Nalaya Rasi Palan
சுபகிருது வருடம் ஆவணி மாதம் 7 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (23.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது,
நல்ல நேரம்
காலை: 10:45- 11:45 வரை
மாலை: 07:30- 08:30 வரை
மேஷம் (Mesham Nalaya Rasi Palan)
இன்றைய தினம் உங்கள் மனதிலிருந்த கவலைகள் நீங்கி சுமுகமான நாளாக மாறும், திறமையான பணியாற்றல் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றமாக இருக்கும். பண விஷயத்தில் எதிர்பாராத வளர்ச்சி இருக்கும், சேமிக்க முயற்சி செய்யலாம்.
குடும்பத்தில் நல்ல தருணமாக இருக்கும், கணவன் மனைவி உறவில் இன்றைய தினம் சந்தோஷமாக இருக்கும். மாணவர்களின் கல்வி முன்னேற்றம் இருக்கும். உடல்நலத்தில் முன்னேற்றம் இருக்கும். வளர்ச்சி!
அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்
அதிர்ஷ்ட எண்: 5
ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)
உங்களின் திடமான திட்டத்தில் ஏற்படும் தடுமாற்றம் உங்களுக்கு சிறிய பதற்றம் இருக்கும். தொழிலில் அதிக நேரம் செலவிட வேண்டும், பணியிடத்தில் குழப்பமான சூழ்நிலை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சிறிய வேண்டுகோள் போல ஆசிரியரின் ஆதரவு கிடைக்கும். பண வரவு இருக்கும், செலவுகள் பெரியதாக இருக்காது.
வீட்டில் அன்பான சூழல்தான் நிலவும். கணவன் மனைவி உறவில் வெளிப்படையான பேச்சு குறையும். ஆரோக்கியத்தில் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும், மருத்துவர் ஆலோசனை தேவைப்படும். அச்சம்!
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு
அதிர்ஷ்ட எண்: 3
மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)
உங்களின் மனதில் இருக்கும் புத்துணர்ச்சி இன்று ஆக்கப்பூர்வமான செயல்கள் செய்யத் தூண்டும்,புதுமையான விஷயத்தைக் கற்க ஆர்வம் எழும்பும். இன்பமான மனநிலை இன்றைய தினம் முழுவதும் இருக்கும். அதிகப்படியான செல்வம் இல்லையென்றாலும் ஓரளவு செல்வ வரவு உண்டு.
குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், தொழிலில் ஏற்படும் மன வருத்தம் வீட்டில் சரியாகும். குடும்பத்தினரின் ஆதரவு மனதில் சந்தோஷம் விதைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆர்வம்!
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5
கடகம் (Kadagam Nalaya Rasi Palan)
உங்கள் மனம் இன்று வருங்கால வாழ்வின் முன்னேற்றத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கும், உங்களின் துணிச்சலான நடவடிக்கை உங்களுக்கு நல்ல வளர்ச்சி அளிக்கும். வேலையில் நீங்கள் வகுத்த திட்டப்படி வாழ்க்கை நகரும். கையில் பணப்புழக்கம் பெரியதாக இருக்காது.
வீட்டில் இன்று உங்களின் வேடிக்கையான பேச்சு அனைவரையும் சந்தோஷமாக்கும், பெற்றோரின் மனதில் நிம்மதி பிறக்கும். நண்பர்களுடன் வெளியே செல்லும் நிலை ஏற்படும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. ஆக்கம்!
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 8
சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)
உங்களின் இன்பமான மனநிலை இன்று அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்ளும், பணியிடத்தில் சக பணியாளரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் நிதானமாக முடிவு எடுப்பீர்கள். பண வரவு உண்டு.
குடும்பத்தில் ஆனந்தம் பிறக்கும், கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவதால் அன்பு அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது, சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அன்பு!
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9
கன்னி (Kanni Nalaya Rasi Palan)
உங்களின் நிதானமான செயலாற்றல் இன்று நல்ல வளர்ச்சி அளிக்கும், அலுவலகத்தில் குறித்த வேளை சீக்கிரம் முடிப்பீர்கள். வியாபாரத்தில் இன்றைய தினம் சிறப்பான நாளாக இருக்கும். சிறப்பான பண வரவு உண்டு.
குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருப்பீர்கள். வாழ்க்கை துணையுடன் சந்தோஷமாக இருப்பீர்கள். சிறப்பான உடல்நலம் உண்டு, தியானம் போன்ற உடற்பயிற்சியில் ஆர்வம் அதிகரிக்கும். ஏற்றம்!
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 7
Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (23.08.2022, செவ்வாய்க்கிழமை)
இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…