Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: கொஞ்சம் அசந்தால் இன்று இந்த ராசிக்காரருக்கு ஆபத்து தான்....! ஆகஸ்ட் 18 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 17, 2022 & 14:00 [IST]
Nalaya Rasi Palan: கொஞ்சம் அசந்தால் இன்று இந்த ராசிக்காரருக்கு ஆபத்து தான்....! ஆகஸ்ட் 18 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் ஆவணி  2 ஆம் நாள் வியாழக்கிழமை (18.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45 வரை

மாலை: -

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்களின் திறமையான செயலாற்றல் தொழிலில் நல்ல வளர்ச்சி அளிக்கும் , ஆனால் கையில் எதிர்பார்த்த அளவு பணம் இருக்காது. அலுவலகத்தில் உங்களின் மதிப்பைப் புரிய வைப்பீர்கள். வியாபாரத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.  

குடும்பத்தில் உங்களின் கருத்து சிறிய சண்டை சச்சரவை உருவாக்கும், குடும்பத்தில் நிம்மதி குறையும். நண்பர்களுடன் வெளியே தொலை தூர பயணம் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை, உடல் வலி போன்ற பிரச்சனை உதிக்கும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்:  சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 4

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் எடுக்கும் முடிவுகளில் சற்று  நிதானமாக இருங்கள், வியாபாரத்தில் திடீரென பண இழப்பு சூழல் ஏற்படும். உங்களின் நெருக்கமானவர்களின் வார்த்தை மனதில் வருத்தம் அளிக்கும். கல்வியில் தடுமாற்றம் ஏற்படும். நிதி நிலையில் பெரிய வளர்ச்சி இருக்காது.

குடும்ப வாழ்க்கையில் மனம் திறந்து பேச வேண்டும், கணவன் மனைவி உறவில் வெளிப்படையான பேச்சு அன்யோன்யத்தை அளிக்கும். காதல் வாழ்வில் முன்னேற்றம் இருக்காது. ஆரோக்கியத்தில் தூக்கமின்மை பிரச்சனை இருக்கும். எதிர்ப்பு! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

உங்களின் தன்னம்பிக்கையான பேச்சு இன்று சுகமான வாழ்க்கை அளிக்கும், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. அலுவலகத்தில் பதவி உயர்வு போன்ற கௌரவ பதவி கிடைக்கும். அரசு சார்ந்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பணம் கையில்  போதுமான அளவு இருக்கும். 

வீட்டில் இன்று சந்தோஷமாக பொழுது கழிக்கும். திருமண வாழ்க்கை அமைதியாக இருக்கும். காதல் வாழ்வை திருமண உறவாக மாற்ற இன்று முயற்சி செய்யலாம். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, நலமான உடல்நலம் கிடைக்கும். வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்:  அடர் கருப்பு

அதிர்ஷ்ட எண்:  1

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் இருக்கும் குழப்பம் இன்பமான சூழலை மறந்து கவலை கொள்ளும், உத்தியோகத்தில் வழக்கமான வேலை இயல்பாக நடக்கும். புதிய முயற்சி வெற்றி பெறுவதில் தாமதம் உண்டாகும். பணியிடத்தில் உங்களின் செயல் நல்ல மதிப்பு பெறும். செலவு வழக்கம்போல் தான் இருக்கும்.

குடும்பத்தில் இன்று அன்பு அதிகரிக்கும், குடும்பத்தினரின் தேவை பூர்த்தி செய்ய சிரமமாக இருக்கும். சுற்றத்தாரின் மூலம் பிரச்சனை வரும். உடல்நலத்தில் பெரிய பிரச்சனை இல்லை. கவலை!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் வாழ்க்கையின் மீது வரும் பயம் நன்றாக உழைக்க ஊக்கப்படுத்தும், அலுவலகத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பணியிடத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். பணப் புழக்கம் நன்றாக உள்ளது, ஆனால் விரைய செலவு நடக்கும் வாய்ப்பு உள்ளது.

குடும்பத்தில் இருக்கும் ஒத்துழைப்பு சந்தோஷம் அளிக்கும், குடும்பத்தினரின் முன்னேற்றத்திற்காகக் கடுமையாகப் போராடுவீர்கள்.  காதல் வாழ்வில் வாக்குவாதம் சண்டையாக மாறும்.  உடல்நலத்தில் கவனம் காட்ட வேண்டும். பயம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 4

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்களின் தனித்துவமான நடவடிக்கை இன்று சில புதிய மனிதர்களின் அறிமுகத்தைஅளிக்கும், இன்று எந்த முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம். தொழிலில் வளர்ச்சி பெற அதிகமாக உழைக்க வேண்டியதாக இருக்கும். தினசரி வேலையில் சில தவறுகள் ஏற்படும், சக பணியாளரின் உதவி கிடைக்கும். பண வரவு எதிர்பார்த்த அளவு இருக்காது. 

வீட்டில் பொறுமையாக இருக்க வேண்டும், பெரியவர்களுடன் வாக்குவாதம் வரலாம். கணவன் மனைவி உறவில் இன்று அனுசரித்து செல்ல வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும், கண் அல்லது தலை சம்பந்தப்பட்ட தொல்லைகள் வரலாம். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்:  மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (18.08.2022, வியாழன்)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்