Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

Rishaba Rasi Matching Rasi In Tamil: ரிஷப ராசிக்காரர்கள் இந்த ராசிக்காரங்கள….. காதல் பண்ணா லவ் வேறலெவல் தான்…!

Manoj Krishnamoorthi August 17, 2022 & 11:45 [IST]
Rishaba Rasi Matching Rasi In Tamil: ரிஷப ராசிக்காரர்கள் இந்த ராசிக்காரங்கள….. காதல் பண்ணா லவ் வேறலெவல் தான்…!Representative Image.

சாமர்த்தியமாக சிந்திக்கும் குணமும் நம்பகத் தன்மையும் நிறைந்த ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார், ராசியின் அதிபதி யோககாரராக இருப்பதால்  சந்தோஷத்திற்கு குறையில்லாத மனதில் தான் இருப்பர். எனவே, இவரின் சிரிப்பான முகம் எளிதில் மற்றவர்களைக் கவரும். மேலும் இவரின் ராசியின் அதிபதி மகிழ்ச்சியான திருமண பந்தம் மற்றும் இன்பமான தாம்பத்திய வாழ்க்கை அளிக்கும் கிரகமாகும், ஆதலால் இவர் காதல் வயப்படுவது அரிதல்ல. 

ரிஷப ராசி கிருத்திகை 2, 3, 4  பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள் அடக்கியது, பிடிவாதக் குணம் அதிகமாக இருந்தாலும் இந்த ராசி நில ராசியாகத் தான் பார்க்கப்படுகிறது. இவர்களின் உறுதியான குணம் மற்றும் வேடிக்கையான  பேச்சாற்றல் அனைவரையும் எளிதில் கவரும், இவ்வாசகத்தில் ரிஷப ராசி காதல் செய்ய  ஏற்ற ராசிகள் பற்றி காண்போம்.

மனிதர்களுக்கு மட்டும் எப்படி காதல் வரும்..? எதாவது அறிவியல் காரணம் உண்டா..!

ரிஷப ராசிக்கு ஏற்ற காதல் ராசிகள் (Rishabam Love Horoscope In Tamil)

ரிஷப ராசிக்கு சந்திரன் முயற்சி ஸ்தானத்தில் இருப்பதால் கைவைக்கும் காரியத்தில் வெற்றி காணும் வரை ஓயமாட்டார்கள்.  பொதுவாக கலைத்துறை, இசைத்துறையில் நாட்டம் இருப்பதால் இவர்கள் மற்றவரை எளியதாக மற்றவரை வசியம் செய்யும் வித்தைக்காரர்கள் ஆவர். கீழ்வரும் ராசிக்காரர்கள் ரிஷப ராசிக்காரருக்கு சிறந்த ஜோடியாக அமைவர். 

1. கடகம்

வாழ்க்கையில் எந்த ஒரு விசயத்தையும் சிந்தித்து முடிவெடுக்கும் ரிஷப ராசிக்காரர்கள், திருமண வாழ்க்கையிலும் சரி காதல் வாழ்க்கையிலும் சரி... மெதுவாக ஆராய்ந்து தான் முடிவெடுப்பார். இவர்களுக்கு கன்னி ராசி பொருத்தமான ஜோடியாக அமையும். குடும்பத்தில் அதிக கவனம் கொள்ளும் கடக ராசிக்காரர்கள் ரிஷபத்துக்கு பலமான துணையாக இருப்பர்.

2. கன்னி

ரிஷப ராசிக்கு கன்னி ராசிக்காரர் அதிர்ஷ்டமான ஜோடியாக இருப்பர், கன்னி மற்றும் ரிஷபம் இரண்டு ராசியும் சிற்றின்பத்தை விரும்பும் ராசிகள். இவர்களின் ஒரே மாதிரியான சிந்தனை பல விஷயத்தில் ஒத்துப்போகும். கன்னி ராசியின் உதவும் குணம் ரிஷபத்தின் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

3. விருச்சிகம்

செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி ரிஷபத்துக்கு சிறந்த வாழ்க்கை துணையாகும், இது நீர் ராசியாக இருப்பதால் ரிஷபம் நிலம் என்பதால் பொதுவாக விருச்சிகத்தின் கை தான் உறவில் ஓங்கி இருக்கும். 

4. மகரம்

ரிஷபம் மற்றும் மகரம் நல்ல ஜோடியாக இருக்கும். இந்த இரு ராசியும் நில ராசியாக இருப்பதால் பெரும்பாலும் இருவரின் சிந்தனையும் ஒத்துப்போகும். பாராட்டை எதிர்பார்க்கும் ரிஷபத்துக்கு  மகர ராசிக்காரர்களின் பாராட்டு மிகப்பெரிய பலமாக இருக்கும். ரிஷபத்தின் பிடிவாதத்தை மகர ராசிக்காரர்கள் புரிந்து கொள்வதால் உரவு சுமுகமாக நகரும்.

5. மீனம்

குருவின் ஆதிக்கம் நிறைந்த மீன ராசிக்காரர் ரிஷபத்துக்கு நம்பிக்கையான துணையாக இருக்க முடியும். இந்த ஜோடிக்கு இடையில் நல்ல புரிதல் இருக்கும்.  இவர்களின் உறவில் ரிஷப ராசிக்காரர்கள் மீன ராசிக்காரருக்கு முன்னோடியாக அமைவர்.

 

மேலும், மற்ற ராசிகளின் காதல் ஜோதிடம் பற்றி அறிய கீழே உள்ள அட்டவனையை பின்பற்ற வேண்டும்.

மேஷம் ரிஷபம்
மிதுனம் கடகம்
சிம்மம் கன்னி
துலாம் விருச்சிகம்
தனுசு மகரம்
கும்பம் மீனம்

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்