Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இன்று இந்த 2 ராசிக்கு தொழிலில் அமோக வளர்ச்சி தான்.. ஆகஸ்ட் 2, 2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi August 01, 2022 & 13:50 [IST]
Nalaya Rasi Palan : இன்று இந்த 2 ராசிக்கு தொழிலில் அமோக வளர்ச்சி தான்.. ஆகஸ்ட் 2, 2022 ராசிபலன்..!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 17 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (2.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 7:45- 8:45 வரை

மாலை: 4:45- 5:45  வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்கள் மனம் இருக்கும் உற்சாகம் பணிகளை விரைவாக முடிக்கும், அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். வியாபாரத்தில் சில போராட்டங்கள் இருந்தாலும் வெற்றி பெற முடியும். நிதி நிலையில் வரவும் செலவும் சமமாக இருக்கும்.

குடும்ப வாழ்க்கை கருத்து வேறுபாடு உதிக்கும், கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து போக வேண்டும். கல்வி ஸ்தானம் சிறப்பாக உள்ளது. ஆரோக்கியத்தில் தொய்வு ஏற்படும், ஓய்வு எடுக்க வேண்டும். ஓய்வு!   

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்கள் தெளிவான மனநிலையை மற்றவர்களின் கருத்து குழப்பமடையச் செய்யும், இன்று பல புதிய மாற்றங்கள் நிகழும். தொழிலில் இன்று தனியாக உழைக்கும் நிலை தான் ஏற்படும். வியாபாரத்தில் வெற்றிகாண அரும்பாடுபட வேண்டியிருக்கும். செல்வ நிலை ஓரளவு நன்றாக இருக்கிறது, சேமிப்பு இருக்காது. 

குடும்ப வாழ்க்கையில் வாக்குவாதம் பிரச்சனையாக மாறும். காதல் வாழ்வில் உங்கள் குழப்பமான மன நிலை சில தவறான சந்தர்ப்பங்களை உருவாக்கும். உடல்நலத்தில் சோர்வு ஒரு பிரச்சனையாகத் தோன்றும். குழப்பம்!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் 

அதிர்ஷ்ட எண்: 3

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் சுகமான நாளாக இருக்கும், தொழிலில் சாதகமான நிலை உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்று சக பணியாளரின் ஒத்துழைப்பு நல்ல பெயர் வாங்கி தரும். வியாபாரம் சுமுகமாக செல்லும். கணமான பண வரவு உண்டு. 

இல்லற வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும், பெற்றோருடன் பாசமாக இருப்பீர்கள். காதல் வாழ்க்கை இன்பமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கால் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும். நலம்! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை  

அதிர்ஷ்ட எண்: 2

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு செய்யும் காரியத்தில் வெற்றியளிக்கும் தினமாக அமையும்.  சுறுசுறுப்பாக பணியாற்றி மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து கொள்வீர்கள். உங்கள் நேர்மையான அணுகுமுறை வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி அளிக்கும். நிதி நிலையில் வரவு இருக்கும், ஆனால் செலவு அதிகமாகும் சூழல் உள்ளது.

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், குடும்பத்தினரின் மனதிற்கு விருப்பமாக நடந்து கொள்வீர்கள். காதல் வாழ்வில் பேசும் வார்த்தைகளில் கவனம் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தில் நன்றாக உள்ளது. வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 2

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்கள் ராசிக்கு இன்று சுமுகமான நாளாக அமையும் இதுவரை தொழிலில் இருந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். அலுவலகத்தில் சக பணியாளரின் ஒத்துழைப்புடன் புதிய முயற்சிகள் கிடைக்கும். நிதி வளர்ச்சி ஓரளவு நன்றாக உள்ளது.

கணவன் மனைவி உறவில் வெளிப்படையான பேச்சு உறவில் அன்யோன்யத்தை அதிகப்படுத்தும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும், நட்பான சூழல் உருவாகும். உடல்நலத்தில் சிறிய பிரச்சனை உருவாகும், குடும்பத்தினரின் அரவணைப்பு மனதை நிம்மதியாக்கும். சுகம்!

அதிர்ஷ்ட நிறம்:  பொன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்று நீங்கள் நடந்து கொள்ளும் முறை அனைவருக்கும் ஈர்க்கும் வண்ணம் அமையும், பணிகள் மும்முரமாக நடக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளரின் மதிப்பை பெற்றுவிடுவீர்கள். அலுவலகத்தில் குறிப்பிட்ட வேலையை வெற்றிகரமாக முடித்து சக பணியாளரின் பாராட்டை பெறுவீர். உங்களின் திட்டமிடல் அனைவரையும் கவரும். வரவும் செலவும் சமமாக அமையும்.

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், அவ்வப்போது உருவாகும் ஊடல் உடனே சரியாகும். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உணவு பழக்கம் உங்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை அளிக்கும். நட்பு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

அதிர்ஷ்ட எண்: 8

Part 2: துலாம்- மீனம் ராசிபலன் (02.08.2022, செவ்வாய்க்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்