Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Sirappu Rasipalan: அமைதியாக நகரும் இவர் வாழ்க்கையில் இன்று..... ஆகஸ்ட் 2, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 01, 2022 & 14:00 [IST]
Nalaya Sirappu  Rasipalan: அமைதியாக நகரும் இவர் வாழ்க்கையில் இன்று..... ஆகஸ்ட் 2, 2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Sirappu  Rasipalan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 17 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (02.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பல பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம் - மீனம் வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது,

 நல்ல நேரம்

காலை:07:45- 08:45 வரை

மாலை: 04:45- 05:45  வரை

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (2:08:2022, செவ்வாய்க்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு அமைதியான நாளாக அமையும், உங்கள் மனம் நிம்மதியாக இருக்கும். தொழிலில் உருவாகும் தடைகளை சமாளிக்கும் வழிகள் கிடைக்கும். அலுவலகத்தில் சிறப்பான தருணமாக அமையும். நிதி நிலை சிறப்பாக உள்ளது, செலவுகள் குறையும்.

குடும்ப வாழ்க்கையில் நல்ல பிணைப்பு உருவாகும். குடும்பத்தில் கலந்துரையாடி சில முடிவுகள் எடுப்பீர்கள். காதல் வாழ்க்கையில் புதிய பிரச்சனைகள் பிறக்கும். மாணவர்களின் கல்வி நிலையில் எதிர்பார்க்காத ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. அமைதியான நாள்! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்கள் வருங்கால வாழ்க்கையைப் பற்றிய பயம் துணிச்சலான முடிவெடுக்கத் தடுமாறும், தொழிலில் சில வாய்ப்புகளை நழுவவிடுவீர்கள். பனியிடத்தில் வேலையில் அழுத்தம் சலிப்பை உருவாக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு புதிய முயற்சிகள் சந்தேகத்தை அளிக்கும். செல்வ நிலையில் பாதிப்பு இல்லை. 

குடும்ப வாழ்க்கை நட்பான அணுகுமுறை இல்லறத்தை இனிமையாக்கும். காதல் வாழ்க்கை மிகவும் ஆனந்தமாக அமையும். நண்பர்களுடன் வெளியே செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சலிப்பு!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 8

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்கள் மனம் அயராது உழைக்கும் உத்வேகம் கொண்டு இருக்கும். மேலும் தொழிலில் வளர்ச்சி காண பல புதிய முயற்சிகள் செய்வீர்கள். உங்களின் தன்னம்பிக்கை பலரின் பலமாக அமையும். வியாபாரத்தில் நிலுவையிலிருந்த தொகை வரும். செலவுகளைக் கட்டுப்படுத்த முயலவும்.

வீட்டில் அமைதியாக இருக்க வேண்டியது அவசியமாகும், உங்களின் உணர்ச்சிவதம் குடும்பத்தின் நிம்மதியை குலைக்கும். ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சனை இல்லை, உடல் ஓய்வு தேவைப்படும். முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 4

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

உங்களின் ஆர்வம் இன்று பல புதிய மனிதர்களை நண்பர்களாக மாற்றிவிடும், உங்களின் கலகலப்பான பேச்சு எதிர் இருப்பவரைக் கவரும். தொழிலில் இருந்த தடைகள் மறையும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையற்ற செலவுகள் அதிகமாக இருக்கும்.

குடும்ப வாழ்க்கையில் சண்டைகள் உதிக்கும். பெற்றோரின் உதவி தேவைப்படும். உடல்நலத்தில் வயிறு சம்பந்தப்பட்ட தொல்லைகள் இருக்கும். போட்டி தேர்வுக்கு தயாராகும் நபர்களுக்கு உதவி கிடைக்கும். ஆர்வம்!  

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்கள் வாழ்க்கை மீது இருக்கும் பயம் அயராது உழைக்கத் தூண்டும், மேலும் தொழில் ஸ்தானத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அலுவலகத்தில் முக்கிய பொறுப்பு கிடைக்கும். சரியான திட்டமிடல் வருமானத்தை உயர்த்தும்.

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும், குடும்ப செலவு சற்று மனக் குழப்பத்தை அளிக்கும். காதல் வாழ்வில் உரையாடல் அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக உள்ளது, மனநிலை குழப்பமடையும். அச்சம்!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 7

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்கள் ராசிக்கு இன்றைய தினம் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும், தொழிலில் வெற்றி காண பல தடைகளை சமாளிக்க வேண்டியதாக இருக்கும். பணியில் நடக்கும் தவறு முன்னேற்றத்தைத் தடுக்கும். நிதி வளர்ச்சியில் பிரச்சனை இல்லை. 

குடும்ப வாழ்க்கை நன்றாக உள்ளது, கணவன் மனைவி ஊறவில் சிறிய விரிசல் வந்து மறையும். நண்பர்களின் உதவி தேவைப்படும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் ஓரளவு நன்றாக உள்ளது. எதிர்ப்பு! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்