Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு எதிர்பார்த்த அமைதியான வாழ்க்கை தான்... ஆகஸ்ட் 16 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 15, 2022 & 12:30 [IST]
Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு எதிர்பார்த்த அமைதியான வாழ்க்கை தான்... ஆகஸ்ட் 16 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 31 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (16.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 04:45- 05:45 வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (16.08.2022, செவ்வாய்க்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்களின் நட்பான சுபாவத்துக்கு இன்றைய தினம் தக்க மதிப்பு கிடைக்கும். அலுவலகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். சுய தொழில் புரியும் துலாம் ராசிக்காரர்கள் நல்ல லாபம் காண்பர், நிரந்தர வாடிக்கையாளரைப் பெற்றுவிடுவர். 

குடும்ப வாழ்க்கையில் இருக்கும் நிம்மதி, உங்களை லட்சியத்தை நோக்கி பயணிக்க ஊக்கப்படுத்தும். காதல் வாழ்க்கை இனிமையாக அமையும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும், உணவு பழக்கம் சிறிய எரிச்சல் போன்ற பிரச்சனை அளிக்கும். பரிசு! 

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்:  5

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம்  உங்களுக்கு இருக்கும் பிடிவாதம் தொழிலில் அசுர வளர்ச்சி காணும், அலுவலகத்தில் உங்களின் செயல் முதன்மை பெறும். வருமானத்தை உயர்த்தி கொள்ளுவீர்கள், ஆடம்பர செலவு கொஞ்சம் இருக்கும்.

குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைக்கான தீர்வை அறிய முயலுவீர்கள், கணவன் மனைவிக்கு இடையில் அமைதியான பேச்சுவார்த்தை இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும், செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும். சிந்தனை! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 2

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்றைய தினம் செய்யும் செயலில் சிறிய நிதானமாக இருக்க வேண்டும், கவனக்குறைவு பெரிய தவறுகளை உருவாக்கும். தொழிலில் ஏற்படும் தவறு இன்றைய நாளில் அதிகமான நேரத்தை செலவழிக்கும். அலுவலகத்தில் நிலுவை வேலைச் சுமையாகத் தோன்றும். நிதி நிலையில் பெரிய செலவு கிடையாது.

குடும்பத்தில் அமைதியாக இருக்க வேண்டும், உணர்ச்சிவத்தால் குடும்பத்தினரின் மனதைக் காயப்படுத்துவீர். காதல் வாழ்க்கையில் முக்கிய  முடிவு எடுக்க வேண்டியதாக இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, ஓய்வு தேவைப்படும். கவனம்!  

அதிர்ஷ்ட நிறம்: ஊதா  நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உங்களின் மனதில் இருக்கும் உறுதி இன்று ஏற்படும் பிரச்சனைகளை லாவகமாக சரி செய்யும், தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்காது. வியாபாரத்தில் எதிர்பார்த்த முடிவுகள் இல்லை, பங்குதாரர்களின் அலட்சியம் பண விரையத்தை அளிக்கும். 

குடும்பத்தினர் அன்பாக நடந்து கொள்வர், குடும்ப செலவு சற்று நிதி நெருக்கடி அளிக்கும். நண்பர்களின் உதவி தேவைப்படும். ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டும். தடங்கல்!  

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்:  4

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

உங்களின் தொலை  நோக்கு குணம் இன்று தொழிலில் நல்ல வளர்ச்சியை உருவாக்கி கொள்ளும், மனதில் இன்று அதிகமாக இறை நம்பிக்கை இருக்கும், மத ஸ்தலத்துக்கு செல்ல விரும்புவீர்கள். பணம் கையில் ஓரளவு இருக்கும், செலவுகளை சமாளிக்க முடியும்.

குடும்ப வாழ்க்கையில் பொறுமை தேவைப்படும், கணவன் மனைவி உறவில் சுப நிகழ்ச்சி பற்றிய பேச்சு வார்த்தை அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் வேண்டும், கண்ணில் எரிச்சல் இருக்கும். பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்களின் சுறுசுறுப்பான குணத்துக்கு இன்றைய தினம் மிகவும் நிம்மதியாக நகரும், வேலைச் சுமை குறையும். தொழிலில் வேலைகள் சுமுகமாக நகரும். நிதி நிலையில் மிதமான பண வரவு இருக்கும், சேமிக்க முயலவும்.

வீட்டில் அனைவருடன் இன்பமாகப் பொழுதை செலவிடுவீர்கள், குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக நகரும். காதல் வாழ்வில் வெளியே செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் நன்றாக உள்ளது. ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்:  கருப்பு

அதிர்ஷ்ட எண்: 8

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்