Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: அமைதியாக இருந்தால் சாதகம்… ஆனால் மிதுன ராசி? 22.08.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 21, 2022 & 12:00 [IST]
Nalaya Rasi Palan: அமைதியாக இருந்தால் சாதகம்… ஆனால் மிதுன ராசி? 22.08.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி 6 ஆம் நாள் திங்கட்கிழமை (22.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 06:15- 07:15 வரை

மாலை: 04:45- 05:45  வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

உங்களின் வழக்கமான நாளிலிருந்து இன்று மாறுபட்டு இருக்கும், ஆன்மீக ஸ்தலம் போக விரும்பீர்கள். குடும்பத்தில் அக்கறை அதிகமாகும். தொழிலில் கவனம் குறையும். வியாபாரம் வழக்கம் போல தான் இருக்கும். நிதி நிலை சிறப்பாக உள்ளது. 

வீட்டில் அதிக நேரம் செலவிடுவீர்கள், குழந்தைகளின் வாழ்வில் அக்கறை பிறக்கும். மாணவர்கள் கல்வி ஆர்வம் காட்டுவர். காதல் வாழ்க்கை இனிமையாக நகரும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை, ஓய்வு தேவைப்படும். சாந்தம்!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்பமான மன நிலைக்கு சொந்தக்காரரான உங்களுக்கு இன்றைய தினம் பல நாள் யோசனை நடைமுறையாக மாற்றலாம் என்ற எண்ணம் தோன்றும். அலுவலகத்தில் சக பணியாளர் ஒத்துழைப்புடன் உழைப்பீர்கள். வியாபாரத்தில் பெரிய லாபம் இருக்காது, நிலையான பணப் புழக்கம் கையில் இருக்கும்.

குடும்ப வாழ்க்கையில் பொறுமையாக இருக்க முயற்சி செய்வீர்கள்.  காதல் வாழ்க்கையில் பிடிவாத குணம் கவலை அளிக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. முயற்சி!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 3

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்கள் மனம் வெற்றி பற்றி எண்ணாமல் அமைதியான வாழ்வை எதிர்பார்க்கும், தனிமையில் நேரம் ஒதுக்க நினைப்பீர்கள். அலுவலகத்தில் வேலைகள் முடியாது, தள்ளி வைப்பீர்கள். வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு. கையிலிருந்து பணம் அதிகமாக செலவாகும்.

இன்பமான மண வாழ்க்கை இருக்கும், வீட்டில் பெரியவர்களின் அறிவுரை மனதில் தெளிவு அளிக்கும்.  தனிமையில்  இருக்க மனம் ஏங்கும். ஆரோக்கியத்தில் உடல் வலி போன்ற பிரச்சனை வந்து மறையும். அமைதி! 

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

உங்கள் ராசிக்கு இன்று வேலைகள் பெரியதாக இருக்காது, வழக்கமான வேலைகளும் சுமுகமாக செயல்படும். பணியிடத்தில் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். சுய தொழில் செய்பவருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும், பண வரவு உண்டு. இன்று கைக்கு வரும் பணம் நிதி தேவைகளை பூர்த்தியாகும்.

இல்லற வாழ்க்கை இனிமையாக நகரும். புதிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். கல்வியில் சிறந்த முன்னேற்றம் இருக்கும்.  நண்பர்களுடன் கவலை மறந்து இருப்பீர்கள். உடல்நலத்தில் திடீரென ஒவ்வாமை பிரச்சனை வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. களிப்பு! 

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

உங்களின் எதிர்பார்ப்பற்ற செயலுக்கு இன்று நல்ல வரவேற்று இருக்கும், மனதை சந்தோஷமாக்கும்.  அலுவலகத்தில் உங்கள் மீது நல்ல மதிப்பு பிறக்கும். சக பணியாளரின் பாராட்டு கிடைக்கும்.  செல்வ நிலையில் சிறிய கவனம் தேவை, ஆடம்பர செலவு இருக்கும்.

குடும்பத்தில் பொறுமையாக இருப்பீர், வீட்டில் சந்தோஷம் அதிகமாகும். இரத்த சொந்தத்தின் மூலம் வளர்ச்சியில் சிறிய தடை ஏற்படும். உடல்நலம் நன்றாக உள்ளது. பெருமை!

அதிர்ஷ்ட நிறம்: மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

இன்று உங்களின் எதிர்ப்பற்ற உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும், அலுவலகத்தில் மேலதிகாரியின் நன்மதிப்பை பெறுவீர். புதிய முயற்சிகள் சாதகமாகும். இன்பமாக இன்றைய நாள் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும், கையில் நல்ல பணப் புழக்கம் இருக்கும்.

குடும்பத்தினரின் ஆசையை நிறைவேற்ற முடியும். உதவி செய்யும் குணம் பிறக்கும். காதல் வாழ்வில் வெற்றி நிச்சியமாகும், திருமண முயற்சி செய்யலாம். சுற்றத்தாரின் நட்பு கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் வேண்டும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (22.08.2022, திங்கட்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்