Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan :   போராட்டமான இவர் வாழ்க்கை இன்று நல்ல காலம் தான்…  21.08.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 20, 2022 & 11:40 [IST]
Nalaya Rasi Palan :   போராட்டமான இவர் வாழ்க்கை இன்று நல்ல காலம் தான்…  21.08.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் ஆவணி  5ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (21.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 07:45- 08:45 வரை

மாலை: 03:15- 04:15 வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்களின் ஆரோக்கியமான மனநிலை தெளிவாக சிந்தித்து நிலைமைக்கு ஏற்ற பலன் அளிக்கும், முக்கியமாக பணியிடத்தில் சில முக்கிய முடிவு எடுப்பதில் உங்கள் பங்கு அதிகரிக்கும். கல்வியில் உங்கள் முயற்சியால் நல்ல மதிப்பு பெறுவீர்கள்.

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், அதிகமான நேரத்தை குடும்பத்துடன் செலவிடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. பெரிய மனிதரின் சந்திப்பு நல்ல ஆற்றல் அளிக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. நலம்! 

அதிர்ஷ்ட நிறம்:  நீலம்

அதிர்ஷ்ட எண்: 3 

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்பமான வாழ்க்கை இன்று உங்களுக்கு தான் என்பது போல வழக்கமான வேலைகளிலிருந்து விடுபட்டு நிம்மதியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். அலுவலகத்தில் வேலைகள் அதிகமாக இருக்காது. வியாபாரத்தில் பெரிய கஷ்டமில்லாமல் இலக்கை முடித்துவிடுவீர்கள். நிதி நிலை சிறப்பாக உள்ளது. 

இல்லற வாழ்வில் விட்டுக் கொடுத்து போனால் நிம்மதி கெடாது. இனிமையான பேச்சு கணவன் மனைவி உறவில் நட்பை உருவாக்கும். வெளியில் செல்ல இன்று மனம் ஆசைப்படாது. உடல்நலம் நன்றாக உள்ளது, ஓய்வு தேவைப்படும். ஓய்வு! 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்

அதிர்ஷ்ட எண்: 1

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

சிறந்த பேச்சாற்றலால் அனைவரையும் ஈர்க்கும் உங்களுக்கு  இன்று வரும் பணம் போகுமிடம் தெரியாத நிலை தான் இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபார ரீதியாக சில முதலீடுகள் செய்ய வேண்டியதாக இருக்கும். பணப் பரிவர்த்தனையில் அதிக கவனம் வேண்டும், தேவையற்ற செலவைக் குறைக்க வேண்டிய நிலையில் உள்ளீர்கள்.

வீட்டில் பொறுமையாக இருக்க வேண்டும், உணர்ச்சிவசப்பட்டு மற்றவரின் மனதில் கவலையை விதைப்பீர்கள். காதல் வாழ்வில் இன்று பிடிப்பில்லாத நிலை தான் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும், நரம்பு சார்ந்த தொல்லைகள் ஏற்படும். செலவு!

அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை

அதிர்ஷ்ட எண்: 7

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

மற்றவர்களுக்கு அறியாமல் உதவி உங்களுக்கு இன்று பழைய நண்பர் ஒருவரின் மூலம் ஆதாயம் கிடைக்கும்,  மனம் நிம்மதியுடன் இன்றைய தினத்தைக் கழிக்க முடியும். அலுவலகத்தில் திருப்திகரமான நிலை தன் நிலவும். வியாபாரத்தில் இருக்கும் கடக ராசிக்காரருக்கு இன்றைய தினம் போதுமான அளவு பணப்புழக்கம் இருக்கும். 

வீட்டில் நேரம் செலவிட முடியும், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக உரையாடுவீர்கள். கணவன் மனைவி உறவில் இன்றைய தினம் நட்பு அதிகரிக்கும், வெளியே செல்லும் யோகம் உண்டு. ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை, சிறப்பான உடல்நலம் உண்டு.உதவி!

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 7

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்களின் விடாமுயற்சியின் பலனாக இன்றைய தினம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு, அலுவலகத்தில் நன்மதிப்பை பெறுவீர். உங்களுக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். நிதி நிலையில் செலவு அதிகமாக  இருக்கிறது, பண விசயத்தில் சிறிய மறதி ஏற்படும்.

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், பெற்றோரின் மனதில் நிம்மதி விதைப்பீர். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும், இன்று திருமண முயற்சி செய்ய தகுந்த தருணமாகும். ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சனை இல்லை, ஓய்வு தேவைப்படும். மறதி! 

அதிர்ஷ்ட நிறம்:  வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 4

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

கன்னி ராசி மாணவர்கள் இன்று ஆர்வத்துடன் கல்வியில் கவனம் செலுத்துவர், தொழில் ஸ்தானம் இனிமையாக இருக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் நல்ல நிலை கிடைக்கும். பணப் புழக்கம் நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அமையும். 

குடும்பத்தில் உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். திடீர் கோபம் உறவில் விரிசல் அளிக்கும். வீட்டில் பெரியவர்களுடன் அனுசரித்து செல்ல வேண்டும். உடல்நலம் மேம்படும், உடல் உபாதைகள் குறையும். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்:  9

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (21.08.2022, ஞாயிற்றுக்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்