Fri ,Nov 08, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : பிரச்சனை மேல் பிரச்சனை முடியில்ல ...... ஆனால் தனுசு ராசிக்கு.... 21.08.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 20, 2022 & 12:00 [IST]
Nalaya Rasi Palan : பிரச்சனை மேல் பிரச்சனை முடியில்ல ...... ஆனால் தனுசு ராசிக்கு.... 21.08.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி மாதம் 5 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (21.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 07:45- 08:45 வரை

மாலை: 03:15- 04:15 வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (21.08.2022, ஞாயிற்றுக்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

உங்களின் தன்னம்பிக்கையான செயல் இன்று நன்மை விளைவிக்கும், தொழிலில் நிலையான வளர்ச்சி ஏற்படும். இன்பமான மனநிலையில் இன்றைய தினம் செல்லும். பெரிய மனிதர்களின் அறிவுரை நன்மை அளிக்கும். செல்வ நிலை நன்றாக உள்ளது, இதுவரை இருந்த நிதி பிரச்சனையை சமாளிக்கலாம். 

குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மனதிற்கு நிம்மதி அளிக்கும், சகோதர வழியில் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி உறவு இனிமையாக நகரும். மாணவர்களின் கல்வியில் சிறந்த முன்னேற்றம் இருக்கும். உடல்நலத்தில் சிறிய பிரச்சனை தோன்றி மறையும். நற்செயல்!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

நீண்ட நாட்களாகப் போராட்ட வாழ்க்கை வாழ்ந்த உங்களுக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் யோகம் உள்ளது. பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். தொழில் விருத்தி ஆகும். பண வரவு சீராக இருக்கும், செல்வத்தை சேமிப்பது நன்மை ஆகும். 

குடும்பத்தில் உங்கள் பொறாமை பேச்சு மன வருத்தம் அளிக்கும். கணவன் மனைவி உறவு சுமுகமாக செல்லும். காதல் வாழ்வில் விட்டுக்கொடுத்து போவது உறவில் நன்மை அளிக்கும். உடல்நலத்தில் கவனம் வேண்டும். வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 6

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

இன்றைய தினம் வழக்கமான வேலையை விரைவாக முடிப்பதால் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும், உங்களின் தைரியமான மனதிற்கு பலமாக ஒரு நல்ல மனிதரின் நட்பு கிடைக்கும். வியாபாரம் சார்ந்த யோசனை அதிகமாக இருக்கும். நிதி நெருக்கடி குறையும்.

குடும்பத்தில் அமைதியாக பொழுதைக் கழிப்பீர். கணவன் மனைவி உறவில் இனிமையான பேச்சு உறவை வலுப்படுத்தும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை கொள்ள வேண்டும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்:  5

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று தொழில் சார்ந்த எண்ணங்கள் அதிகமாக இருக்கும், தொழிலில் முன்னேற அயராது உழைப்பீர்கள். பணியில் அனுபவம் வாய்ந்த மனிதரின் மூலம் உதவிகள் கிடைக்கும். பணப் புழக்கம் ஓரளவு நன்றாக உள்ளது,  அதிகமான செலவு இருக்கும்.

குடும்பத்தினரின் ஆதரவு தொழிலில் கவனம் செலுத்த உதவும். கணவன் மனைவி உறவில் நல்ல புரிதல் இருக்கும். நண்பருக்கு உதவியாக இருக்க முடியும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. முயற்சி!  

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்:  4

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

வெற்றிக்காகப் போராடி அலுத்து போன உங்களுக்கு அனுபவம் வாய்ந்த ஒருவரின் வார்த்தை புத்துணர்ச்சி அளிக்கும். அலுவலகத்தில் திறமையாக பணியாற்றுவீர்கள். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும், நிதி நிலை மிதமாக உயரும். 

குடும்ப வாழ்க்கையில் சண்டைகள் உருவாகும், வீட்டில் பெரியவருடன் வாக்குவாதம் நிலை அதிகமாக உள்ளது. பொறுமை கடைப்பிடிக்க வேண்டும். உடல்நலத்தில் கவனம் காட்ட வேண்டும், இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனை வரும். உயர்வு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 2

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களின் தொழிலில் கடுமையாக எடுக்கும் முயற்சியில் சில குறுக்கீடுகள் வரும், அடை சமாளிக்கும் மன உறுதி தேவைப்படும். அலுவலகத்தில் நல்ல நிலை பெற மீண்டும் முயற்சிக்கும் நிலை வரும், சக பணியாளர் உதவி கிடைப்பது அரிது. பண வரவு குறையும்.

குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும். குடும்பத்தினருடன் வெளியே செல்லுவீர்கள். காதல் வாழ்க்கையில் உங்கள் வார்த்தை மனம் விரும்பும் நபரின் மனதில் வருத்தம் அளிக்கும். உடல்நலத்தில் செரிமான பிரச்சனை இருக்கும். தடங்கல்!   

அதிர்ஷ்ட நிறம்:  மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்