Tue ,Mar 05, 2024

சென்செக்ஸ் 73,743.56
-128.73sensex(-0.17%)
நிஃப்டி22,372.90
-32.70sensex(-0.15%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இந்த ராசிக்காரருக்கு பல நாள் தேவை நிறைவேறும்… 22.08.2022 ராசிபலன் !

Manoj Krishnamoorthi August 21, 2022 & 12:15 [IST]
Nalaya Rasi Palan :  இந்த ராசிக்காரருக்கு பல நாள் தேவை நிறைவேறும்… 22.08.2022 ராசிபலன் !Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி 6 ஆம் நாள் திங்கட்கிழமை (22.08.2022) தினத்தி கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 06:15- 07:15 வரை

மாலை: 04:45- 05:45  வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (22.08.2022, திங்கட்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம்  ஆசைப்பட்டு செய்த செயல் ஏமாற்றமளிக்கும், மனதிற்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். தொழிலில் கவனக் குறைவு அதிகமான நேரத்தை வீணடிக்கும். இன்று தொழிலில் பெரிய முன்னேற்றம் இருக்காது, வழக்கமான வேலைகளை முடிப்பதற்கு போராட்டமாக அமையும். நிதி நிலையில் பிரச்சனை இல்லை.

 வீட்டில் முடிக்க முடியாத வேலைகளை முடிக்க ஓய்வு நேரத்தை தியாக செய்ய வேண்டியிருக்கும். அன்பான நடவடிக்கை குடும்பத்தினரை நிம்மதி அடைய செய்யும். கணவன் மனைவி உறவில் அமைதி இருக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர் மூலம் ஆதாயம் உண்டு. உடல்நலத்தில் கவனம் வேண்டும், வயிறு சார்ந்த பிரச்சனை வரும். எதிர்பார்ப்பு!   

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 4

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

லட்சியத்தை அடைய இன்று நீங்கள் சுற்றத்தாரையும் ஊக்கப்படுத்தி உங்களுடன் உழைக்க செய்வீர்கள், மனதில் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். பணியிடத்தில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுய தொழிலில் நல்ல பெயர் கிடைக்கும் , பலமான அஸ்திவாரமாக இன்றைய தினம் அமையும். பண இழப்பு நேரிடும். 

குடும்பத்தினரின் உதவியை எதிர்பார்ப்பீர். கணவன் மனைவி உறவில் வாக்குவாதம் சண்டையாக மாறும். மாணவர்கள் இன்று சக மாணவர்களுடன் போட்டிப்போட்டு படிப்பர். உடல்நலம் நன்றாக உள்ளது, உடற்பயிற்சி செய்தல் நன்மை அளிக்கும். ஆர்வம்!

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 3

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்களின் திறமையான செயல்பாடு அலுவலகத்தில் உங்களை முதன்மைப்படுத்தும், சக பணியாளரின் மத்தியில் நீங்கள் முக்கியமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் நியாயமான வாடிக்கையாளர் கிடைப்பர், எந்த வாக்குறுதியும் அளிக்காதீர்கள். நிதி நெருக்கடி ஏற்படும்.

குடும்பத்தில் நிம்மதியாக  இருக்க முடியும், சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது, எதிர்பார்க்காத பாராட்டு கிடைக்கும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சி பிறக்கும். உடல்நலத்தில் கண் எரிச்சல் பிரச்சனை இருக்கும். கீர்த்தி!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 6

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

கடினமான வேலையாக இருந்தாலும் எளிதில் முடிக்கும் யுத்தியை அறிந்த உங்களுக்கு  தொழில் சற்று மந்தமாக இருந்தாலும் நஷ்டம் வராது. உங்கள் மனம் தேடும் அமைதி கிடைக்கும். பண வரவு உண்டு, குடும்ப செலவுகள் வந்து நிற்கும். 

இன்று காதல் வாழ்க்கை மிகவும் நன்றாக உள்ளது.  திருமண வாழ்க்கை உங்களுக்கு ஒரு வரமாகக் காட்சி அளிக்கும் நாள் இன்றாகும். ஆன்மிக ஸ்தலத்திற்குச் செல்வது நன்மை ஆகும். கல்வி நிலையும் நன்றாக உள்ளது.  உடல்நலம் ஓரளவு நன்றாக உள்ளது. வரவு! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்:  1

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

அதிகம் பேசுவதைவிட அதிகம் கவனிப்பது தான் சிறந்தது என்று அனைவருக்கும் உணர்த்தும் வண்ணம் வாழும்  உங்களுக்கு இன்று சீரான நாளாகும். மனதில் படிந்த கவலைகள் அகன்று இன்பம் பிறக்கும். கையில் பணப்புழக்கம் குறைவாக இருக்கும் ஆனால் பணக்கஷ்டம் வராது. 

குடும்ப நிலை ஓரளவு நன்றாக உள்ளது.  வாழ்க்கை துணையாளர் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். ஆரோக்கியம் சுமார் தான், உணவுக் கட்டுப்பாடு வேண்டும். வாழ்வு!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்கள் மனதில் ஒரு இனம்புரியாத பயம் இருக்கும், மனம் பதட்டமான நிலையில் இருக்கும். அலுவலகத்தில் இன்று அமைதியாக பொழுதைசெலவிடுவீர்கள். உங்கள் வழக்கமான வேலையில் பாதிப்பு இருக்காது. புதிய முயற்சி சாதகமான பலன் அளிக்காது. செல்வ நிலையில் கவனம் வேண்டும், செலவு அதிகமாகும் சூழல் உள்ளது.

வீட்டில் உள்ளவர்களின் அன்பு மனதிற்குப் பலமாக அமையும், கணவன் மனைவி உறவில் புரிதல் இருக்கும். காதல் வாழ்வில் சந்தேகம் பதட்டமான தருணத்தை உருவாக்கும். உடலில் உஷ்ணம் சார்ந்த பிரச்சனை வரும். பயம்! 

அதிர்ஷ்ட நிறம்:  நீலம்

அதிர்ஷ்ட எண்:4

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்