Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரரின் பொறுமை சோதிப்பதால் நடக்க போவது இதுவா... 18.08.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 17, 2022 & 15:00 [IST]
Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரரின் பொறுமை சோதிப்பதால் நடக்க போவது இதுவா... 18.08.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி 2 ஆம் நாள் வியாழன்கிழமை (18.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45 வரை

மாலை: -

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (18.08.2022,  வியாழன்)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்களின் திட்டத்தில் ஏற்படும் தடங்கல் மனதில் வருத்தம் அளிக்கும், மேலும் தொழிலில் வளர்ச்சி சொல்லும்படியாக இருக்காது. வியாபாரத்தில் சில முயற்சிகள் தோல்வி அடையும்,  சலிப்பு தோன்றும். செல்வ நிலையில் பிரச்சனை இல்லை. போதுமான அளவு  பணம் கையில் இருக்கும்.

குடும்பத்தில் அனைவருடனும் சந்தோஷமாகப் பழகுவீர்கள், பெற்றோரின் மனதில் உள்ள தேவையை அறிந்து கொள்ளுவீர்கள். காதல் வாழ்க்கை இனிமையாக நகரும். ஆரோக்கியத்தில் அதீத கவனம் வேண்டும். தடை!

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்று மகிழ்ச்சியாக இருக்க முடியும், செல்லும் இடமெல்லாம் நிம்மதி என்பதுபோல் பெரியதாக அழுத்தம் இருக்காது. வியாபாரம் சுமுகமாக இருக்கும்.  செல்வ நிலை நன்றாக உள்ளது. தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

குடும்பத்தினரின் மூலம் சந்தோஷம் கிடைக்கும், திருமண பந்தம் நிம்மதியாக இருக்கும். காதல் வாழ்வில் அனுசரணையான பேச்சு இருக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, நலமாக இருப்பீர்கள். மகிழ்ச்சி!

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்:  8

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

குடும்பத்தில் ஏற்படும் சிறு ஊடல் உங்களின் வழக்கமான வேலையில் தாமதமான நிலையை அளிக்கும். தொழிலில் கவனம் சிதறும். அலுவலகத்தில் சக பணியாளரின் நடவடிக்கை வருத்தம் அளிக்கும். வியாபாரத்தில் சலிப்பு ஏற்படும். நிதி நிலையில் முன்னேற்றம் இருக்காது.

வீட்டில் பெற்றோர் அல்லது இரத்த சொந்தத்திடம் வாக்குவாதம் ஏற்படும், பொறுமை இழக்க நேரிடும். காதல் வாழ்வில் கடுமையான பேச்சு விரிசலை உருவாக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாமதம்!   

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்:  9

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உங்களின் அமைதியான மனதிற்கு ஏற்றார்போல் இன்றைய தினம் அமைதியாக இருக்கும், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் எதிர்த்த நிலையை அடைய முடியும். நிதி நிலையில் கொஞ்சம் கவனம் கொள்ள வேண்டும், தேவையில்லாத செலவுகள் உதிக்கும்.

குடும்ப வாழ்க்கையில் நட்பான அணுகுமுறை இனிமையாக இருக்கும், குடும்ப செலவு சற்று  அதிகரிக்கும். குடும்பத்தினருடன் வெளியே செல்லும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினரின் உடல்நலத்தில் கவனம் காட்ட வேண்டும். அமைதி! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்:  5

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

தொழிலில் ஏற்படும் சில வீழ்ச்சியை சரி செய்ய அயராது மீண்டும் முயற்சி செய்யும் மன உறுதி உங்களுக்கு ஒருவரின் ஆலோசனையால் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி இருக்காது.  அலுவலகத்தில் சக பணியாளரின் மூலம் ஆதாயம் கிடைக்கும். 

குடும்பத்தில் நட்பாக நடந்து கொள்ளுவீர்கள். வீட்டில் அன்பான கலந்து உரையாடல் இருக்கும். நண்பர்களுடன் நேரம் செலுத்த முடியும்.  உடல்நலம் நன்றாக உள்ளது. முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

வியாபாரத்தில் பேச்சு சாதுரியத்தால் நல்ல லாபம் காண்பீர்கள், செல்வ நிலையில் வரவு ஏற்ற செலவு அமையும். அலுவலகத்தில் சிறிய தவறு உங்கள் பொறுமையைச் சோதிக்கும் வண்ணம் அமையும். 

கணவன் மனைவி உறவில் செலவு சம்பந்தப்பட்ட உரையாடல் அதிகமாக இருக்கும், சொந்தபந்தத்துடன் வீண் வாக்குவாதம் செய்வீர்கள். உடல்நலத்தில் மூட்டு வலி போன்ற பிரச்சனை தோன்றும். பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்:  9

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்