Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இன்று இருக்கும் செலவு இந்த 3 ராசிக்காரரே விழிபிதுங்க செய்யும்... ஆகஸ்ட் 16, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 15, 2022 & 12:00 [IST]
Nalaya Rasi Palan : இன்று இருக்கும் செலவு இந்த 3 ராசிக்காரரே விழிபிதுங்க செய்யும்... ஆகஸ்ட் 16, 2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 31 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (16.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை:  04:45- 05:45 வரை 

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்களின் திறமையான பேச்சற்றால் இன்றைய தினம் தொழிலில் நல்ல வளர்ச்சி அளிக்கும்.  வியாபாரத்தில் ஏற்படும் லாபம் செல்வ நிலையை உயர்த்தும் ஆனால் செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவு இருக்கும். 

கணவன் மனைவி உறவு இன்பமாக இருக்கும், உங்களின் பேச்சு குடும்பத்தினரை மகிழ்ச்சியடைய செய்யும். காதல் வாழ்வில் நெருக்கம் அதிகமாகும். குடும்பத்தினரின் ஆசை நிறைவேற்ற முடியும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. செலவு! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

தெளிவாக திட்டமிடும் உங்களின் மனநிலை இன்று சிறிய தடுமாற்றம் கொள்ளும், தொழிலில் எடுக்கும் முயற்சி சிறிய தோல்வி ஏற்படும். ஆனால் மீண்டும் முயற்சி செய்யும் உத்வேகம் ஒருவரின் ஆலோசனையில் கிடைக்கும். பண வரவு ஓரளவு நன்றாக உள்ளது. செலவு பெரியதாக இருக்காது. 

குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள், கணவன் மனைவி உறவில் அன்பு அதிகரிக்கும். காதல் வாழ்வில் அமைதி காக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டும். முயற்சி!  

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 2

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

உங்களின் ஆன்மீக எண்ணம் இன்று மேலோங்கி இருக்கும், தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதியதாக வேலை தேடும் மிதுன ராசிக்காரருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கையில் நல்ல பணப்புழக்கம் இருக்கும். 

குடும்பத்தில் முக்கிய பொறுப்பு கிடைக்கும், கணவன் மனைவி உறவில் சந்தோஷமான உரையாடல் இருக்கும். நண்பர்களுடன் வெளியே செல்லுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும், தூக்கமின்மை பெரிய பிரச்சனையாக அமையும். புகழ்! 

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் இருக்கும் வேலைச் சுமை உங்களை அலைச்சலாக்கும்,   உங்களின் அமைதியான சுபாவம் சக பணியாளரின் ஒத்துழைப்பு  பெறும். சுய தொழில் செய்பவர்களுக்கு இன்று தொழிலை நிலைநிறுத்த அலைய வேண்டியதாக இருக்கும். செல்வ நிலையில் செலவு அதிகமாக இருக்கும்.

குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும், பெற்றோர் வழியில் நன்மைகள் நடக்கும். உடல் சோர்வாக இருக்கும், ஓய்வு தேவைப்படும். அலைச்சல்!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 6

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

தன்னம்பிக்கை குணம் நிறைந்த உங்களுக்கு இன்றைய தினம் மந்தமான நாளாகும், தொழிலில் புதிய முயற்சிகள் எடுப்பது சரியாக அமையாது. வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்காது. மனதில் இருக்கும் தடுமாற்றம் அமைதியாக இருக்க செய்யும். 

வீட்டில் பொறுமை காக்க வேண்டும், பெற்றோருடன் சில கருத்து வேறுபாடு உதிக்கும். குடும்பத்தினர் மீது அன்பு அதிகமாகும். ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் தோன்றி மறையும். குழப்பம்! 

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்களின் திருப்தியடையாத குணம் இன்று பிறர் செய்யும் செயலை மீண்டும் செய்யத் தூண்டும். தொழிலில் முக்கிய பொறுப்பு கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியுடன் மோதல் ஏற்படும். நிதி நிலையில் கவனம் காட்ட வேண்டும், கட்டுப்படுத்த முடியாத செலவு வரும். 

குடும்பத்தினருடன் சண்டை செய்வீர்கள், கணவன் மனைவி உறவில் சிறிய விரிசல் உருவாகும். உறவினரின் செயல் உங்களைக் கோபமடைய செய்யும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். சினம்! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (16.08.2022, செவ்வாய்க்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்