Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: பண விஷயத்தில் உஷாரா இல்லை என்றால் அவ்வளவு தான்... 26.08.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 25, 2022 & 12:50 [IST]
Nalaya Rasi Palan: பண விஷயத்தில் உஷாரா இல்லை என்றால் அவ்வளவு தான்... 26.08.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆவணி மாதம் 10 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (26.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை: 9:45- 10:30  வரை

மாலை: 04:45- 05:45  வரை

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் தொழிலில் முக்கியமான நாளாக இருக்கும், உங்களின் அவசரம் சில முக்கிய ஆவணங்களை மறக்க செய்யும், சிறிய அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களின் நிதி நிலையில் இன்று கட்டுப்படுத்த முடியாத செலவுகள் இருக்கும்.

 

குடும்ப வாழ்க்கை அமைதி இருக்கும், உங்களின் வேலைச் சுமை வீட்டில் கோபத்தை அளிக்கும். காதல் வாழ்க்கையில் நட்பான அணுகுமுறை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மறதி!

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்  

அதிர்ஷ்ட எண்: 9

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் பல நாள் திட்டத்தில் ஏற்படும் சரிவு கவலை அளிக்கும். உங்களின் அலுவலகத்தில் வேலைகள் இயல்பாக நடக்கும். லட்சியத்தை அடைய முயற்சி செய்யும் உத்வேகம் பிறக்கும். வியாபாரத்தில் கணிசமான வளர்ச்சி இருக்கும், இன்று பணப் புழக்கம் போதுமான அளவு இருக்கும். 

குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும், குடும்பத்தினரின் மனதை ஆனந்தமாக்குவீர். இல்லற வாழ்க்கை அமைதியாக இருக்கும். நண்பர்களிடம் இருந்து கிடைக்க வேண்டிய தகவல் தாமதமாகும். உடல்நலம் நன்றாக உள்ளது. ஏமாற்றம்!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை 

அதிர்ஷ்ட எண்: 3

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

கடினமாக உழைத்தாலும் வாழ்வில் முன்னேற முடியவில்லை என்ற ஏக்கம் தீரும் நேரமாகும். ஆனால் உங்களின் அலட்சியமான நடவடிக்கையால் வாழ்வின் சுவாரஸ்யத்தை இழப்பீர்கள். கனவைத் துரத்தினாலும் வெற்றி அடைய முடியவில்லை என்ற எண்ணம் வருத்தமாக்கும். தொழிலில் வேற்றி கிடைக்கும். வழக்கமான செலவுகள் தான் இருக்கும்.

குடும்பத்தினரின் போக்கு மனதில் வருத்தம் அளிக்கும். வீட்டில் அமைதி இருக்காது. அனுபவம் வாய்ந்த மனிதரின் அறிவுரை கிடைக்கும். மாணவர்களுக்கு  கவன சிதறல் ஏற்படும். ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனம் தேவை. பிரமை! 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 6

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் மிகவும் நிதானமாக இருக்க வேண்டும், பணியில் முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டியதாக இருக்கும். அலுவலகத்தில் முக்கிய பொறுப்பு உருவாகும். வியாபாரத்தில் இன்று எதிர்பார்த்த பணப்புழக்கம் இருக்கும். செலவுகள் பெரியதாக இருக்காது.

குடும்ப வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், பெற்றோரின் மூலம் ஆதாயம் பிறக்கும். காதல் வாழ்வில் உங்களுடைய புத்திசாலி தனமான முடிவு நல்ல பலன் அளிக்கும்.  ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். விவேகம்! 

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 6

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்று புதிய முயற்சிகள் எதிர்பார்த்த பலன் அளிக்காது உங்களின் வழக்கமான வேலைகளில் பிரச்சனை இல்லை, இன்று அலுவலகத்தில் கொஞ்சம் வேலைச்சுமை அதிகமாகும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி நிலையில் கவனம் தேவை, பணப் பற்றாக்குறை இருக்கும். 

குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட நினைப்பீர். காதல் வாழ்க்கையில் உணர்ச்சிவசம் கருத்து மோதலை உருவாக்கும்.  கணவன் மனைவி உறவில் வருங்காலம் சார்ந்த சிந்தனை அதிகமாக இருக்கும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை, ஓய்வு தேவைப்படும். அமைதி!

அதிர்ஷ்ட நிறம்:  கருப்பு 

அதிர்ஷ்ட எண்: 9

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்களின் அமைதியான மனநிலையில் மற்றவர்களின் குறுக்கீடு சில தடுமாற்றம் அளிக்கும், உங்கள் தொழிலில் நிதானம் மிகமிக அவசியமாகும். உத்தியோகத்தில் பெரிய வளர்ச்சி இருக்காது. பண விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். 

திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். வீட்டில் பெரியவர்களுடன் நேரம் ஒதுக்குவீர். புதிய மனிதரின் சந்திப்பு கிடைக்கும், குழப்பமான மனதை தெளிவுபடுத்தும் ஆலோசனை கிடைக்கும். உடல்நலம் நன்றாக உள்ளது. மாணவர்கள் படிப்பில் குறை இருக்காது. குழப்பம்! 

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4

Part 2: துலாம் - மீனம் ராசிபலன் (26.08.2022, வெள்ளிக்கிழமை)

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்