்தானம் நன்றாக உள்ளது.  ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

உங்களின் புதுமையான சிந்தனை இன்று தொழிலில் நல்ல வளர்ச்சி அளிக்கும், புதுமையான சிந்தனையை செயலாக்க சக பணியாளரின் உதவி தேவைப்படும். அலுவலகத்தில் ஒற்றுமையாக  பணியாற்றுவீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும், தொழில் முதலீடு பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். 

குடும்ப வாழ்க்கையில் அன்பாக நடந்து கொள்ளுவீர்கள், வருங்காலத்தைப் பற்றிய யோசனை குடும்பத்தினரின் மீது அக்கறை காட்டத் தூண்டும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் காட்ட வேண்டும். சிந்தனை! 

அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்

அதிர்ஷ்ட எண்: 4

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

உங்களின் நிலுவை வேலைகளை முடிக்க இன்றைய தினம் கடுமையாக உழைப்பீர்கள், தொழிலில் அதிக நேரம் செலவிட வேண்டியதாக இருக்கும். வியாபார ரீதியாக சில இடங்களுக்கு அலைய வேண்டியதாக இருக்கும். கையில் கொஞ்சம் பணம் சேரும்.

குடும்பத்தில் இன்று சில முக்கிய பொறுப்புகள் சேரும், பெற்றோருடன் கருத்தை பரிமாறிக் கொள்வீர்கள். கணவன் மனைவி உறவில் வெளிப்படையான பேச்சு இன்பம் அளிக்கும். காதல் வாழ்வில் அன்பான தகவல் பரிமாற்றம் இருக்கும். ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய  நேரிடும். உழைப்பு!

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு 

அதிர்ஷ்ட எண்: 6

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று நீங்கள் சிலரின் உதவியை எதிர்பார்க்க நேரிடும், தனியாக எந்த வேலையும் செய்து வெற்றி காண்பது கடினமாக அமையும். தொழில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் இன்று பண இழப்பு நேரிடும், வியாபார ரீதியான முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டும். 

குடும்ப வாழ்க்கையில் பொறுமை காக்க வேண்டும், அமைதியாக இருப்பது யார் மனதையும் காயப்படுத்தாது.  மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும். தூக்கமின்மை  சிறிய தொல்லையாக இருக்கும். உதவி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்களின் திடமான திட்டம் இன்று நல்ல வளர்ச்சி கொண்டாலும் உங்கள் மனம் ஏற்று கொள்ளும் வெற்றியாக இருக்காது. தொழிலில் சக பணியாளரின் ஒத்துழைப்பு வேலையை மூம்பரமாக செய்ய தூண்டும். பண வரவு இருக்கும் ஆனால் பணத்தை சேமிக்க முடியாது. 

இல்லற வாழ்வில் சில சண்டைகள் உதிக்கும், கணவன் மனைவி உறவில் விரிசல் அதிகமாகும். காதல் வாழ்வில் அதிகமான எதிர்பார்ப்பு ஏமாற்றம் அளிக்கும். ஆரோக்கியத்தில் சிறிய அக்கறை காட்ட வேண்டும். பேராசை! 

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (15.08.2022, திங்கட்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்