Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: பொறுமையாக இருந்த இந்த ராசிக்கு இன்று நன்மை…. ஆகஸ்ட் 5, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi August 04, 2022 & 14:00 [IST]
Nalaya Rasi Palan: பொறுமையாக இருந்த இந்த ராசிக்கு இன்று நன்மை…. ஆகஸ்ட் 5, 2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஆடி மாதம் 20 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (05.08.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா….? இந்த பதிவில் துலாம்- மீனம்  வரை 6 ராசியின் பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

நல்ல நேரம்

காலை:  9:15- 10:15 வரை

மாலை:   4:45- 5:45 வரை

 

Part 1: மேஷம்- கன்னி ராசிபலன் (5.08.2022, வெள்ளிக்கிழமை)

துலாம் (Thulam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் கிடைக்கும் நிம்மதி உங்களை உற்சாகமாக செயல்பட தூண்டும், தொழிலில் வழக்கமான வேலைகள் சற்று சலிப்பு அளிக்கும். வியாபாரம் சுமுகமாக நடக்கும், நிதி வளர்ச்சி  இயல்பாக இருக்கும். 

வீட்டில் அமைதி இருக்கும், கணவன் மனைவி உறவு பிரச்சனை இல்லாமல் நிம்மதியாக நகரும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. உடல்நலம் நன்றாக உள்ளது. அமைதி!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 4

விருச்சிகம் (Viruchigam Nalaya Rasi Palan)

உங்களுக்கு இன்று அதிகமான பணத்தை இழப்பதற்கான வாய்ப்பு உள்ளது, பண பரிவர்த்தனையில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உங்கள் சக பணியாளரிடம் மோதல் ஏற்படும்.  வியாபாரத்தில் இன்று யாரையும் நம்பி கடன் தர வேண்டாம்.

குடும்ப வாழ்க்கையில் பேச்சால் புதிய பிரச்சனை உருவாக்கிவிடுவீர். கணவன் மனைவி உறவில் கருத்து வேறுபாடு உருவாகும். நண்பர்களின் மூலம் பிரச்சனையை சமாளிக்க முடியும். ஆரோக்கியத்தில் கால் சம்பந்தப்பட்ட பிரச்சனை அதிகமாகும். கவனம்! 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 9

தனுசு (Dhanusu Nalaya Rasi Palan)

உங்கள் மனம் எதிர்பார்க்கும் மாற்றம் கிடைப்பதால் இன்றைய தினம் சுமுகமாக இருக்கும், பணிகள் இயல்பாக இருக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு இன்றைய தினம் நல்ல லாபம் கிடைக்கும். செல்வ நிலை நன்றாக உள்ளது, எதிர்கால சேமிப்பு இருக்கும். 

வீட்டில் அனைவருடன் சகஜமாக பழகுவீர்கள், நட்பான அணுகுமுறை வீட்டில் இன்று அதிகமாக இருக்கும். கல்வி ஸ்தானம் நல்ல வளர்ச்சி கொள்ளும். சிறப்பான ஆரோக்கியம் வேண்டும். நிம்மதி!

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 5

மகரம் (Magaram Nalaya Rasi Palan)

இன்றைய தினம் கிடைக்கும் அறிவுரை தொழிலில் வளர்ச்சி காண தூண்டும். வியாபாரம் இன்று அமோகமாக நடக்கும். செல்வ நிலையில் திருப்திகரமான பண வரவு இருக்கும்.  ஆன்மீக நாட்டம் இருக்கும், இறைப்பணியில் கலந்து கொள்ளுவீர்கள்.

குடும்பத்துடன் அதிக நேரம் ஒதுக்க முடியும், கணவன் மனைவி உறவு அமைதியாக நகரும்.  காதல் வாழ்க்கையில் நல்ல புரிதல் இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பக்தி!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1

கும்பம் ( Kumbam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் உங்களுக்கு கிடைக்கும் ஒத்துழைப்பு பல நாட்களாக எதிர்பார்த்த செயலை முடிக்க தூண்டும். தொழில் ஸ்தானம் சிறப்பாக உள்ளது. சக பணியாளரின் ஒத்துழைப்பு உங்களுக்கு மிகவும் உதவிக்கரமாக அமையும்.  வருமானத்தை உயர்த்த இன்று அருமையான நாளாகும். 

கணவன் மனைவி உறவில் இன்று அதிகமாக உரையாடல் இருக்கும், வருங்காலம் சார்ந்த திட்டங்கள் இருக்கும். காதல் வாழ்க்கை அன்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறிய அக்கறை காட்ட வேண்டும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

மீனம் (Meenam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் பொறுமையாக இருப்பதால் நன்மைகள் நடக்கும், தொழிலில் புதிய முயற்சிகள் செய்ய வேண்டாம். இன்று செல்வத்தைக் கவனமாக செலவழிக்க வேண்டும், அதிகமான செலவுகள் வரும். கல்வி ஸ்தானம் சுமுகமாக உள்ளது.

குடும்பத்தில் அமைதி இருக்கும், கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து போக வேண்டும். காதல் வாழ்க்கையில் பேச்சு பிரச்சனை அளிக்கும். ஆரோக்கியத்தில் கால் சம்பந்தப்பட்ட தொல்லைகள் வரும். பொறுமை!  

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 4

இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்