Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : பல நாள் ஆசை இந்த ராசிக்கு நிறைவேறும்... ஆனால் மீன ராசிக்கு.. 19.08.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 18, 2022 & 14:30 [IST]
Nalaya Rasi Palan : பல நாள் ஆசை இந்த ராசிக்கு நிறைவேறும்... ஆனால் மீன ராசிக்கு.. 19.08.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி மாதம் 3 ஆம் நாள் திங்கட்கிழமை (19.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 09:15- 10:15 வரை

மாலை: 04:30- 05:00  வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (19.08.2022, வெள்ளிக்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மகிழ்ச்சியான நாளாக இருக்கும், தொழிலில் முக்கிய முடிவுகளைப் பொறுமையாக கலந்துரையாடி எடுப்பது பிரச்சனையை தடுக்கும். பணியிடத்தில் வேலைகள் பெரியதாக இருக்காது. வியாபாரத்திற்காக பெரிய முதலீடு செய்வீர்கள், செலவு அதிகமாகும்.

வீட்டில் பொறுமையாக இருப்பீர்கள், கணவன் மனைவி உறவு நட்பாக இருக்கும். சந்தோஷமாக பொழுது நகரும். நண்பர்களை சந்திக்க முடியும். கல்வி நிலை அருமையாக உள்ளது. உடல்நலத்தில் கவனம் வேண்டும். நலம்!

அதிர்ஷ்ட நிறம்:  நீலம்

அதிர்ஷ்ட எண்: 1

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

உங்களின் சுறுசுறுப்பு சற்று குறையும், வேலைகளை ஒத்தி வைப்பீர்கள். வியாபாரத்தில் உங்கள் கவனம் வேறு திசையில் பயணிக்கும்.  மனநிலையில் தடுமாற்றம் ஏற்படும், குழப்பமான மனநிலை நிலவும். கையில் போதுமான அளவு பணப் புழக்கம் இருக்கும், நிதி பிரச்சனை இருக்காது.

வீட்டில் உங்கள் நடவடிக்கை ஆச்சரியம் அளிக்கும், கணவன் மனைவி உறவில் வாக்குவாதம் வந்து மறையும். காதல் வாழ்வில் எந்த முக்கிய முடிவும் எடுக்க வேண்டும். உடல்நலத்தில் செரிமான சார்ந்த பிரச்சனை வரக் கூடும். தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்:  சந்தன நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்களுக்கு புதிய ஞானம் கிடைக்கும், சில அனுபவங்கள் நல்ல பாடமாக அமையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். வேலையில் நல்ல மாற்றம் ஏற்படும். அரசு சார்ந்த காரியத்தின் மூலம் அனுகூலம் கிடைக்கும். பணப் புழக்கம் அதிகமாகும். 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், குடும்பத்தினரின் ஆலோசனை நன்மை அளிக்கும். காதல் வாழ்க்கையில் சந்ட்ஓஷம் ததும்பும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். சுபம்!  

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 4

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு பல  வகையில் பண வரவு இருக்கும், செல்வ நிலை உயரும். தொழிலில் முதலீடு செய்யும் எண்ணம் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் திட்டமிட்டபடி செயல்கள் நடக்கும். நல்ல லாபம் உண்டு.

குடும்பத்தில் சில பிரச்சனை உதிக்கும். வீட்டில் இருக்கும் பிரச்சனையை சரி செய்ய கடினமாக இருக்கும். வேறு மனிதரின் உதவி கிடைக்கும். மனதில் அழுத்தம் உருவாகும். ஆரோக்கியத்தில் திடீரென பிரச்சனை வரும். தனம்! 

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்:  9

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

உங்கள் இலக்கை அடைய இன்று அதிகமான பொறுமை தேவைப்படும்.  அலுவலகத்தில் வேலைகள் அதிகமாக இருக்கும், வேலைச் சுமை கோபம் அளிக்கும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் நேரத்தை விரையம் ஆக்கும். பண வரவு பெரியதாக இருக்காது.

குடும்ப வாழ்க்கையில் சிறிய சண்டைகள் வரும், கணவன் மனைவி உறவில் கருத்து வேறுபாடு அதிகமாக இருக்கும். குடும்பத்திற்காக திடீர் செலவு வரும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது. பொறுமை!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்று நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் நன்மையாக மாறும். அரசு சார்ந்த காரியங்கள் செய்ய ஒப்பந்தம் செய்யலாம். தெளிவாக சிந்திக்கும் மனநிலை இருக்கும். புதிய யோசனை கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய லாபம் இருக்காது. கையில் செலவை சமாளிக்கும் அளவு பணம் இருக்கும். 

இல்லற வாழ்க்கையில் அமைதியாக இருக்க வேண்டும், பேச்சின் மூலம் பிரச்சனை வரும். பெற்றோரின்  ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டும், ஆரோக்கியத்திற்காக செலவு செய்யும் நிலை வரும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 7

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்