Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : இன்பமான மனநிலை அருமையான நாள் தான்..... ஆனால் மீன ராசிக்கு 23.02.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 22, 2022 & 14:00 [IST]
Nalaya Rasi Palan : இன்பமான மனநிலை அருமையான நாள் தான்..... ஆனால் மீன ராசிக்கு 23.02.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி மாதம் 7 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (23.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 10:45- 11:45 வரை

மாலை: 07:30- 08:30 வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (23.08.2022, செவ்வாய்க்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இதுவரை எடுத்த முயற்சி எல்லாம் தோல்வியாக முடிந்தது எனக் கவலை கொள்ளும் உங்களுக்கு அனுபவம் வாய்ந்த மனிதரின் ஆதரவு கிடைக்கும். உங்களின் பேச்சாற்றல் இன்று வெளிப்படும், திறமையாக பணியாற்றி நன்மை அடைவீர்கள். பண வரவு இருந்தாலும் செலவில் கவனம் தேவை.

குடும்பத்தில் அன்பாக நடந்து கொள்வீர்கள். இரத்த சொந்தத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும். தந்தை வழி பிரச்சனைகள் தீரும். எதிர்பாராத மனிதரின் மூலம் உங்களுக்கு பெருமை கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும், திடீரென அசௌகரியமான நிலை ஏற்படும். நன்மை! 

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

தெளிவாக வெற்றி கிடைக்கும் வரை போராடும் குணம் கொண்ட விருச்சிக ராசிக்காரரே இன்றைய தினம் உங்களுக்கு சவாலான சூழல் அதிகமாக இருக்கும். உங்களின் உறுதியான மனநிலை இன்று அதில் வெற்றி கொள்ளும். பணியிடத்தில் திறமையாக பணியாற்றுவீர்கள். 

வீட்டில் அனைவரிடம் இனிமையாக நடந்து கொள்ளுவீர்கள், திருமண வாழ்க்கையில் வெளிப்படையான பேச்சு நல்லுறவை அளிக்கும். ஆரோக்கியத்தில் செரிமான பிரச்சனை ஏற்படும், உணவு பழக்கத்தில் கவனம் தேவை. வெற்றி! 

அதிர்ஷ்ட நிறம்:  காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

புதிய விஷங்கள் தெரிந்து கொள்ள அதிக ஆர்வமாக இருக்கும் உங்களுக்கு இன்று தொழிலில் கிடைக்கும்  வெற்றி அனைவரிடமும் உங்களை பிரபலமாக்கும். வியாபாரத்தில் வெற்றி பெற சில முயற்சிகள் எடுப்பீர்கள். கணிசமான பண வரவு இருக்கும். 

திருமண வாழ்க்கையில் நட்பான அணுகுமுறை இன்பம் அளிக்கும். காதல் வாழ்வில் பொறுமையாக இருப்பது மிகமிக அவசியமாகும், முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியதாக இருக்கும். உடல்நலம் நன்றாக உள்ளது. புகழ்! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

கடுமையான உழைப்பாளியான உங்களுக்கு இன்றைய தினம் சிறந்த நாளாக இருக்கும், தொழிலில் இன்பமான முடிவுகள் கிடைக்கும். பல நாள் உழைப்புக்கு ஏற்ற வெகுமதி இன்று கிடைக்கும், மனம் ஆனந்தமாகும். 

வீட்டில் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர். கணவன் மனைவி உறவில் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் மனதைப் புரிந்து நடந்து கொள்ளுவீர்கள். மகிழ்ச்சியான மனநிலை நலமான உடல்நலத்தை அளிக்கும். பெருமை! 

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்:  1

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

நல்ல பலன் அளிக்கும் என நினைத்து நீங்கள் செய்யும் காரியம் இன்று  எதிர்பார்த்த பலன் அளிக்க தாமதம் ஆகும். பணியிடத்தில் வேலைச் சுமை அதிகமாகும், பொறுப்புகள் கூடும். மனதில் இருக்கும் குழப்பம் வியாபாரத்தில் சரியான முடிவு எடுப்பதில் தடுமாற்றம் கொள்ளும், பணப் புழக்கம் குறையும், நிதி நெருக்கடி ஏற்படும். 

குடும்பத்தில் இன்று பொறுமை காப்பது நன்மை அளிக்கும், வேலைச் சுமை வீட்டில் நிம்மதியான சூழலைப் பாதிக்கும். காதல் வாழ்க்கையில் அதிகமான ஊடல் உதிக்கும். ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சனை இல்லை. பகை! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

உங்கள் உடல்நலத்தில் இருக்கும் சோர்வு வழக்கமான வேலையிலும் தாமதம் அளிக்கும். அலுவலகத்தில் உங்கள் பணி கொஞ்சம் மெதுவாக நடக்கும். தொழிலில் புதுமையான முயற்சி செய்ய வேண்டாம். பணப் புழக்கம் ஏற்ற தாழ்வுடன் இருக்கும்.

குடும்ப வாழ்க்கையில் சிறிய ஊடல் வந்து மறையும், கணவன் மனைவி உறவில் ஒரளவு நிம்மதி இருக்கும். காதல் வாழ்வில் வெளிப்படையான பேச்சு நட்பான சூழலை அளிக்கும். உடல் சோர்வாக இருக்கும். ஓய்வு!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் 

அதிர்ஷ்ட எண்: 2

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்