Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : கணிசமான பண வரவு அமைதியான மனநிலை தான்... ஆனால் மகர ராசிக்கு? 25.08.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 24, 2022 & 13:50 [IST]
Nalaya Rasi Palan : கணிசமான பண வரவு அமைதியான மனநிலை தான்... ஆனால் மகர ராசிக்கு? 25.08.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி மாதம் ஒன்பதாம் நாள் வியாழக்கிழமை (25.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 12:15- 01:15 வரை

மாலை: 06:30- 7:30  வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (25.08.2022, வியாழன்)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய நாள் உங்களுக்கு மன நிறைவான நாளாக இருக்கும், உங்களின் தொழிலில் சுதந்திரமாக முடிவெடுக்கும் நிலை கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் வேலைக்கு நல்ல மதிப்பு கிடைக்கும். பணப்புழக்கம் உயரும்.

குடும்ப வாழ்க்கை அன்பாக  இருக்கும், குடும்பத்தினரின் அன்பு மழை உங்கள் பக்கம் திரும்பும். கணவன் மனைவி உறவில் நல்லுறவு உருவாகும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. நிறைவு! 

அதிர்ஷ்ட நிறம்:  நீலம்

அதிர்ஷ்ட எண்: 2

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

உங்கள் மனம் ஒருநிலையில் இருக்காது, குழப்பமான மனநிலை அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்ற உதவாது. வியாபாரத்தில் கவனக் குறைவு ஏற்படும்.  பழைய முயற்சிக்கு இன்று அங்கீகாரம் கிடைக்கும். செல்வ நிலை நன்றாக இருக்கும். 

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். குடும்பத்தினரின் உதவி இன்று பலமாக அமையும். கணவன் மனைவி உறவுக்குள் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து செல்வீர்கள். நண்பர்களின் உதவி நன்மை அளிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சலனம்! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை  

அதிர்ஷ்ட எண்: 3

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்கள் தொழிலிலிருந்த தொல்லைகள் படிப்படியாகக் குறையும், வழக்கமான வேலைகள் சிரமமில்லாமல் நடக்கும். வியாபாரத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும், புதிய முயற்சிகள் செய்யும்போது நிதானமாக இருக்க வேண்டும். பணப் பரிவர்த்தனையில் கவனம் வேண்டும்.

காதல் வாழ்வில் பொறுமை மிகமிக அவசியம் ஆகும். இல்லற வாழ்க்கையில் அமைதியின்மை இருக்கும். உறவினர் வீட்டுக்கு செல்லும் முடிவு எடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புகழ்! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அமைதி இன்று உங்களுக்கு கிடைக்கும், அலுவலகத்தில் உடன் வேலை செய்பவரின் உதவி அதிகமாகக் கிடைப்பதால் இன்று உங்களுக்கு வேலைச் சுமை குறைவாகும். புதிய யோசனைகள் பல பிறக்கும். செலவு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும், தேவையற்ற செலவு அதிகமாக இருக்கும்.

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். நட்பு வட்டாரம் மூலம் இன்பம் கிடைக்கும். மாணவர்களின் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும், மகிழ்ச்சியான மனநிலை நிலவும். கவனம்!

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்:  4

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

உங்களுக்கு இதுவரை மனதில் இருந்த தேவையில்லாத எண்ணங்கள் மறைந்து தெளிவான சிந்தனை கிடைக்கும். அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகமாக இருக்கும், ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியதாக இருக்கும்.  செலவு இருக்கும், குடும்ப செலவுகளைக் குறைக்க அதிகம் முயற்சி செய்வீர்கள்.

குடும்பத்தில் வாக்குவாதம் மூலம் சண்டைகள் வளரும்.  காதல் வாழ்வில் நெருக்கம் அதிகமாகும். மாணவர்களின் கல்வி ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியம் மிகவும் நல்ல நிலையில் உள்ளது. போட்டி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்று தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும், உத்தியோகத்தில் சக பணியாளரின் உதவி வேலைச் சுமையை குறைக்கும். உங்கள் தனித்திறமையை பணியில் நிரூபிக்க முடியும். செல்வ நிலை நன்றாக இருக்கிறது, சேமிப்பு செய்து கொள்வது உத்தம். 

திருமண வாழ்வில் நெருக்கம் அதிகரிக்கும்.  குடும்பத்தில் அன்பும் அக்கறையும் அதிகமாகும். வீட்டில் உள்ளவர்களின் நலனைப் பற்றிய சிந்தனை அதிகமாகும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. சிந்தனை!

அதிர்ஷ்ட நிறம்:  நீலம்

அதிர்ஷ்ட எண்: 8

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்