Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : குழப்பமான மனநிலை இன்று இந்த ராசியை என்ன செய்கிறது என்பதை பாருங்க… 17.08.2022 ராசிபலன்! 

Manoj Krishnamoorthi August 16, 2022 & 15:00 [IST]
Nalaya Rasi Palan : குழப்பமான மனநிலை இன்று இந்த ராசியை என்ன செய்கிறது என்பதை பாருங்க… 17.08.2022 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி 1 ஆம் நாள் புதன்கிழமை (17.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 9:15- 10:15 வரை

மாலை: 04:45- 05:45 வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (17.08.2022, புதன்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

 உங்களின் சிக்கனமான குணத்துக்கு இன்றைய தினம் நேர்மாறாக இருக்கும், கையில் இருக்கும் பணம் கட்டுப்படுத்த முடியாத செலவாக மாறும், உங்களின் வியாபாரம் இயல்பாகத் தான் இருக்கும், கையில் திடமான பண வரவு உருவாகும். சேமிக்க எடுக்கும் முயற்சி  தோல்வியாக மாறும். அலுவலகத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், வேலைகள் சுமுகமாக செல்லும்.

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், கணவன் மனைவி உறவு நட்பாக நகரும். காதல் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். குடும்பத்துடன் வெளியே செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் நன்றாக உள்ளது. செலவு!

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

 உங்களின் விடாமுயற்சி தொழிலில் நல்ல பலன் காணும், மேலும் சக பணியாளருடன் நல்ல உறவு இருக்கும். சக பணியாளரின் மூலம் ஆதாயம் கிடைக்கும். கையில் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும், செலவுகள் ஓரளவு குறையும். 

வீட்டில் அமைதியாக இருப்பீர்கள், கணவன் மனைவி உறவு அன்பாக இருக்கும். நண்பர்களின்  உதவி காதல் வாழ்வில் நிம்மதி அளிக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. ஆதாயம்!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்:  1

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்கள் ராசிக்கு இன்றைய தினம் மந்தமான நாளாக இருக்கும், மனதில் இனம்புரியாத வருத்தம் சூழும். தொழிலில் வழக்கமான வேளைகள் மட்டுமே இருக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு இன்றைய தினம் எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். செல்வ நிலையில் பண வரவு குறையும்.

வீட்டில் சிறிய சண்டை சச்சரவு உருவாகும், பொறுமை இழந்து வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். காதல் வாழ்வில் தேவையற்ற குழப்பம் சந்தோஷத்தைப் பாதிக்கும். உடல்நலத்தில் கவனம் காட்ட வேண்டும். வருத்தம்!  

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்:  3

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களின் அலட்சியம் முக்கியமான காரியத்தில் தாமதம் அளிக்கும். தொழிலில் போட்டிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் முக்கிய வாய்ப்பு கை நழுவும் சந்தர்ப்பம் உருவாகும்.  கவனக் குறைவு இன்று மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். நிதி நிலையில் பிரச்சனை இல்லை, போதுமான அளவு பணப் புழக்கம் இருக்கும். 

குடும்பத்தில் அமைதியான சூழல் கெடும், குடும்பத்தினரை பதற்றமடையச் செய்வீர்கள். காதல் வாழ்வில் சிறிய விஷயம் பெரிய பிரச்சனையாக மாறும், விட்டுக் கொடுத்தல் வேண்டும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. தாமதம்! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்:  4

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

உங்கள் ராசிக்கு இன்று  இரத்த சொந்தத்தின் மூலம் எதிர்பாராத செல்வ வரவு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்குச் சாதகமான பலன் உண்டு. வெளியூர் பயணம் மேற்கொள்ளுவீர்கள்.

இல்லற வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். காதல் வாழ்வில் நட்பான உறவு இருக்கும், வெளிப்படையான பேச்சி ஆனந்தம் அளிக்கும். ஆரோக்கியம் மேம்படும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 2

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் நீங்கள் வகுத்து வைத்த திட்டம் சரியாக முடியாது, சில கடினமான  தருணங்கள் உண்டாகும். தொழிலில் பொறுமையாக இருக்க வேண்டும், அவசர முடிவு சிக்கலாக முடியும். பணப் புழக்கம் குறையும்.

வீட்டில் உணர்ச்சிவசப்படுவீர்கள். குடும்பத்தில் வாக்குவாதம் உருவாகும். சுற்றத்தார் மூலம் பிரச்சனை வரும். கணவன் மனைவி உறவில் பொறுமை தேவைப்படும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. சிக்கல்! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:  3

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்