Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: மன அழுத்தம் அடையப்போகும் ராசிக்காரர் இவரா..? ஆனால் ரிஷப ராசி.. ஆகஸ்ட் 19 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 18, 2022 & 14:00 [IST]
Nalaya Rasi Palan: மன அழுத்தம் அடையப்போகும் ராசிக்காரர் இவரா..? ஆனால் ரிஷப ராசி.. ஆகஸ்ட் 19 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி மாதம் 3 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (19.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 09:15- 10:15 வரை

மாலை: 04:30- 05:00  வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு எதிர்பாராத நேரம் எதிர்பாராத மனிதரின் மூலம் ஆதாயம் கிடைக்கும், உங்களின் தொழிலில் வேலைகள் பெரியதாக இருக்காது. வியாபாரம் சுமுகமாக செல்லும். பண வரவு உண்டு, செல்வத்தை சேமிக்க முயலவும்.

குடும்பத்தில் மற்றவர்களின் உதவியை எளிதில் பெற்றுவிடுவீர்கள். கணவன் மனைவி உறவில் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும், மருத்துவ செலவு ஏற்படும். ஆதாயம்!  

அதிர்ஷ்ட நிறம்:  சில்வர் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 2

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து இன்று உதவி கிடைப்பது அரிது, சொந்தக் காலில் நிற்க வேண்டிய சூழல் உருவாகும். தொழிலில் வகுக்கும் திட்டங்களில் சிறிய சறுக்கல் வரும். சுய தொழில் புரியும் ரிஷப  ராசிக்காரர் வெற்றி காண்பது எளிதல்ல. பண விஷயத்தில் கவனம் வேண்டும், அதிகமாக செலவாகும்.

வீட்டில் விட்டுக்கொடுத்து போனால் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். காதல் வாழ்வில் ஏமாற்றம் உண்டு. நண்பர்களின் கேலிக்கு ஆளாவீர்கள். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. ஏமாற்றம்! 

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 8

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

உங்களின் திறமையான செயல்பாடு இன்றைய தினத்தை சுகமான நாளாக மாற்றும், சிறந்த அனுபவங்கள் கிடைக்கும். இனிமையான தருணங்கள் கிடைக்கும். தொழில் சுமுகமாக செல்லும், செலவுகள் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். 

குடும்பத்தில் சிறிய வருத்தம் இருக்கும், கணவன் மனைவி உறவில் கருத்து வேறுபாடு வரும். நண்பர்கள் அறிவுரை கிடைக்கும். கல்வி நிலை சிறப்பாக உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 1

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

உங்களின் அறிவுப்பூர்வமான நடவடிக்கை தொழிலில் நல்ல பெயர் அளிக்கும். மனம் நிம்மதியாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் புகழ் அதிகமாகும். பண வரவு இருக்கும், சேமிக்க முடியும்.

குடும்ப வாழ்க்கை அன்பாக இருக்கும், குடும்பத்தினரை அனுசரணையாகப் பார்த்துக் கொள்ளுவீர்கள். காதல் வாழ்க்கையில் துணையை புரிந்து நடப்பீர்கள். சொந்த பந்தத்துடன் சந்தோஷமாகப் பழகுவீர்கள். உடல்நலம் நன்றாக உள்ளது. புகழ் ! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்களின் திறமைக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் சற்று தள்ளிப் போகும், தொழிலில் சரிவு ஏற்படும்.  பணியிடத்தில் ஏற்படும் நிகழ்வு மனதில் வருத்தம் அளிக்கும். பணப் புழக்கம் சீராக இருக்கும்.

வீட்டில் உள்ளவர்களின் உதவி நிம்மதி அளிக்கும், குடும்பத்தினரின் ஆதரவு அதிகமாக இருக்கும். திருமண பந்தம் சிறப்பாக உள்ளது.  காதல் வாழ்வில் பிரச்சனை வரும் வாய்ப்பு உள்ளது. உடல்நலம் நன்றாக உள்ளது. கவலை!

அதிர்ஷ்ட நிறம்:  பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்றைய தினம் எடுக்கும் முயற்சியும் போராட்டமாக இருக்கும், குறிப்பாக சுய தொழில் செய்பவர்களுக்கு தொழில் போட்டி அதிகமாக இருக்கும். தெளிவான திட்டமிடல் தேவைப்படும். உத்தியோகத்தில் சலிப்பு ஏற்படும். செல்வ நிலையில் பாதிப்பு இல்லை, செலவை சமாளிக்க முடியும்.

குடும்பத்தினருடன் இன்பமாக பொழுதை கழிப்பீர்கள், முக்கிய முடிவுகளும் எடுப்பீர்கள். கணவன் மனைவி உறவி நல்ல புரிதல் இருக்கும். நண்பர்களுடன் சிறிய போட்டி பொறாமை உருவாகும். உடல்நலத்தில் மூட்டு வலி அல்லது முதுகு வலி ஏற்படலாம். போட்டி! 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (19.08.2022, வெள்ளிக்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்