Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : தைரியமான இவரே இப்படி பதற்றமானால் மற்ற ராசிகள்...? ஆகஸ்ட் 17 ராசிபலன்! 

Manoj Krishnamoorthi August 16, 2022 & 14:00 [IST]
Nalaya Rasi Palan : தைரியமான இவரே இப்படி பதற்றமானால் மற்ற ராசிகள்...? ஆகஸ்ட் 17 ராசிபலன்! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் ஆவணி 1 ஆம் நாள் புதன்கிழமை (17.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 9:15- 10:15 வரை

மாலை: 04:45- 05:45 வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

பல நாட்களாக முயற்சி செய்து தோல்வியுற்ற காரியம் இன்று நல்ல பலன் அளிக்கும், கணிசமான  பண வரவு உண்டு. உங்களின் கவர்ச்சியான பேச்சு வியாபாரத்தில் நல்ல லாபம் அளிக்கும். கையில் திருப்திகரமான பணம் இருக்கும்.

குடும்பத்தில் உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும், கணவன் மனைவி உறவில் சிறிய வாக்குவாதம் தோன்றும், மனம் ஒருநிலையில் இருக்காது பொறுமையாக இருக்க வேண்டும். பிறரிடம் ஆலோசிக்காமல் முடிவெடுக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டும். லாபம்!

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

புதிய இடத்திற்கு செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது, அறிமுகமில்லாத மனிதரின் நட்பு கிடைக்கும் ஆனால் மனதில் பதட்டம் இருக்கும். தொழிலில் புதிய முயற்சி எடுக்க வேண்டும். அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகமாக  இருக்கும். நிதி நிலையில் வரவு பெரியதாக இருக்காது.  கையிருப்பை செலவு செய்ய வேண்டியதாக இருக்கும்.

குடும்பத்துடன் அன்பாக இருப்பீர்கள், கணவன் மனைவி உறவில் சிக்கல் உருவாகும். பெரியவர்களின் ஆலோசனை சமாதானம் அளிக்கும்.  கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை உருவாகும். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம் 

அதிர்ஷ்ட எண்: 9

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் தொழிலில் மறைமுகமான தடங்கல் உருவாகும், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற அதிகம் போராட வேண்டும். செல்வ நிலையில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். செல்வத்தை லாபகரமான இடத்தில் முதலீடு செய்ய முடியும்.

குடும்ப வாழ்க்கை நிம்மதியாக இருக்கும், ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து நடப்பீர். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. எதிர்ப்பு! 

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:  3

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களின் கணிசமான பண வரவு தேவைகளைப் பூர்த்தி செய்யும், தொழிலில் உங்கள் செயல் அனைவருக்கும் ஆனந்தமாக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியுடன் நட்பு உருவாகும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

வீட்டில் சந்தோஷமாகப் பொழுது செலவாகும். கணவன் மனைவி உறவு ஆனந்தமாக இருக்கும். பெற்றோரின் மனதை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். நண்பர்களுடன் பொழுதை செலவிடும் வாய்ப்பு உள்ளது. உடல்நலம் சிறப்பாக உள்ளது. வரவு!

அதிர்ஷ்ட நிறம்:  சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

 உங்கள் மனதிலிருந்த எதிர்மறையான எண்ணங்களுக்கான தீர்வு இன்று கிடைக்கும், மன தெளிவு பெறும். வியாபாரத்தில் எதிர்பார்க்காத நன்மைகள் நடக்கும். அலுவலகத்தில் நல்ல மதிப்பு பிறக்கும். உங்களின் கணிசமான வெற்றி செல்வ நிலை சற்று உயர்த்தும். பண வரவு உண்டு.

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், பெற்றோருடன் கருத்து வேறுபாடு வரும். அமைதி காப்பது பிரச்சனை தவிர்க்கும். உடல் சோர்வாக இருக்கும், ஓய்வு தேவைப்படும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்கள் தன்னம்பிக்கை புதிய விஷயத்தை செய்ய உத்வேகப்படுத்தும், அலுவலகத்தில் வழக்கத்தை விட வேலை சற்று அதிகமாக இருக்கும். வேலை முடிக்க பிறரின் உதவியை எதிர்பார்ப்பீர்கள்.  செல்வ நிலையில் செலவு தான் அதிகமாக இருக்கும், கையில் இருக்கும் பணம் முழுவதும் செலவாகும் வாய்ப்பு உள்ளது. 

குடும்பத்தில் இன்று நேரம் ஒதுக்க முடியாது, குடும்பத்தினரின் ஆசையை நிறைவேற்ற அதிகமாக சிரமப்படுவீர்கள், காதல் வாழ்க்கை சுமுகமாக உள்ளது.  நண்பர்களின் ஆலோசனை நன்மை அளிக்கும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் வேண்டும். கோபம்!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 6

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (17.08.2022, புதன்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்