Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan : பிரச்சனையை சமாளிக்கும் உறுதி இந்த ராசிக்கு கண்டிப்பா தேவை... 26.08.2022 ராசிபலன்..!

Manoj Krishnamoorthi August 25, 2022 & 13:50 [IST]
Nalaya Rasi Palan : பிரச்சனையை சமாளிக்கும் உறுதி இந்த ராசிக்கு கண்டிப்பா தேவை... 26.08.2022 ராசிபலன்..! Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 30 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (26.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம் வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 9:45- 10:30  வரை

மாலை: 04:45- 05:45  வரை

Part 1: மேஷம் - கன்னி ராசிபலன் (26.08.2022, வெள்ளிக்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்று கவலைகள் நீங்கும் நாளாக இருக்கும், மனதில் குடிகொண்டுள்ள பிரச்சனையை சமாளிக்க ஆதரவு கிடைக்கும். புதிய நபரின் உதவி பிரச்சனைகளை அகற்றும். புதிய முயற்சிகள் புகழ் தரும்.  தொழிலில் ஆர்வதுடன் பணியாற்றுவீர்கள். புதிய விஷயத்தைக் கற்றுக் கொள்ள ஆர்வம் அதிகரிக்கும். செலவுகள் குறையாது.

குடும்பத்தில் அன்பாக நடந்து கொள்ளுவீர்கள். இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் மனம் ஆனந்தம் கொள்ளும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். ஆர்வம்! 

அதிர்ஷ்ட நிறம்:  சில்வர் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

இன்று ஓய்வு நேரம் அதிகமாக இருப்பதால் குடும்பத்துடன் வெளியே செல்லும் வாய்ப்பு அதிகமாகும். சிலர் புண்ணிய ஸ்தலத்திற்குச் செல்ல நேரிடும். பணியிடத்தில் சக பணியாளரின் உதவி வேலையை சுலபமாக முடிக்க உதவும். நிதி வளர்ச்சி ஓரளவு நன்றாக உள்ளது, ஆனால் செலவை சமாளிக்கும் அளவு இருக்காது.

உங்கள் காதல் வாழ்க்கையில் நெருக்கம் அதிகமாகும், திடீர் இன்ப அதிர்ச்சி இருக்கும். நட்பு வட்டாரம் நன்றாக உள்ளது. உணவு கட்டுப்பாடு அவசியம், குடும்ப வாழ்வில் பிரச்சனைகள் ஏதுவுமின்றி நிம்மதியாகப் போகும். உதவி! 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

மனதில் குடி கொண்டு இருக்கும் தடுமாற்றம் சில எதிர்மறை எண்ணத்தை உருவாக்கும், ஒரு அனுபவம் வாய்ந்த மனிதரின் வாக்கு உற்சாகம் அளிக்கும். அலுவலகத்தில் இன்று உங்களுக்கு மந்தமான நிலை தான் நிலவும். பணப்புழக்கம் சொல்லும்படி இல்லை.

வீட்டில் இயல்பாக பழகுவீர், தந்தை வழியில் இன்பம் பிறக்கும். காதல் வாழ்வில் உங்கள் காதலரின் உதவி மிகவும் அவசியமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கால் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும். ஊக்கம்! 

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

அதிர்ஷ்ட எண்: 2

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்று உடலும் மனமும் ஒருநிலையில் இருக்கும், மனதில் இருக்கும் தெளிவான சிந்தனை உங்களுக்கு அலுவலகத்தில் சிறப்பாக செயல்பட ஒத்துழைக்கும், மேலதிகாரியின் மூலம் வெகுமதி கிடைக்கும். உங்கள் இலக்கை நெருங்குவீர்கள், பண வரவு இருக்கும் கையில் செல்வம்  அதிகரிக்கும். 

குடும்ப வாழ்வு சிறப்பாக உள்ளது, கணவன் மனைவிக்குள் அன்னியோன்னியம் அதிகரிக்கும். நண்பர்களுடன் சந்தோஷமாக பொழுதை செலவிடுவீர், தெளிவான மனநிலை சிறப்பான ஆரோக்கியத்தை அளிக்கும். மகிழ்ச்சி! 

அதிர்ஷ்ட நிறம்: கருநீல நிறம்

அதிர்ஷ்ட எண்:  6

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

தொழிலில் இன்று பெரியதாக வேலைச்சுமை இருக்காது, நீங்கள் முழுமையாக நம்பி செய்யும் செயல்  மிகப்பெரிய மாற்றத்தை அளிக்கும். சில தற்காலிக சங்கடத்தைப் பார்த்து கவலை கொள்ளாமல் உழைப்பது நிச்சியமாக அனுகூலம் ஆகும். பயணத்தின் கவனமாக இருப்பது நல்லது. பணத்தை முதலீடு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும்.

கணவன் மனைவிக்குள் அனுசரணையான உறவு இருக்கும், ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வர். காதல் வாழ்வில் இன்று அதிக நேரம் செலவிட முடியும். மாணவர்களுக்கு பாராட்டு கிடைக்கும், சிறிய வெகுமதி உண்டு. சிறப்பான உடல்நலம் உண்டு. ஓய்வு! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் சாதகமாக இருக்காது, தொழிலில் இருக்கும் நிலை அச்சத்தை அளிக்கும். வியாபாரத்தில் பெரிய வளர்ச்சியும் நஷ்டமும் இல்லாத நிலை தான் இருக்கும். செலவை சமாளிக்கும் அளவு பணம் இருக்கும்.

திருமண வாழ்க்கையில் சண்டைகள் வரும். மாணவ செல்வங்களுக்கு மிக நல்ல தினம்.  பொறுமையாக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.  பயம்! 

அதிர்ஷ்ட நிறம்:  பச்சை

அதிர்ஷ்ட எண்: 1

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்